08/08/22

 
 சைதை தொகுதி மடுவின்கரை பகுதியில் உந்துசக்தி நிலையம்

அமைச்சர் கே.என்.நேரு

தொடங்கி வைத்தார்







தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனைப்படி,இன்று சைதை தொகுதி மடுவின்கரை பகுதியில் ரூபாய் 3.27 கோடி மதிப்பீட்டில் புதிய கழிவு நீர் உந்து சக்தி நிலையம், 1.70 கிலோமீட்டர் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியும் மற்றும் 4.8கோடிமதிப்பீட்டில் வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உந்துசக்தி நிலையம்  பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,மற்றும் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன்  உட்பட ,அரசு உயர் அலுவர்லர்கள், கழக நிர்வாகிகள்,மாமன்ற உறுப்பினர்கள்  மற்றும் பலர் உடனிருந்தனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

ஜெகத்ரட்சகன் M.P.,தலைமையில் நடைபெற்ற கலைஞர் மொழி புகழரங்கம்






சென்னை எழும்பூரில் ஜெகத்ரட்சகன் M.P.,,தலைமையில் நடைபெற்ற கலைஞர் மொழி புகழரங்கத்தில் கவிப்பேரரசு வைரமுத்து, முனைவர் பர்வீன் சுல்தானா,பீடாதிபதி ஶ்ரீ சரஹண பவானந்தா ஆகியோர் பங்கேற்று புகழுரைத்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய  மற்றும் அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு,தயாநிதி மாறன் MP..,மற்றும்  சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன்  உட்பட ,சட்டமன்ற உறுப்பினர்கள் ,கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்துகொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 சீர்காழி சிவசிதம்பரம்
மு.க.ஸ்டாலினை சந்தித்து
வாழ்த்துப் பெற்றார்



தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள மரு. சீர்காழி சிவசிதம்பரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.


 

 
சென்னை, கொச்சின் ஹவுஸ்

காவலர் குடியிருப்பு

முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்

திறந்து வைத்து கலந்துரையாடினார்



சென்னை, கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு வளாகத்தில் ரூ. 186.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1036 காவலர் குடியிருப்புகளை மாண்புமிகு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, குடியிருப்புகளை பார்வையிட்டு, காவலர் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

கோவையிலிருந்து சென்னை செல்லும்

விரைவு ரயிலில் திருட்டு

இன்று மதியம் 3.15  மணிக்கு கோவையிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலில் பயணித்த ஆம்பூரை சேர்ந்த ஹரி என்பவரின்( மணி பர்ஸ்) பணப்பை திருடு போய்விட்டது.அவரது பணப்பையில் ஆதார் கார்டு மற்றும்ரூபாய் 9800 பணம் இருந்து உள்ளது.

அந்த வரிசையில் தான் அவர் ஊருக்கு செல்லும் பயண டிக்கெட் இருந்தது பணத்தைப் பறிகொடுத்தது மிகவும் பரிதாபமாக காணப்படும் ஹரி என்பவருக்கு இந்த மணி பர்சை எடுத்தவர்கள் தயவுசெய்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சிறப்பு நிருபர் - A.M.மாஹீன் - கோவை