08/15/22

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நடத்தும்

ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை






















திருச்சியிலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி நடைபயணம் இன்று மாலை சரியாக 4 மணியளவில் சுதந்திர இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் கே.எம்.சரீப் தலைமையில் தலைமைச் செயலகம் நோக்கி நடைபயணம்

இதில் சிறப்பு விருந்தினர்களாக தோழன் குடந்தை அரசன் தலைவர் விடுதலை புலிகள் கட்சி,KRM.ஆதிதிராவிடர் மாநில பொதுச் செயலாளர் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி,தோழர் இரெ.செல்வன் பெரியார் அம்பேத்கார் மக்கள் கழகம்,ப.சிவசங்கரி பரமசிவம் B.Sc.தமிழ்நாடு தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கம்

செ.ஹைதர் அலி தலைவர் ஜக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகம்,தோழர் நாகை திருவள்ளுவன் தலைவர் தமிழ் புலிகள் கட்சி,S.R.பாண்டியன் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை,அரங்க குணசேகரன் தலைவர் மக்கள் புரட்சி கழகம்,தோழர் இளமாறன் ஒருங்கிணைப்பாளர் தமிழக விடியல் கட்சி,

S.F.ஷபி அகமது துணைப் பொதுச்செயலாளர் தமஜக.H.முகமது இக்பால் மாநிலச் செயலாளர் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி A.R.சுல்தான் தேவ்பந்த் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி

முன்னிலை வகித்தவர்கள் S.சண்முகராஜா மண்டல செயலாளர் M.ராயல் சித்திக்,திருச்சி மாவட்ட செயலாளர். தமஜக,MS.சரிப் ராஸிக் இனையதள பொருப்பாளர். தமஜக,MAJ.யூசுப் ராஜா மண்டல மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை K.ரியாஸ்,மாவட்ட பொருளாளர் தமஜக,B.ரபிக் ராஜா திருச்சி மேற்கு தொகுதி செயலாளர் தமஜக மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

TNTJ பொதுக்கூட்ட அழைப்பிதழ்

IUML திருச்சி மாவட்ட செயலாளர்

பெற்றுக் கொண்டார்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டத்தில் 21-08-2022 அன்று  நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் அழைப்பிதழை TNTJ மாவட்ட தலைவர் குலாம் தஸ்தஹீர் மற்றும்  அமைப்பு சேர்ந்த நிர்வாகிகள் இன்று நண்பகல் 12.15 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி மாவட்ட செயலாளர் K.M.K.ஹபிபுர் ரஹ்மானை  மரியாதை நிமித்தமாக சந்தித்து வழங்கினர்.

நிகழ்வில் TNTJ மாவட்ட செயலாளர் சையது ஜாகீர்,மாவட்ட பொருளாளர் லால்பாஷா,மாவட்ட துணை செயலாளர்கள் உமர்,பிலால்,கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

கோவை கிருஷ்ணகுமார்

சுதந்திர தின வாழ்த்து

அனைவரின் மனதிலும் நாட்டுப்பற்று என்னும் விதையை விதைப்போம்.ஆலமரமாய் வளரட்டும் 

அயல்நாடுகள் மத்தியில் உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்குவோம்  ஒற்றுமையுடன்,ஜாதி,மதம்,இனம் இவை அனைத்தையும் கடந்து வாழ்வோம் 

ஒற்றுமையுடன் இந்தியனாக வாழ்க பாரதம்!வளர்க இந்தியா!!ஜெய்ஹிந்த்!!!அனைவருக்கும் 75வது  சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


75 வது சுதந்திர தின விழாவை  முன்னிட்டு இன்று 15.08.2022 விருத்தாச்சலத்தில் ஆலடி ரோட்டில்  சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.விருத்தாச்சலம் நகர தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ்  கொடிஏற்றி இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்வில் விருத்தாச்சலம் நகராட்சி ஆணையர்,வார்டு உறுப்பினர்கள்,நகராட்சி அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறப்பு நிருபர் M/அப்துல் ஹமீது - விருத்தாச்சலம்

தென்சென்னைமேற்கு மாவட்டத்தில்

சுதந்திர தின நிகழ்ச்சி





நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமுமுக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் விருகை பகுதிக்குட்பட்ட கிளைகள் கேகே நகர் விஜயராகவாபுரம் சாலிகிராமம் மற்றும் தி.நகர் பகுதி வடபழனி கிளை ஆகிய இடங்களில் தேசிய மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட நகர கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரலாக கலந்துகொண்டனர்.

நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

தூத்துக்குடி மஜ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகசபை 75வது சுதந்திரதின தேசிய கொடியேற்றம்








இன்று 15.08.2022 அதிகாலை மஜ்ஜிதுர் ரஹமான் நிர்வாக சபையின் சார்பாக ஸ்டேட் பேங்க் காலனி மஹல்லா பள்ளியில் சுபுஹூ தொழுகைக்குப் பின்பு  75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பள்ளி தலைவர்  ஷாகுல் ஹமீது ஹாஜியார் மற்றும் பள்ளி நிர்வாக சபையினர் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்யபட்டது.  

தூத்துக்குடி மாவட்டம் 3வது வார்டு

வீட்டு வசதி வாரிய நலச்சங்க உறுப்பினர்களின்

75 ஆவது சுதந்திர தின நிகழ்சி









தூத்துக்குடி மாவட்டம் 3வது வார்டு வீட்டு வசதி வாரிய நலச்சங்க உறுப்பினர்கள் சார்பாக 75 ஆவது சுதந்திர தினம் தேசிய கொடி ஏற்றி மூன்றாவது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி அவர்கள் தலைமையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3வது வார்ட் பிரைமரி  கிளை தலைவர் மக்புல் பாஷா அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது வீட்டு வசதி வாரிய நலச்சங்க உறுப்பினர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறப்பு நிருபர்- ஜே.இப்ராஹிம் - தூத்துக்குடி

திருச்சி தெற்கு மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  சார்பாக நடைபெற்ற

75வது ஆண்டு சுதந்திர தின  சிறப்பு கொடியேற்று நிகழ்ச்சி









ஆகஸ்ட் 15 2022 திங்கட்கிழமை இன்று காலை 9.15 மணியளவில், சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தின  சிறப்பு கொடியேற்று நிகழ்ச்சி  திருச்சி தெற்கு மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  சார்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட செயலாளர்.K.M.K.ஹபிபுர் ரஹ்மான் கொடியேற்ற, திருச்சி மாவட்ட பொருளாளர் B.M.ஹுமாயூன்,,மேற்கு தொகுதி அமைப்பாளர் K.M.S.அப்துல் கபூர்,STU செயலாளர் ஷாஜகான், S.T.U.துணைத்தலைவர் அப்துல் சலாம்,காஜா நகர்  வார்டு தலைவர்K.M.K. பைசூர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில்  மாவட்ட இளைஞரணி (MYL துணைத் தலைவர் ஹாஜி.ஷேக் முஹம்மது கௌஸ், இளைஞரணி பொருளாளர் S. சாதிக்குல் அமீன்,அரியமங்கலம் வார்டு செயலாளர். முஸ்தபா ,59 வார்டு செயலாளர்     முசிறி பாபு,முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் பேராசிரியர் .M.மொய்தீன் அப்துல்காதர், J.ஜாபர் ஷரீப், R.நவாப் கான், M.முஹம்மது நியாஸ் A.K.அலாவுதீன் K.சாகுல் ஹமீது மற்றும்  மாவட்ட,வார்டு, பிரைமரி சார்ந்த இளைஞரணி,தொழிலாளர் அணி சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர்.


S.T.U.ஆட்டோ சங்க தலைவர் பரக்கத் அலி,S.T.U.ஆட்டோ சங்க செயலாளர் N.முஹம்மது சாதிக்,S.T.U.ஆட்டோ சங்க பொருளாளர் A.R.நூர்தீன் ஆலம்,S.T.U.ஆட்டோ சங்கர் கௌரவ தலைவர். R.செல்லதுரை,S.T.U.ஆட்டோ சங்க துணைச் செயலாளர் M.காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் M.ஃபைசல் அஹமத்,M.சிராஜ்தீன்,M.நூருல்லா பாஷா,ராஜா (தர்கா), M.I.அஷ்ரப்அலி,S.நிசார்,அஹமது,P.மணிகண்டன்,K.முருகேசன்,M.தெளபிக்,S.மன்சுர்,S.சுலைமான்,N.சதாம் உசேன் (ஆழ்வார்தோப்பு),M.அலியார் பாஷா,G.அலெக்ஸ்,S..சாகுல் ஹமீது,M.முஸ்தபா,S.நூர்தீன் (பொன்சலர்),J.ஜாகிர் உசேன்,A.இப்ராஹிம்,Y.சலீம் கான்,k.கமாலுதீன்,காதர்,A.ஹசன் அலி,M.சாகுல் ஹமீது.ஆகியோர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

29-வது வார்டு IUML மற்றும் ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபி ஜமாத் சார்பாக நடைபெற்ற 75வது சுதந்திரதின விழா கொடியேற்றம்






29-வது வார்டு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபி ஜமாத் சார்பாக 75வது சுதந்திரதின விழா கொடியேற்றம் திருச்சியில் நடைபெற்றது .

தலைமை J. ஜாபர் ஷரீப் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்புரை S.அசாருதீன் பாகவி தலைமை இமாம்  இஸ்லாம் ஷாபி பள்ளிவாசல் கொடியேற்றியவர் ஹாஜி K.E. அமீர் ஹம்சா ஹிதாயத்துள் இஸ்லாம் ஷாபி ஜமாத் தலைவர் சிறப்புரை அப்துஸ்ஸலாம் அன்வாரி ஜமாத்துல் உலமா துணைச் செயலாளர் மற்றும் சிறப்பு அழைப்பாளராக எஸ்சிடியூ   மாவட்ட துணைச் செயலாளர் P.அப்துல் சலாம் மற்றும் வார்டு நிர்வாகிகள் ஜமாத்தார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி