07/15/22

  • 2108 மாணவ மாணவிகள் பங்கேற்கும் மாபெரும் சதுரங்க விளையாட்டின் முன்னேற்பாடு-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு




44-ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் உலக சாதனை நிகழ்த்தும் விதமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் 2,108 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் மாபெரும் சதுரங்க விளையாட்டுப் பாடம் நிகழ்ச்சி நாளை (16.07.2022) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.


இந்நிழ்ச்சிக்கான முன்னேற்பாடுப் பணிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இன்று (15.07.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர் ர.பாலமுரளி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கி.பிரதீப்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


திருச்சிராப்பள்ளி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நாளை (16.07.2022) காலை 8 மணிக்கு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் 2108 மாணவ, மாணவிகள் பங்கேற்கும் சதுரங்க விளையாட்டுப் பாடம் நிகழ்ச்சி தொடங்குகிறது.


இந்நிகழ்வில் பிரபலமான பாரா ஒலிம்பிக் செஸ் வீராங்கனை கா.ஜெனித்தா ஆண்டோ வாயிலாக, செஸ் விளையாட்டிற்கான பாடம் கற்பிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் செஸ்செட் வழங்கப்பட்டு சதுரங்க விளையாட்டுப் போட்டி நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உலக சாதனை நிறுவனங்களின் ஆய்வாளர்கள் இந்த ஆய்வுகளை மேற்கொள்வதன் அடிப்படையில் உலக சாதனை சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இனாம்குளத்தூர் பகுதியில் இஸ்லாமிய பெருமக்களின் தொழுகைக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள உம்மு ஸாதிக் பள்ளிவாசல் திறப்பு விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் 






இந்நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, அப்துல்சமது, ஆளூர் ஷாநவாஸ், மாநகர மேயர் அன்பழகன் 29 வார்டு மாமன்ற உறுப்பினர் கமால் முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 திருச்சி மாநகராட்சி

அனைத்து வார்டுகள் களிலும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் தொந்தரவுக்கு உட்பட்டு வருகிறார்கள். மாநகராட்சி உடனடியாகநடவடிக்கை எடுக்க  பொதுமக்கள் கோரிக்கை.








நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

கர்மவீரர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி ஸ்டாலின்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன்  மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்




நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் (இன்று), தமிழ்நாடு அரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படவுள்ளதையொட்டி, நேற்று சென்னை காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் கே நவாஸ்கனி பங்கேற்று உரையாற்றினார் 





இந்நிகழ்வில் நெடுஞ்சாலைகள் துறை அரசு முதன்மைச் செயலாளர்  பிரதீப் யாதவ்,ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை.,இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளருமான காதர்பாட்சா,முத்துராமலிங்கம்,  பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சே.முருகேசன் மற்றும் அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 இன்று 14-07 - 2022 மதியம் 1.30 மணியளவில் புது கோட்டை மாவட்டம் கைனாங்கரை மாத்தூர் பகுதியில் பாவா பள்ளிவாசல் & மதரஸா (முஸ்லிம் சுன்னத் ஜமாஅத்) நிர்வாகிகள் கூட்டம் திருச்சி மாவட்ட  வஃக்பு வாரிய அதிகாரிகள் முன்னிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  தேசிய தலைவர்  பேராசிரியர் K.M.காதர் மொகிதீன் M.A.Ex.M.P அவர்களின் தலைமையில் நடைபெற்றது.




பாவா பள்ளி இமாம் அவர்கள் கிராஅத் ஓதி  கூட்டத்தை துவங்கி வைத்தார். மேற்கு தொகுதி அமைப்பாளர் K.M.S.அப்துல் கபூர் வரவேற்புரை நிகழ்த்தினார். திருச்சி மாவட்ட  செயலாளர் K.M.K.ஹபிபுர் ரஹ்மான் கருத்துரை வழங்கினார்.


மேலும் திருச்சி மாவட்ட துணைத் தலைவர்  S.A.H உமர் பாரூக் ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை வழங்கினார்.வஃக்பு வாரிய கண்காணிப்பாளர் ஷெரீப் அஹமது மற்றும் வஃக்பு வாரிய ஆய்வாளர் ஜெயினுலாபுதீன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.

பள்ளியின் முத்தவல்லியாக பேராசிரியர் K.M.காதர் மொகிதீன் அவர்களும், தலைவர் K.M.B.அப்துல் ஜலீல்,துணைத் தலைவர்களாக K.M.B.முகம்மது இக்பால், K.M.B.முகம்மது இப்ராகிம்,


செயலாளர் K.M.K.ஹபீபுர் ரஹ்மான், துணை செயலாளர்களாக மெளலான முகம்மது மீரான் மிஸ்பாஹி ஹஜ்ரத் மற்றும் K.M.B.ரியாஸ் அகமது, பொருளாளராக  B.M.ஹீமாயூன் ,

செயற்குழு உறுப்பினர்களாக K.M.S அப்துல் கதர், A.M.H.அன்சர் அலி,G.H சையத் முஹம்மது ஹக்கிம். A.பையாஸ் அகமது, A.இஜாஸ் அகமது, A. நஃபிஸ் அகமது, I .தெளஃபிக் அகமது, M. அப்துல் ரசீது, முஃப்தி S.A.H.ஆர் பாரூக் மழாஹிரி,M. உபைதுல்லா, N.ஜாகீர் உசேன், முகம்மது தெளசிப், அஷ்ரப் அலி, முஹம்மது ஹாலித் ஆகியோரும்,

சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் M.K ஜாகிர் உசேன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி