10/12/22

நாளை (13.10.2022)

மின் நிறுத்தம்

செய்யப்படும் பகுதிகள்



திருச்சி மாவட்டத்தில் நாளை (13.10.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் லால்குடி கோட்டம் நத்தம் வாட்டர் ஒர்க்ஸ் உயர் அழுத்த மின் பாதையில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் நத்தம் வடுகர் பேட்டை பழனியாண்டி நகர் மற்றும் வாட்டர் ஒர்க்ஸ் பகுதிகளில் நாளை (13.10.2022) காலை 10 மணி முதல் மதியம் மூன்று மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய லால்குடி கோட்ட செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

தோல் நோய் மற்றும் தலைமுடி

இலவச பரிசோதனை முகாம்



என் லைப் தோல் கிளினிக் & Nax லைப் சயின்ஸ் இணைந்து நடத்தும் இலவச தோல் நோய் மருத்துவ ஆலோசனை மற்றும் தலைமுடி பரிசோதனை முகாம்..

மருத்துவர் : V. நவீன் பாபு

நாள்: அக்டோபர் 13 முதல் 19 வரை (7 நாட்கள் மட்டும்)

நேரம் : காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: Nax Enclave, தில்லைநகர், திருச்சி.

முன்பதிவு அவசியம் :

9047466613 / 0431 7967922/ 8940166613 / 8940266613

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

சுங்கச்சாவடி

ஊழியர்கள் போராட்டம்

பாரதிய ஜனதா ஆதரவு



செங்குறிச்சி மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடியில் 56 பணியாளர்கள் பணி நீக்கத்தை கண்டித்து தொடர்ந்து 11-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களை பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் அசுவத்தமன், தமிழ் இலக்கிய மாவட்ட தலைவர் சவுந்தரராஜன்,கல்வியாளர் பிரிவு மாவட்ட துணை தலைவர் சந்திரசேகரன்,

தரவு மேலாண்மை மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், பிற மொழி பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் மல்லராம்  ஒன்றிய தலைவர் மேற்கு வெங்கடேசன்,ஒன்றிய துணைத் தலைவர் (மேற்கு) ரமேஷ் ஆகியோர் சுங்கச்சாவடி தொழிலாளரின் போராட்டத்திற்கு முழு ஆதரவையும் மற்றும் 56 பணியாளர்களுக்கு பணி வழங்க ஏற்பாடு செய்வதற்கும் உறுதி அளித்தனர்.

நமது நிருபர் R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி

சுங்கச்சாவடி ஊழியர்கள்

 அன்புமணி ராமதாஸ்

நேரில் சந்திப்பு



10-வது நாளாக தொடர்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி ஊழியர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் M.P.,ஐ செங்குறிச்சி சுங்கச்சாவடி ஊழியர்கள் நேரில் சந்தித்து 28 பணியாளர்கள் பணி நீக்கத்தை தெரிவித்தனர்.

அத்துடன் அவரும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக அறிக்கை அளித்து இருப்பதாகவும் அதனை நாங்கள் பின் தொடர்ந்து வருகிறோம் எனவும் வாக்குறுதி அளித்தார்.

நமது நிருபர் R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி

அன்புமணி ராமதாஸ்

பிறந்தநாள்

மரக்கன்று நடப்பட்டது





பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் MP-ன் பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாமக தலைவர் செ.தமிழ்வாணன் தலைமையில் மரக்கன்று நடப்பட்டது.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி நோட்டு பேனா வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள் D.அண்ணாமலை,இரா.அறிவழகன்,R.பாலாஜி,K.மணிராஜ்,R.செல்வகுமார்,P.ஆனந் மற்றும் பாட்டாளி இளைஞர்கள் மாணவ,மாணவிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நமது நிருபர் R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி


மயிலாடுதுறையில்

மனித சங்கிலி



மயிலாடுதுறையில் விடுதலை சிறுதை,ஐ யூ எம் எல் .மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகள்  இயக்கங்களும் கலந்து கொண்டனர்.

சிறப்பு நிருபர் - A.முஹம்மது ரிஜா - மயிலாடுதுறை

 மாணவர்களுக்கான இதழ்

ஊஞ்சல்-தேன்சிட்டு

மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.



பள்ளிக்கல்வித் துறை சார்பில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’ என்ற இதழையும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘தேன்சிட்டு’ என்கிற இதழையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

நமதுநிருபர் - K.ஷாகுல் ஹமீது - திருச்சி

திருச்சி அரசு தலைமை

மருத்துவமனையில்

பிங்க்நிற பலூன்களுடன்

விழிப்புணர்வு பேரணி



தமிழகத்தில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.மேலும் முன்பெல்லாம் 50வயதிற்கு மேற்பட்டோரை தாக்கும் இந்நோயானது தற்போது 30 - 40 வயதுடைய வர்களுக்கும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டு வருகிறது. இதனிடையே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி அண்ணல்காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சக்தி ரோட்டரி கிளப் இணைந்து மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அருண் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்பக புற்றுநோய் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் பிங்க் நிற பலூன்களை கையில் ஏந்தியபடி அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர்கள் மற்றும் பி வி எம் பள்ளி மாணவ மாணவிகள் பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியானது திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் துவங்கி நீதிமன்றம் அருகிலுள்ள எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா வழியாக சென்று மீண்டும் அரசு மருத்துவமனையை சென்று அடைந்தது.

நமதுநிருபர் - K.ஷாகுல் ஹமீது - திருச்சி

திருச்சியில் இன்று(12.10.2022)

காய்ச்சல் முகாம்

நடைபெறும் இடங்கள்


திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களிலும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக குவிந்து வருகிறார்கள்.

காய்ச்சலை தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி திருச்சி மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை, மாலை நேரங்களில் நடக்கிறது.

திருச்சி மாநகரில் இன்று காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் கீழே உள்ள படத்தை பார்க்கவும்.




தக்காளி இறக்கும்

கூலி தொழிலாளர்கள்

வேலை நிறுத்தம்

தக்காளி விலை சில்லறையில் ரூ.100 க்கு விற்பனை



திருச்சி காந்தி மார்க்கெட்டில் தக்காளி இறக்கும் கூலி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தங்களுக்கு ஏற்கனவே ஒன்பது ரூபாய் 75 காசு ஒரு பெட்டிக்கு கூலியாக கொடுக்கிறார்கள். தற்பொழுது 11 வரை வேண்டும் என கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.ஆனால் தக்காளி கமிஷன் வண்டி வைத்திருப்பவர்கள் மூன்று வருடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

பிரச்சனை தொடர்கிறது மேலும் கூலித் தொழிலாளர்கள் வேலையின் போது ஒழுங்கினமாக செயல்படுவதாக கமிஷன் மண்டியை உள்ளவர்களும் வியாபாரிகளும் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

இந்தநிலையில் தற்போது திருச்சியில் தக்காளி விலை சில்லறையில் 80 ரூபாய் ஒரு கிலோ விற்பனையாகிறது. மொத்த வியாபாரம் என்பது இன்று இல்லை இன்று இரவு தக்காளி இறங்காது ஆகவே 100 ரூபாயை தொடும் என வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

தேசிய அஞ்சல் வார விழா

கண்காட்சியை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்




தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகம் சென்று இந்திய கலாச்சாரம் மற்றும் விடுதலை வரலாறு குறித்த தபால் மற்றும் அச்சிடப்பட்ட உறைகளின் சேகரிப்பு குறித்த கண்காட்சியை பார்வையிட்டனர்.

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 9 ஆம் தேதி சர்வதேச தபால் தினமாகக் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப் படுகிறது.

இதன் ஒரு பகுதியாக  திருச்சி மாவட்டம்  திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இந்திய அஞ்சல் துறையின் சார்பில் தேசிய அஞ்சல் வார விழா  இன்று முதல் அக்டோபார் 14ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.  இன்றுமுதல்  பள்ளி மாணவர்கள் தபால் அலுவலகத்தை பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக இன்று தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகம் சென்று பார்வையிட்டனர்.அஞ்சலக உதவியாளர் பிரபு மற்றும் அஞ்சல் தொடர்பு அதிகாரி ஜம்புநாதன் ஆகியோர் மாணவர்களை  வரவேற்றனர்.

திருச்சி தலைமையிட அஞ்சலக  அஞ்சல் அதிகாரிகள் மாணவர்களிடம் பேசியபோது   ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 9ஆம் தேதி சர்வதேச அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது  இதையொட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் 9 முதல் 14 ஆம் தேதி வரை தேசிய தபால் வாரம் அனுசரிக்கப்படுகிறது.

நமது திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபார் 14ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.1874 ஆம் ஆண்டு சர்வதேச போஸ்டல் யூனியன் தொடங்கப்பட்ட தினமே தபால்தினமாக  உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப தபால்துறை வளர்ச்சியடைந்து வருகிறது.

இன்றைக்கு நாம் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் கருத்துகளையும் செய்திகளையும் பகிர்ந்து வந்தாலும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக மக்களை இணைத்து வரும் தபால் துறை இன்றும் பல்வேறு நிலைகளில் வளர்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் TRICHY PHILATELIC BUREAU நடத்தும்  தபால் மற்றும் அச்சிடப்பட்ட முத்திரைகளின் சேகரிப்பு பற்றி எடுத்துக்கூறி  விளக்கினார்.

முதுநிலை அஞ்சல் சேகரிப்பாளர் ரகுபதி அஞ்சல் தலை  சேகரிப்பின் அவசியத்தையும், அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அஞ்சல்தலை சேகரிப்பில் ஈடுபடும்போது மற்ற எல்லாவித செல்போன் விளையாட்டுகளில் இருந்து மாணவர்கள் விலக இது ஏதுவாக இருக்கும் அதுவே பொழுது போக்குகளின் அரசன் என்று கூறினார்.

மேலும் தபால்தலை சேகரிப்பு குறித்த பயிலரங்கம் நடத்தப்பட்டது.  மாணவர்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்த இந்திய அஞ்சல் வரலாறு இந்திய கலாச்சாரம் மற்றும் விடுதலை வரலாறு நீதிகதைகள் ஆகிய தபால்தலை புகைப் படங்களையும்,குழந்தைகள் தின சிறப்பு கடிதங்களையும் கண்டு மகிழ்ந்தனர்.

இந்தியா 2047 (VISION FOR INDIA 2047) என்ற தலைப்பில் தாய் அகார்  கடிதம் எழுதும் போட்டி (DHAI AKHAR LETTER WRITING)  குறித்து விளக்கப்பட்டது

அனைவருக்கும் அஞ்சல் அட்டை வழங்கப்பட்டு இன்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலை எழுதி அருகாமையில் உள்ள அஞ்சலகத்தில்  சேர்க்குமாறு தெரிவிக்கப்பட்டது.

சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் தலைமையில் ஆசிரியைகள் உமா, உஷாராணி இல்லம் தேடிக்கல்வி திட்ட தன்னார்வலர் குழந்தைவேல்  உள்பட திரளான மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

சென்னை பெருநகரப் பகுதி

எல்லை விரிவாக்கம்

மு.க.ஸ்டாலின் தலைமை


சென்னை பெருநகரப் பகுதி எல்லை விரிவாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

நமதுநிருபர் - K.ஷாகுல் ஹமீது - திருச்சி

இருளர் சமுதாயத்தின்

முதல் பெண் வழக்கறிஞர்



இருளர் சமுதாயத்தின் முதல் பெண் வழக்கறிஞர் செல்வி காளியம்மாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

நமதுநிருபர் - K.ஷாகுல் ஹமீது - திருச்சி

மண்டை ஓடு

பூஜை நடத்திய

அகோரிகள்


திருச்சி அரியமங்கலம் உய்யக்கொண்டான் வாய்க்காலை ஒட்டிய பகுதியில் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து நாகமங்கலத்தைச் சேர்ந்த அகோரி மணிகண்டன் என்பவர் கோவிலை கட்டியுள்ளார்.

மேலும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் நள்ளிரவில் பூஜைகளை செய்து வருகின்றனர்.அகோரி மணிகண்டன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து போன தன் தாயின் உடலை அரியமங்கலம் இடுகாட்டில் வைத்து அதன் மீது அமர்ந்து பூஜை செய்தவர்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை நள்ளிரவு அகோரி மணிகண்டன் அவருடன் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அகோரிகள் மண்டை ஓடு உடன் பூஜை நடத்தினார். அப்போது அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும்,சங்குகள் ஊதியும் முழங்கினர்.

 இந்த சத்தத்தினால் கோவில் அருகில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் அகோரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நமதுநிருபர் - K.ஷாகுல் ஹமீது - திருச்சி

பேரிடர் கால அவசர எண்கள்


திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனி பிரிவு அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மை காவல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் பேரிடர் காலங்களில் 24x7 என்ற முறையில் கீழ்கண்ட காவல் அலுவலர்கள் கொண்டு கொண்டு இயங்கவுள்ளது.

பேரிடர் மேலாண்மை காவல் கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள்:

0431-2333249,

0431-2333629,

9498100645

உதவி ஆய்வாளர் செந்தில்குமார்,9498156865

உதவி ஆய்வாளர் கௌதமன் 9498157729,

மு.நி.கா 1979 தீபக் 9498112576

ஆகிய  எண்களுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

பள்ளி மாணவிக்கு பாலியல் மிரட்டல்

தலைமறைவான மாணவியின் தாய் உட்பட 5 பேர் மீது வழக்கு


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் மிரட்டல். தலைமறைவான மாணவியின் தாய் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

திருச்சிமாவட்டம் மருங்காபுரி அருகே அழகாபுரி பகுதியை சேர்ந்த  13 வயது சிறுமி அப்பகுதி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 

சிறுமியின் தந்தை உயிரிழந்ததால் தாய் பழனியம்மாள் தனியாக வசித்து வரும் நிலையில், சிறுமி தனது தாத்தா முருகன் வீட்டில் தங்கி படித்து வருகிறார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கரும்பு காட்டு பகுதியில் சிறுமி ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது கரும்பு காட்டிற்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சின்னதம்பி(எ)சங்கிலி(45), புதுக்கோட்டை மாவட்டம். கவரப்பட்டியை சேர்ந்த அழகர் மகன் தினேஷ்(22),  அழகாபுரியை சேர்ந்த அழகு மகன் சரத்குமார் (24), தனபால் மகன் பாலசந்தர் (23) ஆகிய நான்கு பேரும் சிறுமியை செல்போனில் ஆபாச படம் எடுத்து பாலியல் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் தாத்தா முருகன்  மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதனையறிந்த சின்னதம்பி (எ) சங்கிலி, தினேஷ், சரத்குமார், பாலசந்தர் மற்றும் உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் பழனியம்மாள் ஆகியோர் தலைமறைவாகினர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீசார், தலைமறைவான 5 பேர் மீதும் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

12.படிக்கும் மாணவிக்கு

மாணவன் தாலிகட்டிய சம்பவம்


சிதம்பரம் பஸ் ஸ்டாண்டில் 1 வாரத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம்.