08/31/22

ரூ.7 லட்சம் மதிப்புள்ள

குட்கா பறிமுதல்


திருச்சி மாநகரம் உறையூர் காவல் நிலைய எல்லையில் நேற்று  இளைய தலைமுறையினரை சீரழிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட பொருட்களான ஹான்ஸ்,ஷைனி, விமல்,கணேஷ், கூலிப்,ஆர்.எம்.டி.பவுடர் போன்ற குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக காவல் ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது 

ரகசிய தகவலின் பெயரில் காமாட்சியம்மன் கோயில் பகுதியில் ஒருவருக்கு சொந்தமான இடத்தை சோதனை செய்தனர்.

அங்கு சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த உறையூர் காவல்காரர் தெருவை சேர்ந்த கோபி மற்றும் தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த செந்தில் ஆகியவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர்களிடமிருந்து 7 லட்சம் மதிப்புள்ள சுமார் 483 கிலோ 600 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக வைத்திருந்ததை பறிமுதல் செய்தும் விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு நான்கு சக்கரம் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும் மேற்படியின் நபர்களை கைது செய்தும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

முக்கொம்பில் நீர் வரத்து அதிகரிப்பு

மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனை


முக்கொம்பில் நீர் வரத்து அதிகரிப்பு- பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனை

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், முக்கொம்பு காவிரியில் நீர்வரத்து அதிகரித்து , காவிரி மற்றும் கொள்ளிடத்தில் நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர்.க.மணிவாசன், இன்று ( 31.8.22) ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. அபிராமி, நீர் வளத்துறை செயற்பொறியாளர்கள் ஆர்.தமிழ்செல்வன், ஏ‌. நித்தியானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி


 திருச்சி மாவட்டம் குழந்தைகள்

பாதுகாப்பு அலகில்

வேலைவாய்ப்பு



தகுதி: டிகிரி

விண்ணப்பிக்க கடைசிநாள்: 02-09-2022

கனமழை கொடைக்கானல்

பழனி சாலையில் சரிவு





கனமழையின் காரணமாக கொடைக்கானல் பழனி சாலையில், சவரிகாட்டிற்க்கு சற்று மேலே சாலை பாதி அளவிற்கு சரிந்து விட்டது கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது, எனவே சரியான தகவல் கிடைத்த பின்பு வாகனங்களை இயக்கவும்

தகவல் - S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் - IBI NEWS

திருச்சி தெப்பக்குளம்

தபால் நிலையம் முற்றுகை

100 பேர் கைது



அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதித்துள்ள ஒன்றிய அரசை கண்டித்தும், மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா தலைமையில் தெப்பக்குளம் தபால் நிலையம் 30.08.2022 முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

தொடக்க நிகழ்வாக பேரணியை முன்னாள் மாநில குழு உறுப்பினர் எம்.செல்வராஜ் துவக்கி வைத்தார்.நிகழ்விற்கு இடைக்கமிட்டி செயலாளர்கள் அபுதாகிர், சுரேஷ் முத்துசாமி, எம் ஆர் முருகன், ராஜலிங்கம், ஏ.அஞ்சுகம், ஏ.பால்கிருஷ்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ், தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் அன்சர்தீன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் செல்வகுமார் மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் க.இப்ராகிம்,

மாதர் சங்கத் தலைவர்கள் வை.புஷ்பம், க.ஆயிஷா, இளைஞர் பெருமன்றம் மாவட்ட தலைவர் முருகேசன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் சூர்யா மற்றும் முத்துலெட்சுமி, ஏர்போர்ட் ராஜா, க.முருகன், மார்சிம் கார்கி, விஷ்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரணியின் முடிவில் தபால் நிலையம் முற்றுகையிடப்பட்டு 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி