திருச்சி உத்தமர்சீலி தரைப்பாலம் மூழ்கி
200 ஏக்கர் வாழை நாசம்
பொதுமக்கள் வேதனை
திருச்சி முக்கொம்பிற்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 85 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்திலும், 55 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில் திருச்சி கல்லணை சாலையில் உத்தமர்சீலி தரைப்பாலத்தில் காவிரி ஆற்று தண்ணீர் வழிந்து விவசாய நிலங்களுக்கு ஓடுகிறது.உத்தமர்சீலி தரை பாலம் மூழ்கியதால் காவிரி ஆற்றின் இடது கரை வழியாக தண்ணீர் வழிந்து 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை பயிர் நீரில் மூழ்கி வருகிறது.ஆறும் வயலும் ஒன்றாக காட்சியளிக்கிறது.
தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.காலை பள்ளிக்கு செல்வோர் கல்லணை பகுதியில் இருந்து திருச்சிக்கு வருபவர்கள்M இங்கிருந்து அங்கே செல்லக்கூடியவர்களும் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் கடந்து செல்லும் பொழுது பழுது ஏற்படும் நிலை காணமுடிந்தது.
உத்தமர் சீலி ஊராட்சி இந்த தரைப்பாலத்தில் பொதுமக்கள் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்டவைகளை அழைத்து செல்லக்கூடாது என்று அறிவிப்பு பலகையும் வைத்து எச்சரிக்கை கொடுத்துள்ளனர். அதையும் தாண்டி சிறு குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு செல்வதும் சிறுவர்கள் தண்ணீரில் கடப்பதும் பார்க்க முடிகிறது.
விவசாயிகள் தங்களின் ஆறு மாத வாழை பயிர் நீரில் மூழ்குவது தடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.இதுவரை அதிகாரிகள் வரவில்லை என்ற குற்றச்சாட்டையும் விவசாயிகள் முன்வைக்கின்றனர்.
உடனடியாக தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர். நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து திருச்சி முக்கொம்பிற்கு வரும் நீரின் வரத்தை கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக காவிரியாற்றில் தண்ணீர் வெளியேற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து கம்பரசம்பேட்டையில் உள்ள கங்காரு மனநலக் காப்பகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் நள்ளிரவில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ளவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிட உத்தரவிட்டு, நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி