08/07/22

 ரயில்வே பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி


மதுரையில் 1966 முதல் 2022 வரை ரயில்வே பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது.

மதுரை ரயில் நிலைய குடியிருப்பு பகுதிக்குள் செயல்படும் மதுரை இருபாலர் மேல்நிலைப்பள்ளி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1894ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 

128 ஆண்டுகள் சிறப்பாக இயங்கி வரும் மதுரை ரயில்வே பள்ளி தெற்கு ரயில்வேயில் சிறந்த பள்ளியாக செயல்பட்டுக் கொண்டுள்ளது.

மதுரை ரயில்வே பள்ளியில் 1966 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்தில் படித்தவர்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு பயின்று அரசுப்பணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணி புரியும் ஏராளமான  முன்னாள் மாணவ மாணவிகள் அதிகமாக கலந்து கொண்டனர். 

மேலும்,முன்னாள் மாணவ,மாணவிகள் தங்கள் குடும்பத்தினருடனும், உறவினர்களிடம் கலந்து கொண்டு மீண்டும் ஒருவொருக்கொருவர் சந்தித்து கொண்டு தங்கள் நினைவுகளை வெளிப்படுத்தினர்.

மேலும் 1966-2022 ம் ஆண்டு மிகக்சிறப்பாக படித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும்,மதுரைக்கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


ஹாஜி காயல் மகபூப்

இல்ல திருமண விழா














இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் - மாதம் இருமுறை வெளிவரும் பிறை மேடை இணை ஆசிரியர்  ஹாஜி காயல் மகபூப் இல்ல திருமண விழா

காயல்பட்டினத்தில் சமுதாயத் தலைவர் பேராசிரியர் பெருந்தகை கே.எம்.காதர் மொகிதீன்.Ex.M.P., தலைமையிலும்

மாநில பொதுச் செயலாளர் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர்.Ex.M.L.A.,தமிழ்நாடு அரசு வக்பு வாரிய தலைவரும்,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணை தலைவரும் மேனாள் நாடாளமன்ற உறுப்பினர் அல்ஹாஜ்.முனைவர்.அப்ஸல் உலமா M.அப்துல் ரஹ்மான்.Ex.M.P..,மற்றும் சான்றோர் பெருமக்கள் முன்னிலையில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி

உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்









கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியினை சென்னை பெசன்ட் நகரில் கழக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற  இப்போட்டி Asian Book Of Records சாதனை படைத்தது.அதற்கான சான்றிதழை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி சிறப்பித்தார்.

மாபெரும் மாரத்தான் போட்டி வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல்வர் நினைவு பரிசு வழங்கினார்.நுழைவு கட்டணமாக வீரர்களால் செலுத்தப்பட்ட ரூ.1,20,69,950 பணம் குழந்தைகள் மற்றும் பெண்கள் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது.

 நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

3000 பேருக்கு அன்னதானம்

கோவை மாவட்டம் காரச்சேரி நீதி மகான்
ஹாஜி அலி பாபா தர்கா 19வது ஆண்டு

உருஸ் விழாவில் வழங்கப்பட்டது

கோவை மாவட்டம் காரச்சேரி நீதி மகான் ஹாஜி அலி பாபா தர்கா 19வது ஆண்டு உருஸ் விழா நேற்று (06.08.2022 - சனிக்கிழமை) மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது பொதுமக்கள் திரளாக வந்து கலந்துகொண்டு பாபாவின் நல்லாசியை பெற்று கொண்டார்கள்.



3000 பேருக்கு அன்னதானம்:

3000 பேருக்கு அன்னதானம் வழங்கி விழாவை காரச்சேரி நீதி மகானின் நிர்வாகிகள் மிகவும் சிறப்பான முறையில் நடத்தினார்கள் இரண்டு நாட்கள் விடிய விடிய ராத்திபு மௌலுது நடை பெற்றது. சென்னையிலிருந்து  திரை பட இயக்குனர் A.M.மாஹீன் கலந்து கொண்டார்.


திருச்சி மாநகரில் இன்று

600 இடங்களில் மாபெரும்

கொரோனா தடுப்பூசி முகாம்


திருச்சி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் நாள்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தமிழகம் எங்கும் இன்று (07.08.2022) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சியில் 600 இடங்களில் இன்று (07.08.2022) காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. 

மேலும் www.trichycorporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதுநாள்வரை தடுப்பூசி போடாத பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் நோயிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினர்களையும் மற்றும் சமுதாயத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி