08/29/22

இதழாளர் கவிஞர் திலகம் சாரணபாசுகரன்



சாரணபாசுகரன் (1923 ஏப்ரல் 20 – 1986 நவம்பர் 25) (Saaranabashkaran) என்னும் டி.எம்.எம்.அகமது (T. M. M. Ahamed) கவிஞர்;இதழாளர்.லைலா - மசுனு காதல் கதையை யூசுப் - சூலைகா என்னும் பெயரில் படைத்தவர்.

பிறப்பு: டி.எம்.எம்.அகமது 1923 ஏப்ரல் 20. கூத்தாநல்லூர், தஞ்சை மாவட்டம்

இறப்பு: 1986 நவம்பர் 25 

தேசியம்: இந்தியர்

மற்ற பெயர்கள்: அமரன், ரஹ்மத், இப்னு ரஹ்மத்துல்லாஹ்,

அறியப்படுவது: யூசுப் சுலைகா காவியம்

பட்டம்: கவிஞர் திலகம்

சமயம்: முசுலீம்


பிறப்பு:

சாரணபாசுகரன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூரில்1923 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 23 ஆம் நாள் பிறந்தார்.

சாரணபாசுகரன் 1945ஆம் ஆண்டில் காரைக்காலில் இருந்து வெளிவந்த பால்யன் என்னும் கிழமை இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் மலேயாவின்ஒரு பகுதியான பினாங்கில் இருந்து வெளிவந்த தேசநேசன் என்னும் நாளிதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1949 ஆம் ஆண்டில் மலேயாவில் இருந்து வெளிவந்த களஞ்சியம் என்னும் நாளிதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1957அம் ஆண்டில் திருச்சியில் இருந்து வெளிவந்த சன்மார்க்க சங்கு என்னும் திங்களிருமுறை இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

எழுத்துப்பணி:

டி.எம்.எம்.அகமது என்னும் தனது இயற்பெயரில் சாரணபாசுகரன் எழுதிய ஜினானா ஜெயந்தி கீதம் என்னும் பாடல் 1936 ஆம் ஆண்டில் இதழொன்றில் வெளிவந்தது.

இவருக்கு சாரணபாசுகரன் என்னும் புனைப்பெயரை 1937 ஆம் ஆண்டில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சூட்டினார்.அதன் பின்னர் சாரணபாசுகரன், அமரன், ரஹ்மத், இப்னு ரஹ்மத்துல்லாஹ் ஆகிய புனைப்பெயர்களில் டி. எம். எம்.அகமது தனது படைப்புகளை வெளியிட்டார். அவற்றுள் சிலவற்றை பின்வரும் நூல்களாக வெளியிட்டார்:

வ.எண்-ஆண்டு-நூல்வகை:

01 1946 மணியோசைகவிதை?

02 1947 சாபம்கவிதை?

03 1951 சங்கநாதம்கவிதை?

04 1951 இதயக் குமுறல்கவிதை?

05 1956 யூசுப் – சூலைகாகாவியம்?

06 1959 மணிச்சரம்கவிதை?

07 1961 நாடும் நாமும்கவிதை?

08 1977 சாரணபாசுகரனின் கவிதைகள்?

1950 ஆம் ஆண்டில் முசுலீம் முரசு என்னும் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் வென்று முதற்பரிசு பெற்றார்.

வானொலிப் படைப்புகள்:

கவியரங்கம்:

திருச்சி வானொலி நிலையம் லெ. ப. கரு. ராமநாதன் தலைமையில் வாழ்க்கை வளமுற என்னும் பொதுத் தலைப்பில் நடத்திய கவியரங்கில் உணர்வு என்னும் துணைத்தலைப்பில் சாரணபாசுகரன் கவிதை படித்தார்.

1960 சனவரி 14 ஆம் நாள் திருச்சி வானொலி நிலையம் ஏற்பாடு செய்த பொங்கல் கவியரங்கில் நாடு நகரம் என்னும் தலைப்பில் கவிதை படித்தார்.

1963 சனவரி 13 ஆம் நாள் திருச்சி வானொலி நிலையம், சீனா ஆக்கிரமிப்பை எதிர்த்து, வீறுகொண்ட பாரதம் என்னும் தலைப்பில் ஏற்பாடு செய்த கவியரங்கில் சுவாமி சித்பவானந்தர் தலைமையில் தியாகம் என்னும் துணைத்தலைப்பில் கவிதை படித்தார்.

1968 சனவரி 8 ஆம் நாள் சென்னையில்கூடிய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் நடைபெற்ற கவியரங்கில் வணிகன் என்னும் தலைப்பில் கவிதை படித்தார்.

1968 சனவரி 14 ஆம் நாள் திருச்சி வானொலி நிலையம் அன்றைய உள்ளாட்சி அமைச்சர் பாவலர் முத்துச்சாமி தலைமையில் ஏற்பாடு செய்த கவியரங்கில் பால் என்னும் தலைப்பில் கவிதை படித்தார்.

வானொலி நாடகம்:

ஈராக்கிய மன்னர் காரூன் முதலான் எழுவரை நாடகமாந்தர்களாகக் கொண்டு சாரணபாசுகரன் எழுதிய பிரிவை மாற்றிய பிரிவு என்னும் நாடகத்தை 1971 ஏப்ரல் 16 ஆம் நாள் திருச்சி வானொலி நிலையம் நாடகவிழாவை முன்னிட்டு ஒலிபரப்பியது.

சொற்பொழிவு:

வரம்பு கடந்த வாழ்வில் அன்பு என்னும் தலைப்பில் 1971 அக்டோபர் 13 ஆம் நாளில் திருச்சி வானொலியில் இலக்கிய சொற்பொழிவு ஆற்றினார்.

விருதுகள்:

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரில்நடைபெற்ற முதல் இசுலாமிய தமிழிலக்கிய ஆராய்ச்சி மாநாட்டில் சாரணபாசுகரனின் தமிழ்ப்பணி பாராட்டப்பட்டது.

சாரணபாசுகரனுக்கு கவிஞர் திலகம் எனும் பட்டம் வழங்கப்பட்டது.

நீதிபதி அவர்கள் 27-3-1976 தேதியிட்டு கவிஞர் சாரணபாஸ்கரன் அவர்களுடைய “யூசுப்-ஜுலைகா” காப்பியத்திற்கு அணிந்துரை வழங்கியபோது.... அவர் கையாண்ட கனகச்சிதமான நறுக்கென்ற நயமான சொற்றொடர்கள் அவருடைய எழுத்துத் திறமைக்கு சிறந்த சான்றாகும்.

இது மொழியால் தமிழ்க் காப்பியம்,

உணர்ச்சியினால் காதற் காப்பியம்,

பண்பினால் மனிதக் காப்பியம்,

போதிக்கும் அறத்தினால் அமர காவியம்.

இத்தகையக் காப்பியத்தை ஆக்கித்தந்த கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனாருக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, சிறப்புமிகு இத்தகையக் காப்பியங்கள் இன்னும் பல செய்வதற்கான எல்லா நலன்களையும் அவருக்குத் தந்தருளுமாறு இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

என்று வாழ்த்துரை வழங்கினார்.

தகவல் - S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் - IBI NEWS

கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற இளையான்குடி புதூர்
குழந்தைகளுக்கு
ஐபிஐ நியூஸ் வாழ்த்து



சென்னைக்கு உட்பட்ட மகாபலிபுரத்தில் தென்னிந்திய அளவில் நடந்த கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற சென்னை வாழ் இளையான்குடி புதூர் மக்களின் குழந்தைகள்‌.

வீரம் நிறைந்த விளையாட்டில் விவேகம் நிறைந்த எண்ணங்களுடன் வெற்றி பெற்றவர்களை  வளம்பெற ஐபிஐ நியூஸ் சார்பாக வாழ்த்துகிறோம்.

தகவல் - S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் - IBI NEWS

புதிய பேருந்து சேவை
அன்பில் மகேஷ் பொய்யா மொழி
துவங்கி வைத்தார்





திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட குண்டூர் ஊராட்சியில் மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து சேவையினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் இ.ஆ.ப., தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன்,ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் ஆகியோரும் பொதுமக்களும்,அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

மாணவியர்களுக்கு
விலையில்லா மிதிவண்டி

பி.கே.சேகர் பாபு வழங்கினார்






தமிழக முதல்வரின் வழிக்காட்டலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் திரு.வி.க நகர் மண்டலம் 71வது வார்டுக்குட்பட்ட பள்ளி சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு  விலையில்லா மிதிவண்டிகளை இன்று (29.08.2022) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வழங்கினார். 

இந்நிகழ்வில் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் உட்பட திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி MLA ,கல்விக் குழுத்தலைவர் த.விசுவநாதன், மண்டலக் குழு தலைவர் சரிதா மகேஷ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்,துணை ஆணையர்கள்,அரசு அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

ஆசைக்கு இணங்க மறுத்த

பெண்ணை கொலை செய்த நபர்

குண்டர் சட்டத்தில் கைது


கடந்த 11.07.22-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள மணல்திட்டு புதரில் சுமார் 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் சந்ததேகம்படும்படியாக இறந்து கிடப்பதாக வெள்ளி திருமுத்தம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்படி ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேற்படி சம்பவ தொடர்பாக புலன்விசாரணையில்,சம்பவ இடத்தில் சந்தேகம்படும்படியாக இறந்தது திருச்சி மாவட்டம் முதுவத்தூர் கிராமத்தை சேர்ந்த கலைசெல்வி (எ) செல்வி வயது 37 க.பெ.ராஜேந்திரன் என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் மேற்படி இறந்து போன பெண் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்துள்ளதால் சட்டப்பிரிவு 174 CRPC இருந்து சட்டப்பிரிவு 302 IPC வழக்காக மாற்றம் செய்து விசாரணை மேற்க்கொண்டதில், வழக்கில் இறந்துபோன கலைசெல்வி தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொலை செய்ததாக திருச்சி மாவட்டம், கள்ளகுடியை சேர்ந்த நாகராஜ் என்பவர் கைது செய்ய்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப் பட்டார்.

மேலும் விசாரணையில் எதிரி நாகராஜ் என்பவர் குற்றச்செயல்புரியும் எண்ணம் கொண்டவர் எனவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் என விசாரணையில் தெரிய வருவதால், எதிரியின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரி நாகராஜை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி நாகராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும், சிறையில் அடைக்கப்பட்டார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

வசந்த குமாருக்கு  நினைவு அஞ்சலி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது

நேற்று 28/8/22 மறைந்த  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த குமாரின்  இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.




முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமரி அனந்தன் Ex.MP. மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் MC, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதி தலைவர் T.M. தணிகாசலம், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் முகமது வாசிப் உசேன், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதி 63 வது வட்ட தலைவர் S.நயிப்கான், சிந்தாரிப்பேட்டை பகுதி தலைவர் சீனிவாசன் M.A.B.L., மற்றும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த குமாருக்கு நேற்று பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தகவல் - S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் - IBI NEWS

தொட்டபெட்டா சுற்றுலா

வந்த பெண் தற்கொலை


உதகை முக்கிய சுற்றுலா நகரமான தொட்டபெட்டா பகுதியில் இன்று சுற்றுலா வந்த பெண் திடீரென தடுப்பு வேலிகளை தாண்டி பாறை மேல் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சிறப்பு நிருபர் - A.சிராஜுதீன் -  தர்மபுரி

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

ஆட்சித் தலைவர் அறிவிப்பு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் பரவலாக தொடர் மழை பெய்து வருவதால் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

1.ஓசூர் கல்வி மாவட்டம் 

2.தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டம்

ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் வி.ஜெயச்சந்திரன் பானு ரெட்டி இ ஆ ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

சிறப்பு நிருபர் - A.சிராஜுதீன் -  தர்மபுரி