09/16/22

புதிய குடிநீர் தொட்டி

கே.என்.நேரு திறந்து வைத்தார்





திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 27-ல் உள்ள சவேரியார் கோவில் தெருவில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பொது நிதியின் கீழ் கட்டப்பட்ட ஆழ்குழாய் கிணற்றுடன் கூடிய புதிய குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று 16.09.2022 நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

அப்போது, சட்டமன்ற உறுப்பினர் நா.தியாகராஜன், மாநகர மேயர் மு.அன்பழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

மின்வாரிய ஊழியர் வீட்டில் தீடீர் தீ விபத்து





மின்வாரிய ஊழியர் வீட்டில் தீடீர் தீ விபத்து லட்சக்கணக்கான மதிப்பு பொருட்கள் நாசம்.

மணப்பாறை கரிக்கான்குளம் விஸ்தரிப்பு பகுதியில் குடியிருந்து வருபவர் பத்மநாபன் (44).இவர் கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த காவல்காரன்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மின் கம்பி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று காலை அவர் குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக வீட்டை பூட்டிவிட்டு கீழே வந்த போது வீட்டிலிருந்து புகை வருவதாக அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

உடனே பத்பநாபன் மேலே சென்று பார்ப்பதற்குள் தீ மளமளவென்று எரிந்து வீடு முழுவதும் உள்ள பொருட்களை பற்றி கொண்டது. வீட்டில் உள்ளே சென்று பொருட்களை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி தீயை கட்டுப்படுத்தினர். தீயில் சுமார் 1 லட்சம் மதிப்புள்ள டிவி, பிரிட்ஜ் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.திடீர் தீ விபத்தால் குடியிருப்பு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி


குறைந்த விலையில்

நீரிழிவு நோய்க்கான மருந்து

நீரிழிவு நோய்க்கான சிட்டாகிளிப்டின் மருந்து மக்கள் மருந்தகங்களில் குறைந்த விலையில் கிடைக்கிறது

நீரிழிவு நோய்க்கான சிட்டாகிளிப்டின் மருந்தின் பல்வேறு வகையான கலவையில் பிரதமரின் பாரதீய மக்கள் மருந்து திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய கலவை மருந்தை இந்திய பார்மசூட்டிகல்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பிரிவின் தலைமை செயல் அதிகாரி திரு.ரவி தாதிச் அறிமுகம் செய்து வைத்தார். சிட்டாகிளிப்டின் அதன் வெவ்வேறு வகை கலவையில் அனைத்து மக்கள் மருந்தகங்களிலும், குறைந்த விலையில் கிடைக்கும்.  சிட்டாகிளிப்டின் பாஸ்பேட் ஐபி-50 மி.கி. 10 மாத்திரைகளை கொண்ட அட்டை ரூ. 60க்கும், 100 மி.கி. அட்டை ரூ.100-க்கும், சிட்டாகிளிப்டின் மெட்பார்மின் ஹைட்ரோகுளோரைடு 50 மி.கி./500 மி.கி. மாத்திரை (10 கொண்ட அட்டை) ரூ.65-க்கும், சிட்டாகிளிப்டின் மெட்பார்மின் ஹைட்ரோகுளோரைடு 50 மி.கி./1000 மி.கி. மாத்திரை (10 கொண்ட அட்டை) ரூ.70-க்கும் கிடைக்கிறது.  நீரிழிவு நோய்க்கு மிகவும் சிறந்த மருந்தான இது மற்ற மருந்து கடைகளை விட மக்கள் மருந்து கடைகளில் குறைவான விலைக்கு கிடைக்கிறது.  பிரதமர் பாரதீய மக்கள் மருந்து திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8,700-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்து மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தரமான மரபுசார் மருந்துகளும், அறுவை சிகிச்சை உபகரணங்களும் மற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது இந்த கடைகளில் 1600-க்கும் மேற்பட்ட மருந்துகளும், 250 அறுவை சிகிச்சை உபகரணங்களும் கிடைக்கின்றன.

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை

பார்வையாளர்கள் தினம் கொண்டாட்டம் பொதுமக்கள் பார்வையிட அனுமதி

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் பார்வையாளர்கள் தினம் கொண்டாட்டம் ஆய்வகத்தை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதி

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப  அமைச்சகத்தின் கீழ் புதுடில்லியில் இயங்கி வரும் சிஎஸ்ஐஆர் எனப்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் குழுமத்திற்கு கடந்த 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த தினத்தை நினைவு கூரும் வகையில், காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகம் சார்பில் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி  பார்வையாளர்கள் தினமாக கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து பொதுமக்களும் காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகம் ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை இலவசமாக நேரடியாக கண்டுகளிக்கலாம்.

மேலும் அன்றைய தினம், நவீன தொழில்நுட்பத்தால் தயாரான காரீய அமில பேட்டரி மற்றும் லித்தியம்அயன் பேட்டரியில் இயங்கும் ரிக்ஷா, ஸ்கூட்டர், சைக்கிள் ஆகியவற்றின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

மேலும், தண்ணீரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பசுமை எரிசக்தி ஹைட்ரஜன் உற்பத்தி, மின்மூலாம்பூசுதல் ஆகிய பல்வேறு துறைகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சிகளின் மாதிரிகள் செயல்விளக்க முறைகள் பார்வையாளர்களுக்கு விளக்கப்படவுள்ளது.

மேலும், பார்வையாளர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக காரைக்குடி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தின் கண்டுபிடிப்புகளையும் தொழில்நுட்பங்களையும் கண்டுகளித்து மற்றவர்களுக்கும் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி 04565-241470, 241474, 241204 மற்றும் அலைபேசி 9994614582, 9443609776, 7598449117 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை

சென்னை விமான நிலையத்தில்

800 கிராம் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து 13-ந் தேதி விமானம் மூலம் சென்னை வந்த முருகன் கோவிந்தராஜூ என்ற பயணியை இடைமறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில், 3 தங்க பிஸ்கெட்டுகள், ஒரு தங்க பெல்ட் பட்டை ஆகியவற்றை தனது பேண்ட்டில் மறைத்து எடுத்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 580 கிராம் எடைகொண்ட இதன் மதிப்பு ரூ.25.99 லட்சமாகும்.   மற்றொரு சம்பவத்தில் துபாயில் இருந்து அதே நாளில் வந்த விமானத்தில் சோதனையிட்டதில், முன்பக்கம் இருந்த கழிப்பறையில் ஒரு தங்கச்சங்கிலி மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 220 கிராம் எடைகொண்ட அந்த தங்கச்சங்கிலியின் மதிப்பு ரூ.9.85 லட்சமாகும். இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர்  எம் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் - S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் - IBI NEWS

அஞ்சலக குறை தீர்வு முகாம்

11.08.2022 அன்று நடைபெறவிருந்த வட்ட அளவிலான வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம், 29.09.2022 (வியாழன்) அன்று காலை 10.30 மணிக்கு முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600 002 என்ற முகவரியில் நடைபெற உள்ளது என தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை

வருமானவரி பற்றிய பயிலரங்கு




ஸ்ரீபெரும்புதூர் – ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், சென்னை மண்டல வருமானவரி ஆணையமும் இணைந்து ஒருநாள் “வருமானவரி பிடித்தம் மற்றும் வரவு” பற்றிய (பயிலரங்கு) ஒன்றை நடத்தியது.

எம். அர்ஜுன் மானிக், வருமானவரி இணை ஆணையர் முதன்மை உரையாற்ற, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் சிப்நாத் தேவ் அனைவரையும் வரவேற்று வாழ்த்தி பேசினார். 

வருமானவரி ஆணையர் டி.வி.சுப்பாராவ் நோக்கவுரையாற்ற வருமானவரி தாக்கல் செய்வதன் அவசியத்தையும், அதன் பலன்களையும் தாக்கல் செய்யாததால் வரும் சிக்கல்களையும் உதாரணத்துடன் நேர்த்தியாக விளக்கினார்.

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களின் மத்திய அரசின் அலுவலகங்களில் பணியாற்றும் 43 பணியாளர்கள் கலந்து கொண்ட இப்பயிற்சி பயிலரங்கில் வருமானவரி அலுவலர் ராஜாராமன்,வரி செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் மற்றும் முனைவர் ஆடிட்டர் அபிஷேக் முரளி ஆகியோர் வருமானவரி தாக்கல் பற்றிய நுட்பமான, மிக நுணுக்கமான விஷயங்களை விளக்கினார்.

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை

மத்திய அரசு பணி

ரூ.31000/- சம்பளம்

விண்ணப்பிக்க கடைசி தேதி 14.10.2022

தமிழக DRDO CVRDE வேலைவாய்ப்பு 2022 – ரூ.31000/- சம்பளம்.DRDO காம்பாட் வெஹிக்கிள்ஸ் ரிசர்ச் & டெவலப்மென்ட் எஸ்டாபிளிஷ்மென்ட் (CVRDE), சென்னை ஆனது ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

DRDO CVRDE ஆவடி மூலம் 17 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

மத்திய அரசு பணி தேடும் நபர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2022

கல்வி தகுதி: B.E/ B.Tech/ M.E/ M.Tech தேர்ச்சி

வயது வரம்பு: அதிகபட்சம் 28

APPLY ONLINE LINK:https://rac.gov.in/index.php?lang=en&id=0


நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை

மாணவ, மாணவிகளுக்கு

காலை உணவு

கே.என்.நேரு வழங்கினார்










தி.மு.க ஆட்சியின் மற்றுமொரு மகத்தான திட்டமான பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

அதன் தொடர்ச்சியாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் , துறையூர் ஒன்றியம், நடுவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை இன்று 16.09.2022 நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

இந்நிகழ்வின்போது  சட்டமன்ற உறுப்பினர்கள் செ.ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், ப.அப்துல் சமது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி


3 கோடி பரிசுத்தொகைக்கு

ஆசைப்பட்டு 6 லட்சத்தை இழந்த

திருச்சி முதியவர்


திருச்சி மாவட்டம் சோமனசம்பேட்டை அளவுக்கு பகுதியை சேர்ந்தவர் நிர்மல் குமார் (67). இவர் அதே பகுதியில் லேத்து பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் நான்காம் தேதி நிர்மல் குமாரின் செல்போன் எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் பிரபல செல்போன் நிறுவனத்தின் பெயரில் வந்த அந்த எஸ்எம்எஸ் உங்களது செல்போன் எண்ணுக்கு மூன்று கோடி மதிப்பில் வெளிநாட்டு பணம் பரிசு விழுந்து உள்ளது.அதை பெற கீழ்க்கண்ட ஈமெயில் மற்றும் செல்போன் நம்பரை தொடர்பு கொள்ளவும் என்று கூறப்பட்டிருந்தது.

இதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த அவர் உடனடியாக அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர் முனையில் பேசிய நபர் பரிசுத்தொகை வெளிநாட்டு பணம் என்பதால் அதை இந்தியாவுக்குள் கொண்டுவர ரிசர்வ் வங்கி, உலக வங்கி ஆகியவற்றிடம் அனுமதி வாங்க வேண்டும், அத்துடன் ஜிஎஸ்டி பதிவு செலவு ஆகியவை உள்ளது என்று தெரிவித்து மூன்று வங்கி கணக்குகளை கூறி அதற்கு 6 லட்சம் அனுப்பும்படி கூறியுள்ளார்.

இதை நம்பிய நிர்மல் குமார் அந்த வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ஆறு லட்சத்தை அனுப்பி உள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு ஒரு தபால் வந்தது அதில் பேங்க் ஆஃப் இங்கிலாந்து என்ற பெயரில் ஒரு ஏடிஎம் கார்டு இருந்தது. தபால் அவருடைய கைக்கு கிடைத்தது அறிந்து கொண்ட அந்த கும்பல் நிர்மல் குமாரை தொடர்பு கொண்டு தற்பொழுது உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஏடிஎம் கார்டு மூலம் பரிசுத் தொகையை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பரிசுத்தொகையை பெரிய தொகை என்பதால் அதை விடுவிக்க மேலும் 7 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறினர். ஆனால் நிர்மல் குமாரிடம் பணம் இல்லாததால் நடந்த விபரங்களை கூறி நண்பர் ஒருவரிடம் ஏழு லட்சம் கடன் கேட்டுள்ளார்.

அவர் நிர்மல் குமார் மோசடி கும்பலிடம் சிக்கி இருப்பதை உணர்ந்து அவருக்கு ஆலோசனைகளை கூறி மேற்கொண்டு பணத்தை செலுத்த வேண்டாம் என்று அறிவுரை வழங்கினார். மேலும் இதுபற்றி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் நிர்மல்ராஜ் புகார் அளித்தார். அதன் பெயரில் காவல் ஆய்வாளர் அன்பு செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வட மாநிலத்தை சேர்ந்த ஆன்லைன் மோசடி கும்பல் தான் நிர்மல் குமார் ஏமாற்றி ஆறு லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சி

ஆணையரிடம் மனு



இன்று 16.09.2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரம் மாடல் காலனி பகுதியில் இருக்கும் பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர சொல்லியும்,ராமகிருஷ்ணா பள்ளி அருகில் இருக்கும் சாலையை சரி செய்ய சொல்லியும்,நகர் முழுக்க சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்கச் சொல்லியும் நகராட்சி ஆணையரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் எம்.எஸ்.முருகன்,தொகுதி துணை செயலாளர் நெலின்,சூசை நாதன்,வசந்தன்,தீந்தமிழன்,கோவிந்தன்,ஆறு,பாலாஜி சிறப்பு அழைப்பாளராக அறிவுகரசு கனக அம்பேத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நமது நிருபர்R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி

ராகுல் காந்தியின்

பாரத் ஜோடோ யாத்திரா

விஜய் வசந்த் M.P க்கு பொன்னாடை








பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் MP அவர்களுடன் இன்று  15.09.22 மதியம் 2.30 மணிக்கு ராகுல் காந்தி அவர்களின் பாரத் ஜோடோ யாத்திரா பயணத்திற்கு ஏற்பாடுகள் செய்து  சிறப்பாக சேவையாற்றிய தற்காக விஜய் வசந்த் அலுவலகத்தில் S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் - IBI NEWS பொன்னாடை போர்த்தி வாழ்த்திய போது