07/20/22

 

சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள ராஜமன்னார் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிந்தது தகவல் அறிந்ததும் சிறிது நேரத்தில் மின் பணியாளர்கள் வந்து உடனடியாக சரி செய்தனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது மின் பொறியாளர்களின் உடனடி நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இதனால் பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர் .சற்று தாமதம் ஆகி இருந்தாலும் அந்த பகுதி முழுவதும் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பாக இருந்திருக்கும் ஆனால் மின் ஊழியர்களின்  நடவடிக்கையால் உடனடியாக சரி செய்யப்பட்டது மக்கள் மத்தியில் மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


தகவல்: நமது நிருபர். ஷேக் அப்துல்லா.சென்னை

ஸ்ரீரங்கம் அருகே வெள்ளப்பெருக்கால் காவிரி ஆற்றில் இடிந்து விழுந்த தடுப்பு சுவர்

ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரியார் தோப்பு கிழக்கு பகுதி காவிரி அற்றில் 2010 ஆம் ஆண்டு நபார்டு நிதி உதவியின் கீழ் கட்டப்பட்ட "தடுப்பு சுவர் அறை" 1  அடி அகல 50' அடி நீளம் இன்று [ ஜுலை-20 ] அதிகாலை இடிந்து விழுந்தது. அங்கு ஏனைய தடுப்பு சுவர் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் தகுந்த நடிவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.



ஸ்ரீரங்கம் அகிலாண்டேஸ்வரி நகர் பின்புறம் உள்ள காவிரி கரை ஒட்டிய சுமார் 50அடி நீளமுள்ள தடுப்பு சுவர் கரைந்து விழுந்து , மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் , மாநகராட்சி உதவி ஆணையர், காவல்துறை உதவி ஆணையர், பொதுப்பணித்துறை பொறியாளர் பார்வையிட்டனர்.

 வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர், மேலூர் கிராம நிர்வாக அலுவலர் உடனிந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

திருச்சியில் நாளை (21.07.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெரும் செம்பட்டு சாத்தனூர் மின் பாதைகளில் நாளை (21.07.2022) பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டியிருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது


இதில் தங்கையாநகர், அன்பில் தர்மலிங்கம் நகர், முல்லை நகர், வசந்தம் நகர், குறிஞ்சி நகர், தென்றல் நகர், உடையான்பட்டி ரோடு, கல்யாணசுந்தரம் நகர், குளவாய்ப்பட்டி, காமராஜ் நகர், திருவளர்ச்சிபட்டி, காவிரி நகர், குடித்தெரு, தங்கையநகர், கே.சாத்தனூர், செட்டியபட்டி, பாரிநகர், டோபிகாலனி, ஓலையூர், EB காலனி, காருண்யாநகர், வயர்லெஸ் ரோடு, 



மன்னைநாராயணசாமி, அங்காளம்மன் தெரு, பசுமை நகர், சேலத்தார் நகர், VMPT நகர், செம்பட்டு, பயோநீர் இன்ஜினியரிங், சண்முகம் Tannery, மன்னைநாராயண தெரு, SBIOA பள்ளி, மொராய்சிட்டி, அய்மான் கல்லூரி, கலிங்கநகர், படுகை, அன்பிலார் நகர், வடுகப்பட்டி, கவி பாரதி நகர்,




எம்ஜிஆர் நகர், இச்சிகாமாளப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 திருச்சியில் பாம்பே சர்க்கஸ் 

19/07/22..அன்று முதல்...
இடம்:ஜி கார்னர் பொன்மலை
1PM,  4PM, 7PM காட்சிகளாக நடைபெறுகிறது


அனைவரும் சென்று பார்த்து, சர்க்கஸ் கலைக்கு ஆதரவு அளிப்போம்..கொரேணா ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்...



நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி


சென்னை தலைமை செயலகத்தில் மேற்கு ஆஸ்திரேலிய கல்வித்துறை அமைச்சர் டெம்பில்மன் அவர்களும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் சந்தித்து கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்கள்

கல்வி முன்னேற்றத்திற்காக இருவரும் இணைந்து செயல்படுவது குறித்தும், மேற்கு ஆஸ்திரேலியாவின் இந்திய அலுவலகத்தை சென்னையில்  தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.





இந்நிகழ்வில் நஷித் சவுத்ரி (வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையர், மேற்கு ஆஸ்திரேலியா அரசு),சாமுவேல் மியர்ஸ், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா இ.ஆ.ப., ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி