07/30/22

அண்ணா அறிவாலயத்திற்கு

சித்தராமையா வருகை

மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.


அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வரவேற்றார்.

திருச்சியில் கோவாக்சின் தடுப்பூசி இலவசம்

  
கொரோனா தொற்று நாளைக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில வழிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக காவேரி மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது.

தற்பொழுது காவேரி தென்னூர் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி முற்றிலும் இலவசமாக போடப்படுகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம்.

ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய இந்த இலவச தடுப்பூசி அடுத்த மாதம் ஆகஸ்டு 9ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு 73738730809 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

'இந்தியா - 75' கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை



கேரள மாநிலம் திருச்சூரில், மலையாள மனோரமா நியூஸ் சார்பில் நடைபெற்ற 'இந்தியா - 75' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

ஒரு கிலோமீட்டர் தூரம் பிரேக் பிடிக்காமல் வந்த அரசு டவுன் பஸ், எம்ஜிஆர் ரவுண்டானாவில் மோதியது.

பதட்டம் பயணிகள் ஓட்டம்






திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்றTN 45 N 3534 என்ற அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாடு இழந்து எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவில் மோதி நின்றது. பதட்டத்தில் பயணிகள் இறங்கி ஓடியும் முன்னே அமர்ந்திருந்த பெண் பயணிகள் ஐந்து பேருக்கு சிறு காயமும் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை பகுதியில் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


திருச்சி முத்தரையர் சிலையிலிருந்து பிரேக் பிடிக்கவில்லை என ஓட்டுனர் சகாய சவுரிமுத்து கூச்சலிட்டதால் பயணிகள் பதட்டம் அடைந்தனர் .ஒரு கிலோ மீட்டர் தூரம் சாதுரியமாக யார் மீதும் மோதாமல் பேருந்தை ஒட்டி வந்து எம்ஜிஆர் ரவுண்டானவில் மோதி நிறுத்தினார்.போக்குவரத்து காவல்துறையினர் வாகன நெரிசலை சீர்செய்து வருகின்றனர்.

 நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி


திருவெறும்பூர் தொகுதி, செந்தண்ணீர்ப்புரத்தில் புதிய பேருந்து நிறுத்தத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தனது திருவெறும்பூர் தொகுதி, செந்தண்ணீர்ப்புரம் மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.12 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தினை திறந்து வைத்தார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி





இந்நிகழ்வில் துணை மேயர்.திவ்யா,மண்டல தலைவர் மு.மதிவாணன், பகுதி செயலாளர்கள் ஓ. நீலமேகம், இ.எம்.தர்மராஜ், TPSS.ராஜ்முகமது,மோகன், G.மணிவேல், வட்ட செயலாளர் ரெங்கநாதன் ஆகியோரும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

புளியங்கடை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பழுது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று  ஆய்வு

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிகுட்பட்ட புளியங்கடை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பழுதடைந்துள்ளதாக இன்று (30/07/2022)  காலை பத்திரிகைகளில் செய்தி வந்தது. செய்தியை படித்த உடனே  புளியங்கடை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு  நேரில் சென்று  ஆய்வு மேற்கொண்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. பள்ளியை பார்வையிட்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஊர் மக்களிடம் உறுதி அளித்தார்.


மேலும்,ஏற்காடு தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்.சித்ரா அவர்களை தொடர்புகொண்டு பள்ளி சீரமைப்பு பற்றி விவாதித்தார்,மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் ‘புதிய கட்டிடம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கையை உடனே செய்யுமாறும், துறை ரீதியான உதவிகளை செய்வதற்கு காத்திருப்பதாகவும்’ உறுதியளித்தார் 


முதல்வர் அவர்களின் வழியில்,ஆரோக்கியமான விமர்சனங்களுக்கும், நியாயமான கோரிக்கைகளுக்கும் எப்போதும் முன்னுரிமை கொடுப்போம்! அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிப்போம்.



இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி   கூறினார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

இரண்டாம் கட்ட மெட்ரோ பணி - ஜும்ஆ பள்ளிக்கு  பாதிப்பு - வக்பு வாரியத்தலைர் எம்.அப்துல் ரஹ்மான் நேரில் ஆய்வு





இரண்டாம் கட்ட மெட்ரோ பணியால் மயிலாப்பூர் கச்சேரி ரோடு ஜும்ஆ பள்ளிக்கு  பாதிப்பு தமிழ்நாடு வக்பு வாரியத்தலைர் எம்.அப்துல் ரஹ்மான் Ex.எம்பி  நேரில் ஆய்வு

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டப்பணிகள் ரூ. 61,843 கோடி மதிப்பில் 118.9 கீ.மி தூரத்திற்கு நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 26.1 கி.மீ தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ தொலைவுக்கும், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது.

இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை உள்ள  வழித்தடத்தில் மயிலாப்பூரில் 3 அடுக்குகளில் மெட்ரோ ரயில் நிலையம் அமையவிருப்பதாக கடந்த மே மாதம் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

மெட்ரோ ரயில் நான்காம் வழித்தடத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், வடபழனி வெங்கீஸ்வரர் கோவில், வடபழனி அழகர் பெருமாள் கோவில், விருகம்பாக்கம் சுந்தரவரதராஜ பெருமாள் கோவில், வளசரவாக்கம் வேல்வீஸ்வரர் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய புராதன கோவில் கட்டிடங்களும், 

சாந்தோம் தேவாலயம், ரோசரி தேவாலயம் உள்ளிட்ட மூன்று தேவாலயங்கள், 350 வருட பழமை வாய்ந்த கச்சேரி ரோடு ஜும்ஆ மஸ்ஜித் உள்ளிட்ட பழம்பெருமை மிக்க புராதான கட்டிடங்கள் அமைந்துள்ளது. 

இதில் அமைந்துள்ள தேவாலயங்கள், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களுக்கு பாதிப்புகள் இல்லை என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. 

இந்நிலையில் 350 வருட பாரம்பரியமிக்க கச்சேரி ரோடு ஜும்ஆ மஸ்ஜிதின் ஒரு பகுதி மெட்ரோ நான்காம் வழித்தடத்தில் பாதிப்படைவதாக அப்பள்ளியின் நிர்வாகிகள், மற்றும் ஜமாத்தார்கள் தமிழ்நாடு வக்பு வாரியத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் Ex.எம்பி அவர்களை நேரில் சந்தித்து மெட்ரோ பணிகளால் வக்பு பள்ளிக்கு ஏற்படும் இழப்பு குறித்தும், அதிலிருந்து கச்சேரி ரோடு பள்ளியை மீட்கக்கோரியும்  வாரியத்தலைவரிடம் மனு அளித்திருந்தனர்.

தமிழ்நாடு வக்பு வாரியத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான், வாரிய உறுப்பினர்கள், முதன்மை செயல் அலுவலர் ரபியுல்லா உள்ளிட்டோரின் கலந்தாலோசனையில் கடந்த 27 அன்று நடைபெற்ற  வாரியக்கூட்டத்தில் மெட்ரோ அலுவலக அதிகாரிகள், கச்சேரி ரோடு ஜும்ஆ  பள்ளிவாசல் நிர்வாகிகள், வக்பு வாரிய அதிகாரிகள் ஆகியோரை விசாரித்து மெட்ரோ நிலம் எடுப்பில் இருந்து வக்பு சொத்தை மீட்க விசாரணை நடைபெற்றது. 

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் Ex.எம்பி தலைமையில் வாரிய உறுப்பினர்கள் ஆளுர் ஷாநவாஸ் எம்எல்ஏ, டாக்டர் ஹாஜா கே மஜீத் ஆகியோரை கொண்ட 3 பேர் கமிட்டி அமைக்கப்பட்டது. 

அதனடிப்படையில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் Ex.எம்பி, ஆளுர் ஷாநவாஸ் எம்எல்ஏ ஆகியோர் 29.07.2022 மாலை 5 மணியளில் மெட்ரோ அதிகாரிகளால் கையகப்படுத்தப்படும் இடம் என தெரிவிக்கப்பட்ட இடங்கள், மஸ்ஜித் இடம் இல்லாமல் வேறு இடங்களை பயன்படுத்துவதற்கு சாத்தியக்கூறுள்ள இடங்கள் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார்கள். 

கூடியிருந்த ஜமாத்தார்களும், பள்ளிவாசல் நிர்வாகிகளும் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் பணியினை பாராட்டி வக்பை மீட்க உதவி செய்யவேண்டுகோள் விடுத்தனர். கச்சேரி ரோடு ஜும்ஆ பள்ளியின் இடத்தை மீட்க தமிழ்நாடு வக்பு வாரியம் முழு வீச்சில் செயல்படும் என தெரிவித்த வாரியத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான்  Ex.எம்பி,  பள்ளிவாசல் இடத்தை மீட்பதில் அரசின் கவனத்துக்கு உடனடியாக இப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டு அனைத்து இடர்களும் கலைய முயற்சி செய்யப்படும் என்றார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக விண்ணப்ப பதிவு

திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல் 


திருச்சிராப்பள்ளி துவாக்குடிமலை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முழுநேரம் மற்றும் பகுதிநேரம் முதலாமாண்டு சேர்க்கைக்கான 2022-2023-ஆம் கல்வி ஆண்டில் நீட்டிக்கப்பட்ட சேர்க்கைக்கு கீழ்கண்ட பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவிகள் கல்லூரியில் நேரடியாக விண்ணப்ப பதிவு செய்து பயன்பெறலாம். 

முதல் சுழற்சி (காலை 8 மணி முதல் மாலை 3.30 மணி வரை) பாடப்பிரிவுகள்: சிவில்சிவில் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலட்ரானிகஸ் / கம்ப்யூட்டர் மற்றும் சுகர் டெக்னாலஜி பயிலவும், இரண்டாம் சுழற்சி (காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை) பாடப்பிரிவுகள் : சிவில் (தமிழ் வழி) / மெக்கானிக்கல் (தமிழ் வழி) / எலக்ட்ரிக்கல் / எலட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவுகளில் பயிலவும்,

மேலும் பகுதி நேர பாடப்பிரிவுகளில் சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பயில இருபாலருக்கும் தனித்தனியாக விடுதி வசதிகளும் உள்ளது. விண்ணப்பக் கட்டணம் : 150/- செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இலவசம்.

முழுநேர பட்டயப் படிப்புக்கு கல்லூரிக் கட்டணம் வருடத்திற்கு ரூ.2,112/- மட்டுமே. தமழக அரசின் இலவச பேருந்து பயண அட்டை / கல்வி உதவித் தொகை போன்ற சலுகைகளை மாணவர்கள் பெறலாம். மேலே குறிப்பிட்டுள்ள பாடப் பிரிவுகளில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களின் இனசுழற்சி அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும்.

மேலும் விபரங்ளுக்கு 0431-2552226 மற்றும் 98438 63477 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கல்வி பயில விருப்பமுடைய மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

சமூக, அரசியல், பொருளாதார மற்றும் மதரீதியாக இந்தியாவில் முஸ்லிம்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

 மக்களவையில் கே.நவாஸ்கனி எம்.பி. கேள்வி


புதுடெல்லி, ஜூலை. 29-

இந்தியாவில் முஸ்லிம் கள் சந்தித்து வரும் பிரச் சினைகளுக்கு தீர்வுகாண ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ் கனி மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த கேள்விகளின் (நட்சத் திர குறியிடப்படாத கேள்வி எண். 723) விவரம் வருமாறு:-

சிறுபான்மை விவகாரங் கள் அமைச்சர் பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா?

(அ) சமூக, அரசியல், பொருளாதார மற்றும் மத அடிப்படையில் இந்திய முஸ்லிம்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை கையாள பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்பதை ஒன்றிய அரசு ஒப்புக்கொள்கிறதா?

(ஆ) அப்படியானால் இந்த சமுதாயத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு ஆய்வு செய்வதற்காக ஒன்றிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் மற்றும் இந்த பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இது சமுதாயத்துக்கும் மற்றும் நாட்டுக்கும் நல்லதாகும்.

இந்த கேள்விகளுக்கு சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் ஸ்மிருதி சுபீன் இரானி 21-07-2022 அன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:-

(அ) மற்றும் (ஆ) முஸ்லிம்கள் உள்பட சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களின் நலம் மற்றும் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY)பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY),  பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி (PM KISAN),  பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY), பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY), பேட்டி பச்சோ பேட்டி பாதோ யோஜனா போன்றவை உள் ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகிறது. வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களின் 10 சதவீத இடஒதுக்கீட்டு சலுகையை பொருளா தாரத்தால் நலிவுற்ற பிரிவைச் சேர்ந்த சிறுபான்மையினரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், முஸ்லிம்கள் உள்பட சிறுபான்மையினர் என்று அறிவிக்கப்பட்ட அனைத்துப் பிரிவையும் சேர்ந்த பொருளாதாரத்தால் நலிவுற்ற மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக கல்வியில் அதிகாரம் அளித்தல், வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாடு,  அடிப்படை கட்டமைப்பு வசதி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்துவதன் வாயிலாக பல்முனை வியூகங்களை சிறுபான்மையினர் விவகாரங் கள் அமைச்சகம் எடுத்துள்ளது. 

(அ) கல்வியில் அதிகாரம் அளிக்கும் திட்டங்கள்:

(1) நேரடியாக சலுகைகளை மாற்றுதல் முறையில் மாணவர்களுக்கு கல்வியில் உரிமைகளை அளிப்பதற்கான ப்ரீ - மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டம், போஸ்ட் - மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டம், தகுதி மற்றும் திறமை அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம்.

(2) மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டம் (ஃபெல்லோஷிப் திட்டம்) - நிதி உதவி வடிவில் கல்வி உதவித்தொகைகள் அளித்தல்.

(3) நயா சவேரா இலவச பயிற்சி மற்றும் அதனுடன் இணைந்த திட்டம் - தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்விகளில் சேருவதற்கான  நுழைவுத் தேர்வுகள் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் தகுதி பெறுவதற்காக சிறுபான்மையினர் சமூகத்தைத் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அபேச்சகர்களுக்கு இலவச பயிற்சி அளிப்பது இந்த திட்டத்தின் நோக்கம்.

(4) பதோ பர்தேஸ் - வெளிநாடுகளில் உயர் கல்வி படிக்க கல்விக் கடன்களுக்காக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வட்டி மானியம் அளிக்கும் திட்டம்.

(5) நைவுடான் - யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC),  மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் (PSC), ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (SSC) போன்றவற்றால் நடத்தப்படும்  ஆரம்ப தேர்வுகளில் (Prilims) வெற்றிபெற மாணவர்களுக்கு உதவி அளிக்கும் திட்டம்.

(ஆ) வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்கள்:

(6) சீக்கோ அவு கமாவோ - 14-35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டம்.

வேலை வாய்ப்புகள் அளித்தல் மற்றும் ஏற்கனவே பணிபுரிந்து வருபவர்களின் வேலை செய்யும் திறனை அதிகரித்தல், பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்கள் போன்ற வர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

(7) வேலைவாய்ப்புகளை அளித்தல், கலைப்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை சந்தைப் படுத்துதல் ஆகியவற்றுக்காக நாடு முழுவதும்  பாரம்பரிய கலைகள் / கைவினைப் பொருட்கள் மேம்பாட்டில் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி அளித்தல் (USTTAD) மற்றும் ஹுனார் ஹாத் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.

(8) நை மன்ஸில் - பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தியவர்களுக்கு முறைசார் பள்ளிக் கல்வி மற்றும் திறன் அளிக்கும் திட்டம்

(9) நை ரோஸினி-   சிறு பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களின் தலைமைத் துவத்தை மேம்படுத் துவதற்கான திட்டம் இது.

(உ) உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்:

(10) நாட்டில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதியை அளிப்பதற்காக பிரதான் மந்திரி ஜன்விகாஸ் காரியாக் ராம் (PMJKR) திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கப் பட்டதிலிருந்து அமைச்சகம் 49 பட்டப் படிப்பு கல்லூரிகள், 179 உறைவிடப் பள்ளிகள், 3,016 பள்ளிக் கட்டடங்கள், 42,269 கூடுதல் வகுப்பு அறைகள் / நூலகங்கள் / சோதனைக் கூடங்கள்,அறைகள் போன் றவை, 15,659 ஆசிரியர்கள் உதவி மற்றும் நவீன வகுப்பு அறைகள், பள்ளிகளில் 7,452 கழிப்பறைகள், 1,393 விடுதிகள், 28 பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள், 207 ஐ.டி.ஐ. கட்டடங்கள் மற்றும் 41 ஐ.டி.ஐ.களில் கூடுதல் வசதிகள், 56 பாலிடெக்னிக்குகள், 84 திறன் மையங்கள் / ஹுனார் ஹப்ஸ், 6,016 சுகாதாரத் திட்டங்கள், 591 சத்பவ் மண்டபங்கள் / பொதுச்சேவை மையங்கள், 610 மார்க்கெட் செட்டுகள், 3,100 சுகாதார / பொது கழிப்பறை திட்டங்கள், 92 விளையாட்டு அரங்குகள் போன்றவை உள்ளிட்ட 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய திட்டங்களுக்கு இந்த அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இந்த அமைச்சகத்தின் வலைதளத்திலிருந்து (www.minorityaffairs.gov.in)  மேற்குறிப்பிடப்பட்ட வரிசை எண். 1 முதல் 10 வரையிலான திட்டங்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் அவை எந்த அளவிற்கு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பது குறித்த நிலையை தெரிந்து கொள்ளலாம்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து புதர்மன்றி கிடந்த சுடுகாட்டை பூங்காவா மாற்றப்பட்டது




மதுரை சக்கிமங்கலத்தில் இந்துக்களுக்கான சுடுகாடு புதர் மண்டி காணப்பட்ட நிலையில் காலையில் இஸ்லாமியர்கள் ஜேசிபி இயந்திரத்துடன் சுடுகாட்டை சுத்தம் செய்தனர் இதனைத் தொடர்ந்து மாலையில் சுடுகாட்டை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது இது முழு ஏற்பாடும் மதுரை வடக்கு மாவட்ட SDPI கட்சியின்  சொந்த நிதியாகும் இதை கண்ட பொதுமக்கள் பலரும் இஸ்லாமிய சகோதரர்களை பாராட்டி வருகின்றனர் இந்த நிகழ்ச்சியில் கிளை தலைவர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனி சிக்கந்தர் செயலாளர் ஜாபர் சாதிக் கலந்து கொண்டார்


நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

மதுரையில் 5000ரூபாய் லட்சம் பெற்ற நிலஅளவையரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்



மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு  சொந்தமான நிலத்தின் சர்வே நம்பரை மாற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மதுரை தெற்கு வட்டாட்சியர் அலுவலக நில அளவையரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை அடுத்து நில அளவையர் முத்துப்பாண்டி தனக்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக ரமேஷிடம் கேட்டுள்ளார். இதனை அடுத்து  ரமேஷ் மதுரை லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை தெற்கு தாலுகா அலுவலகத்தில் சர்வேயர் முத்துப்பாண்டி இடம் கொடுத்துள்ளார். இதனை அடுத்து கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முத்துப்பாண்டியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

தமுமுக மமக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்


தென்சென்னை மாவட்டம் மேற்கு விருகை பகுதிக்குட்பட்ட  எம் ஜி ஆர் நகர் கிளையில் தமுமுக மமக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்.நடைபெற்றது.