09/23/22

உலக காண்டாமிருக நாளை

இந்தியன் ஆயில் இயக்குநர்

கொண்டாடினார்


வண்டலூர் உயிரியல் பூங்காவில் தத்து எடுக்கப்பட்ட காண்டாமிருகங்களுடன் உலக காண்டாமிருக நாளை இந்தியன் ஆயில் இயக்குநர் கொண்டாடினார்

சுற்றுச்சூழல் சமன்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, மக்களுக்கு தரமான வாழ்க்கைச் சூழலைத் தரவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன், இந்தியன் ஆயில் நிறுவனம் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இனத்தைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டுள்ளது.

உலக காண்டாமிருக தினத்தையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிறுவனத்தின் இயக்குநர் (சந்தைப்படுத்துதல்) வி.சதீஷ் குமார் கலந்து கொண்டு, பார்வையாளர்களுக்கு காண்டாமிருக பாதுகாப்பு தொடர்பான கையேடுகளை வழங்கினார்.

காண்டாமிருகங்கள் வசிக்கும் பகுதியை நன்கு பராமரித்து வரும் அதிகாரிகளுக்கு அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.  உலகில் அருகி வரும் இனமான ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்தை கடந்த ஆண்டு முதல் இந்தியன் ஆயில் நிறுவனம் தத்தெடுப்பதன் மூலம் தாங்கள் மேற்கொள்ளும் நல்லெண்ண நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய இயக்குநர், இதுதொடர்பாக சில்லரை விற்பனை நிலையங்களில் பதாகைகள் வைத்திருப்பதையும், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தியதையும் நினைவு கூர்ந்தார்.  

உலக காண்டாமிருக தினத்தையொட்டி, நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா, இந்தியன் ஆயில் நிறுவனம், தனது விற்பனையுடன்,  சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வியல் பாதுகாப்பு, நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்தல் ஆகிய பொறுப்புகளை செவ்வனே செயல்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.

 இந்தியாவின் சுற்றுச்சூழல் ஆபரணத்தைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்த தாங்கள் உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாக, நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை

குழந்தைகள் இறப்பைக் குறைப்பதில்

இந்தியா குறிப்பிடத்தக்க

இலக்கை எட்டியுள்ளது

ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் இந்தியா ஒரு முக்கிய சாதனையைப் படைத்துள்ளது.

22 செப்டம்பர் 2022 அன்று வெளியான இந்திய மாதிரி பதிவு அமைப்பு வெளியிட்ட புள்ளி விவர அறிக்கை 2020-ன்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்காக, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் இறப்பு விகிதம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்து வருகிறது.இந்த சாதனைக்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தை இறப்பை குறைப்பதற்கு அயராது உழைத்த அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். 

“இந்திய மாதிரி பதிவு 2020 அறிக்கையின்படி, குழந்தை இறப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின், சிறந்த தலைமையின்கீழ், மத்திய - மாநில அரசுகளின் சிறந்த நட்புறவு மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு காரணமாக 2030-க்குள் குழந்தை இறப்பை குறைப்பதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்ட இந்தியா தயாராக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை

சமூக விதை வங்கி முன்முயற்சி தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் வகைகளை கண்டுபிடித்து மீட்டெடுக்கிறது

தமிழ்நாட்டின் சுமார் 20 பாரம்பரிய நெல் ரகங்கள் கண்டறியப்பட்டு, சேகரிக்கப்பட்டு, மீட்டெடுக்கப்பட்டுள்ளதால், குறைந்தது 10 சமுதாய விதை வங்கிகள் மூலம் மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைகின்றனர்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், ஒரு காலத்தில் பாரம்பரியமாக விளைவித்து வந்த  தங்கள் பாரம்பரிய விதைகளை கலப்பினங்களின் ஒற்றைப்பயிர் சாகுபடியால் இழந்துள்ளனர்.

இந்த வகைகள் அவற்றின் தனித்துவமான ஊட்டச்சத்து, மருத்துவம் மற்றும் சூழலியல் குணங்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அவற்றின் காலநிலை மீள்தன்மை ஆகியவற்றிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 24 மாவட்டங்களில் உள்ள உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இருப்பிட அடிப்படையில் விருப்பமுள்ள விவசாயிகளைக் கண்டறிந்து இந்த சமூக விதை வங்கிகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.

ஒரு முன்னணி விவசாயி தனது பண்ணையில் ஒன்று முதல் பல பாரம்பரிய ரகங்களை பயிரிடுகிறார், அதில் ஒரு பகுதியை அறுவடை செய்யும்போது, அண்டை வட்டாரங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள ஆர்வமுள்ள மற்ற விவசாயிகளுக்கு பணம் செலுத்தியோ அல்லது கொடுக்காமலோ விநியோகிக்கப் படுகிறது.இது தன்னார்வ பங்கேற்புடன் கூடிய முறைசாரா அமைப்பாகும்.

விதை வங்கி மூலதனம் பாரம்பரிய நெல் சமுதாய விதை வங்கிகளை வலுப்படுத்த ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.2000 வழங்கப்பட்டது.அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அறிவியல் மற்றும் பாரம்பரிய ஆராய்ச்சி முன்முயற்சி திட்டத்தின் ஆதரவுடன் பல்கலைக் கழகமாக கருதப்படும் சாஸ்த்ராவின் முயற்சி பாரம்பரிய அரிசி வகைகளுக்கு புத்துயிர் அளித்து, பாதுகாத்து, வகைப்படுத்துகிறது.

இந்த வங்கிகளின் செயல்பாட்டுக் கொள்கைகளில் இன-சுற்றுச்சூழல் அறிவின் நினைவக வங்கியியல், மருத்துவ அறிவை மேம்படுத்துதல் மற்றும் தொடர்புடைய கலாச்சார நம்பிக்கை மற்றும் அவற்றின் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் சிறப்பு வேளாண் குணங்கள் ஆகியவை அடங்கும்.

 விதை பரிமாற்றத்தை ஊக்குவிக்க பிராந்திய திருவிழாக்கள் உதவுகின்றன. உதாரணமாக, திருவாரூரில் உள்ள CREATE என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த நெல் விதை பரிமாற்றத் திருவிழா ‘நெல் திருவிழா’ பாரம்பரிய நெல் விதை ரகங்களான கருப்பு கவுனி, தூய மல்லி, மாப்பிள்ளை சம்பா, கருங்குருவை மற்றும் பலவற்றை விநியோகிக்க உதவியது.

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை

ரயில்களை கண்காணிப்பதற்காக இந்திய ரயில்வே புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள நிகழ்நேர தகவல் அமைப்பு, ரயில் நிலையங்களில் ரயில்களின் வருகை, புறப்பாடு மற்றும் வழித்தடம் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படும் நேரத்தை தானாக பெறுவதற்காக ரயில் இஞ்சின்களில் பொருத்தப்பட்டு வருகிறது.

 கட்டுப்பாட்டு அலுவலக விண்ணப்பத்தின், கட்டுப்பாட்டு விளக்கப்படத்தில் ரயில்களின் இயக்கம் தானாகவே பெறப்படும். நிகழ்நேர தகவல் அமைப்பானது, 30 விநாடிகள் காலஇடைவெளியில், புதிய தகவல்களை வழங்குகிறது. நிகழ்நேர தகவல் அமைப்பு பொருத்தப்பட்ட இஞ்சின்கள், ரயில்களின் இருப்பிடம், இயக்கப்படும் வேகம் உள்ளிட்டவற்றை எவ்வித தலையீடுமின்றி கண்காணிக்க முடியும்.  21 மின்சார ரயில்களின் 2,700 இஞ்சின்களில் இந்த நிகழ்நேர தகவல் அமைப்பு பொருத்தப்பட்டு வருகிறது.

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் தா.மோ.அன்பரசன்

செஞ்சி மஸ்தான் வழங்கினர்








தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 

செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி கலையரங்கில் 20.09.2022 அன்று குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர்கள் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் மாவட்ட கிருஸ்துவ மகளிர் உதவும் சங்க பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ரா.ராகுல் நாத் இ.ஆ.ப ,அரசு துறை உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்ட மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் பயனாளிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

நமது நிருபர் – K.ஜமாலுதீன் - சென்னை

தேசிய ஊட்டச்சத்து

மாத விழா


ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா மயிலாப்பூரில் அனுசரிக்கப்பட்டது

நமது நிருபர் – K.ஜமாலுதீன் - சென்னை

NIA.வைக் கண்டித்து

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்














NIA.மற்றும் அமலாக்கத்துறை வருமானவரித் துறையை கொண்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களை வஞ்சிக்க நினைத்து மக்கள் பணி செய்யும் அமைப்பினுடைய தேசிய  மாநில மாவட்ட நிர்வாகிகளை எந்த முகாந்திரமும் இன்றி அத்துமீறி கைது செய்த NIA.கண்டித்து திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் 5 மணி அளவில் நடைபெற்றது 

இதில் அனைத்து கூட்டமைப்பு தலைவர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

இமாம் ஹஸ்ஸான்  பைஜி

செய்தியாளர்களுக்கு பேட்டி


திருச்சி மாவட்டாம் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளர் இமாம் ஹஸ்ஸான்  பைஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

ராகுல் காந்தியின்

பாரத் ஜோடோ யாத்திரை

இந்திய மக்களை ஒன்றிணைக்கும்






இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய பிஏசி தலைவரும், ஐயுஎம்எல் கேரள மாநிலத் தலைவருமான பங்கட் சயீத் சாதிக் அலி ஷிஹாப் தங்கல் சாஹிப் கூறுகையில்,

ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை இந்திய மக்களை ஒன்றிணைக்கும் பயணம். பாரத் ஜோடோ யாத்திரையின் பதினைந்தாம் நாளான நேற்று சாலக்குடியில் நடைபெற்ற நிறைவு கூட்டத்தில்  வருங்கால இந்தியாவின் பாதுகாவலராக இந்திய மக்களால் கருதப்படும் தலைவர் ராகுல் காந்தி. 

ராகுல் காந்தியின் பயணத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்தியாவை வழிநடத்துவது யார் என்ற கேள்விக்கான விடை இந்தப் பயணம். இது மக்களை ஒன்றிணைக்கும் பயணம். பிரிவினை அரசியல் இந்தியாவின் மரபு அல்ல என்றும், இந்தியாவை மீட்கும் பயணம் என்றும் கூறினார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு கேரளாவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

சிறப்பு நிருபர் – A.முஹம்மது ரிஜா - மயிலாடுதுறை