08/25/22

சமூகப் பாதுகாப்பு துறையில்

வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம் சமூகப்பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தகுதி:

மாஸ்டர் டிகிரி

விண்ணப்பிக்க:

கடைசிநாள்: 12.09.2022

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை

மாணவர்களுக்கான

தேசிய டிஜிட்டல் நூலகம்

மாணவர்களுக்கான தேசிய  டிஜிட்டல் நூலகம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஆங்கிலம் மலையாளம் ஹிந்தி மற்றும் 11 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்வழிக்கல்வி சிபிஎஸ்சி  மற்றும் அனைத்து ஸ்டேட் போர்டு கல்விகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

 இதில் ஆரம்ப கல்வி மற்றும் சட்டம் பொறியியல் & மருத்துவ மாணவர்கள் பயன்பெறலாம்

முதுகலை ஆராய்ச்சி கல்வி மாணவர்களுக்கு பயனுள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது.

கீழேயுள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உறுப்பினர்களாக இணைந்து பதிவிறக்கம் செய்து (பிடிஎப் வடிவங்களாக) பயன்பெறுங்கள்.

https://ndl.iitkgp.ac.in/

சிறப்பு நிருபர் ஜே.இப்ராஹிம் - தூத்துக்குடி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

28 ஆம் ஆண்டு துவக்கம்

கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது













தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 28 ஆம் ஆண்டை முன்னிட்டு மாநில தலைமையகத்தில் கருப்பு வெள்ளை கழக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் தலைவர் பேராசிரியர் J.M.H.ஜவாஹிருல்லாஹ் M.L.A., மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது M.L.A.,ஆகியோர்  கலந்து  கொண்டனர். 

இந்நிகழ்வில் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி அனிபா உள்ளிட்ட மாநில மாவட்ட பகுதி நிர்வாகிகள் மற்றும் த.மு.மு.க.,ம,ம,க,,வினர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி.

சர்வதேச சிலம்பப்போட்டி

தங்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு

மதுரை ஆட்சியர் வாழ்த்து


மதுரை மாவட்டம் பரவை பகுதியை சேர்ந்த சிலம்ப ஆசிரியர்களான  முத்துநாயகம் மற்றும் இன்பவள்ளி. இருவரும் கணவன் மனைவியாக அப்பகுதியில் உள்ள மாணவ,மாணவிகளுக்கு இலவச சிலம்பக்கலை பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சர்வதேச சிலம்ப போட்டி கடந்த 18 மற்றும் 19 ம் தேதியில் நேபால் நாட்டில் உள்ள போக்காரா எனும் இடத்தில் நடைபெற்றது.

இந்தப்போட்டியில் பரவையை சேர்ந்த சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்களான சோனை,பிரகதீஷ்,ககன்,கனிஷ்கா,ரேஷ்மா,காவ்யா,பிரிதீகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர்கள் சர்வதேச சிலம்ப போட்டியில் பங்கேற்ற நிலையில் மதுரையை சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலம்பத்தில் இரட்டை கம்பு சுருள், இரட்டை வாள் சுருள், ஒற்றை வாள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை பெற்றனர்.

இந்நிலையில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவ,மாணவிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தாங்கள் பெற்ற தங்கப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

ஆட்சியரும் மாணவர்களின் திறமை மற்றும் வெற்றி பெற்றதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

நமது நிருபர்சென்னை ஷேக் அப்துல்லா


போராட்டம் நடத்த திட்டமிட்டதால் திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம்




திருச்சி மங்கள் & மங்கள், ஆனந்தா ஸ்டோர்ஸ், கணேசன் ஸ்டோர்ஸ் ஆகியவை 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒற்றைமால் மற்றும் இரட்டை மால் சந்தை வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தி வந்தனர். இதனால் அப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசலோடு பொதுமக்கள் வழியை பயன்படுத்துவதற்கும் பெரும் சிரமம் ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

இதனால் பொதுமக்கள் அப்பகுதியை பயன்படுத்துவதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடக்கோரி 22.08.2022 ஆர்ப்பாட்டம் நடத்துவதாக CPI. AITUC கிழக்கு பகுதி குழுசார்பில் அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் கோட்டை காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்னரை ஆக்கிரமிப்பை அகற்றின்ர்.

அப்பகுதியானது, கோட்டை காவல்துறையினர் முழுமையாக அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, AITUC தரைக்கடை சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டனர். தற்போது ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்ட அவ்விடத்தை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த ‌ தொடங்கியுள்ளனர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

திருச்சியில் 50அடி தூரம்
பறந்து கார் விபத்து




திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த 4 பேர் திருச்சியிலிருந்து கரூர்-க்கு காரில் புறப்பட்டு சென்றனர். அப்பொழுது திருச்சி எலமனம் அருகே கார் சென்ற பொழுது கட்டுப்பாட்டை மீறி 50 அடி தூரம் பறந்து சாலை ஓரத்தில் வயலிருந்த தென்னை மரத்தில் மோதி நின்றது.காரில் எடமலைபட்டி புதூர் பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் பயணம் செய்தனர்.

தனபால் (42),தாமரைச்செல்வி (39),முத்துக்குமார் (50),ஸ்ரீமுகி (17) ஆயோருக்கு காயம் ஏற்பட்டு திருச்சி அட்லஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காரை ஒரு பெண் ஓட்டியுள்ளார். அவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. கார் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி தூரம் பறந்து மரத்தில் மோதியதை  பார்த்த சாலையில் சென்றவர்களும் மற்றவர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

7000 பேரிடம் 700 கோடி ரூபாய்  மோசடி

திருச்சி பொருளாதர குற்றப்பிரிவில் பரபரப்பு




தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் ஆம்னி பேருந்து டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் முதலீடாக பெற்று பெறப்பட்ட பணத்தை அவர் நடத்தும் டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

கடந்த 20 வருட காலமாக ஒவ்வொரு மாதமும் அவர் நடத்திய டிராவல்ஸில் கிடைக்கும் லாபத்தில், முதலீடு செய்துள்ள ஒவ்வொரு வருக்கும் அவரவர் களுக்கு உரிய பங்கை முறையாக செலுத்தி வந்துள்ளார். அவருடைய இறப்பிற்கு பிறகு சட்ட ரீதியான வாரிசுகள் பங்குதாரர்களின் பணத்தை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வருவதாக தங்கள் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தங்களுடைய புகார் மனுக்களை கொடுக்க 7000 பேர் வந்துள்ளனர்.

இதுகுறித்து பங்குதாரர்களின் ஒருங்கிணைப்பாளரான கமாலுதீன் கூறுகையில்...தஞ்சையை சேர்ந்த தொழிலதிபர் கமாலுதினுக்கு மொத்தம் 182 பேருந்துகளும் அதில் 23 நகர் பேருந்துகளும், கிரானைட் குவாரி, பள்ளி, பெட்ரோல் பங்க், சூப்பர் மார்க்கெட்டுகள், தங்கும் விடுதிகள் என சுமார் 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் உள்ளது. 

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பங்குதாரர்கள் ஆகிய எங்களிடம் முதலீடாக பணம் பெற்று ஒவ்வொரு மாதமும் டிராவல்ஸில் கிடைக்கும் லாபத்தில் சரியாக பங்குகளை பிரித்து கொடுத்து வந்தார். எதிர்பாராத விதமாக கடந்த 19.2.2021 அன்று அவர் இறந்து விட்டார்.

இந்நிலையில் நிறுவனத்தில் முதலீடு செய்த சுமார் 6800 பங்குதாரர்களும் 3 மாதத்திற்கு பிறகு அவருடைய உறவினர்களான மனைவி மற்றும் சட்டப்படியான வாரிசுகளிடம் கடந்த 2021 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தங்களுடைய பங்குத் தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அவர்களை நேரில் சந்தித்து பேசியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அவர்கள் பணத்தை திருப்பி தருவதாக தெரியவில்லை.

எனவே தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் 1000 பங்குதாரர்களும் புகார் மனுவை அளித்தோம். வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் பணம் திருப்பிதரப்படவில்லை.எனவே எங்களுடைய வழக்குகளை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததின் அடிப்படையில் வழக்கும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. 

கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவுக்கு வந்து செல்கிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே இன்று ஒட்டுமொத்த பங்குதாரர்களான 6800 பேரும் அமைதியான முறையில் எங்களுடைய கோரிக்கைகளை பதாகைகளாக கைகளில் ஏந்தி கொண்டு அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் எங்களுடைய புகார் மனுக்களை பொருளாதார குற்றப்பிரிவில் இன்று கொடுக்கிறோம் என தெரிவித்தார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

விருதாச்சலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகரிகள்




இன்று 25.08.2022 விருதாச்சலத்தில் கடலூர் மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், அவகாசம் கொடுக்கப்பட்டும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் அகற்றும் பணியில் அதிகரிகள் ஈடுபட்டுள்ளனர் நீர் நிலைகள் உள்ள ஆக்கிரமிப்புகளை (வீடுகளையும் கடைகளையும் கட்டிடங்களையும்) அதிகரிகள் காட்டிக் கொண்டிருக்கின்றனர். மேலும் கடும் எதிர்ப்பை மீறியும் அதிகாரிகள் அவர்களது பணியை செய்து கொண்டிருக்கின்றனர்.

சிறப்பு நிருபர்- M.அப்துல் ஹமீது - விருத்தாச்சலம்


திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில்

காய்கறி மற்றும் பூ மார்க்கெட்

கே.என்.நேரு ஆய்வு




திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலை அருகே அமைந்துள்ள மைதானத்தில் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் அமைப்பது தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி ஆகியோருடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

பிறந்தநாள் காணும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்திற்கு ஐ.பி.ஐ.நியூஸ் வாழ்த்து 



இன்று பிறந்தநாள் காணும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு ஐ.பி.ஐ.நியூஸ் சார்பாக  மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அவர் முழு உடல்நலத்துடன், மகிழ்ச்சியுடன் நீடூழி வாழ வேண்டுமென வாழ்த்தி மகிழ்கிறோம்.

ஐ.பி.ஐ.நியூஸ்

மூன்று மாவட்ட வளர்ச்சித்

திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

கே என் நேரு அதிகாரிகளுடன் ஆலோசனை






நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் சார்பில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தான ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு கலந்து  கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார் 

இக்கூட்டத்தில்,பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.கே.விஷ்ணுபிரசாத், பொன்.கௌதம சிகாமணி, து.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, ஏ.நல்லதம்பி, அ.சே.விஸ்வநாதன், தா.உதயசூரியன், கா.கார்த்திக்கேயன், ஏ.கே.மணிகண்ணன் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

ஆசிரியர்களின் தலைமைபண்பு

கருத்தாளர் பயிற்சி முகாம்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துரை





ராஜபாளையம் RIT கல்லூரியில், தலைமை ஆசிரியர்களின் தலைமைபண்பு மேம்பாட்டிற்கான கருத்தாளர் பயிற்சி முகாம் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் 

தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து 200 தலைமை ஆசிரியர்கள் இப்பயிற்சி கருத்தாளர் முகாமில் கலந்து கொண்டனர். 6 நாட்கள் கருத்தாளர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் பயிற்சி பெறும் தலைமை ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் பயணித்து அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தலைமை பண்புக்கான பயிற்சிகளை வழங்கும் முன்னெடுப்பை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி