07/21/22

 

காங்கிரஸ் போராட்டம்

கே.எஸ்.அழகிரி கைதாகி

மாலையில் விடுதலை





தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 21/7/22 இன்று வியாழன் காலை 10.30 மணிக்கு சென்னை,எழும்பூர்,ராஜரத்தினம் அரங்கத்திற்கு அருகில் மத்திய அரசின் ஆட்சியை எதிர்த்து  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தலைவர்கள்,காங்கிரஸ் கட்சியின் மாவட்ட,பகுதி தலைவர்கள்,நிர்வாகிகள்,தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அனைவரும் கைதாகி மாலையில் விடுதலையாகினர்.




தகவல் = S.A.N.K.நகீப்கான் - துணை ஆசிரியர்-IBI NEWS

சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் - சென்னைப் பள்ளிகளில் ஆய்வு


தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைபடி, சென்னை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (21-7-2022) பெருநகர சென்னை மாநகராட்சி, தி.ரு.விக நகர் பகுதிக்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி,ஆலோசானை வழங்கி,ஆய்வு மேற்கொண்டார்.சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன்.





சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன்.உடன் தி.ரு.விக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி துணை ஆணையாளர் (கல்வி), மண்டலக்  குழு தலைவர், மற்றும் மாமன்ற உறுப்பினர் பலர்உடன் இருந்தனர்.


 நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி


இளைஞர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி








தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளரும்,பள்ளிக்கல்வித்துறை  அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கும்பகோணம் அணைக்கரை கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை மீட்க துரிதமாக நடந்து கொண்டிருக்கும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் உயிரிழந்த இளைஞர்களின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறி, இளைஞர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் .


 நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி




19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் அறிவிப்பு.




நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மற்றும் ஆசிரியர்கள் நல சங்கம் சார்பில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர்கள் கூறியதாவது:- 

நெல்லையில் டி.டி.டி.ஏ.நிர்வாகத்தின் கீழ் பணி புரியும் பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பல வருடங்களாக பெரும்பாலான ஆசிரியர்கள் ஊதியம் இன்றி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 


பழைய ஓய்வூதியம் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டு பின்னர் 2006-ம் ஆண்டு எங்களுக்கு காலமுறை ஊதியம் வரப்பெற்றது. அந்த தொகுப்பூதிய காலத்தினை பணிக்காலமாக சேர்த்திட வேண்டும். நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறும் கலந்தாய்வினை ரத்து செய்ய வேண்டும். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி பேரூராட்சியில் புதிய ஆவின் பாலகத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார் அமைச்சர்  செஞ்சி மஸ்தான்




நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 காவேரி பாலம் மூடப்படுகிறது. அமைச்சர் கே என் நேரு பேட்டி 



நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

இராணிப்பேட்டையில் கல்வித்துறை ஆய்வு கூட்டம்




இராணிப்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின்   தலைமையில் மண்டல அளவிலான பள்ளி கல்வித்துறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா இ.ஆ.ப., பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் இ.ஆ.ப., ஆகியோரும் சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட-வட்டார கல்வி அலுவலர்களும் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை எடுத்துரைத்தார்கள்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்


திருச்சிராப்பள்ளி மாவட்டவேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 22.07.2022 வெள்ளிக்கிழமையன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ (All Trades), டிப்ளமோ, மற்றும் பட்டப்படிப்பு (B.E. also) முடித்த அனைவரும் (வயது வரம்பு: 18-க்கு மேல் 35-க்குள்) கலந்து கொள்ளலாம். மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்பு (Resume) மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் (22.07.2022) வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகைபுரிந்து பயன்பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி