புத்தகத் திருவிழா
கே.என்.நேரு திறந்து வைத்தார்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
செஞ்சி மஸ்தான் பங்கேற்பு
திருச்சிராப்பள்ளி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற திருச்சி புத்தகத் திருவிழாவை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருடன் இணைந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியின்போது கவிஞர் நந்தலாலா எழுதிய ”திருச்சி ஊறும் வரலாறு” என்ற நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார் .
இதனைத்தொடர்ந்து வாசகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியின் ஒவ்வொரு அரங்குகளையும் பார்வையிட்டு அதன் ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், ப.அப்துல்சமது, மாநகர மேயர் மு.அன்பழகன், துணைமேயர் ஜி.திவ்யா,திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,அரசு அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருடன் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி