07/24/22

கே.நவாஸ் கனி M.P.,

சிலம்பம் வீரர்களுக்கு

சான்றிதழ்களை வழங்கினார்







இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நாகுபாண்டி சேர்வைக்காரர் சிலம்பம் அகாடமியின் சார்பில் இரண்டரை மணி நேரம் கண்களை கட்டி சிலம்பம் சுற்றும் நோபல் world record 150 மாணவர்கள் சாதனை படைப்பு விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர்-இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி M.P.,கலந்து கொண்டுசிலம்பம் வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.






அலுவலகம் திறப்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி.Ex.MP.,


நேற்று (23/7/22) மாலை 5 மணிக்கு சென்னை அமீர் மஹால் அருகில் நடைபெற்ற மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர்,சென்னை மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் M.A.B.L., MC அவர்களின் அலுவலகம் திறப்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி.Ex.MP.,திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் பகுதி தலைவர் தீரன் T.M. தணிகாசலம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பகுதி தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













கமுதி அருகே அரசுப் பள்ளிகளுக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை கிராம மக்கள் வழங்கினர்

கமுதி அருகே அரசுப் பள்ளிகளுக்கு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை கிராம மக்கள் வழங்கினர்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 320 மாணவ, மாணவிகளும், ஊரின் மையப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 80 மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர்.

இப்பள்ளிகளுக்கு கிராம மக்கள் சார்பில் ரூ.80 ஆயிரம் மதிப்பில் நுழைவுவாயில், வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், உள்ளிட்ட பகுதிகளில் 12 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.


மாணவர்களையும், பள்ளிக்குள் வந்து செல்லும் நபர்களையும் கண்காணிக்க கிராம மக்கள் கேமராக்களை வழங்கியதாக ராமசாமிபட்டி பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அழகர், முன்னாள் தலைவர் சுரேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.


நமதுநிருபர்- M.ஜமால் முஹம்மது - சென்னை



திருச்சியில் சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவு - அமைச்சர் கே என் நேருஇன்று தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், பெட்டவாய்த்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவினை மக்கள் பயன்பாட்டிற்கு  நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு இன்று தொடங்கி வைத்தார்.








இந்நிகழ்சியில் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர்  பழனியாண்டி, மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோருடன் சித்த மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,






பெருநர சென்னை மாநகராட்சி,44-வது செஸ் ஒலிம்பியாட் மாரத்தான் ஓட்டம் அமைச்சர்கள்,சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்

தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைபடி, பெருநர சென்னை மாநகராட்சி, 44-வது செஸ் ஒலிம்பியாட் மாரத்தான் ஓட்டம்  இன்று (24-07-2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்து மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர்.




நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள்,இளைஞர்கள் மற்றும்  பலர் உற்சாகமாக  கலந்து கொண்டார்கள்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 D Square Technologies

நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்

திருச்சியில் செயல்பட்டு வரும் D Square Technologies நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.









அமெரிக்கா பல்கலைக்கழகத்தின் சார்பாக சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது

சென்னையில் உள்ள தி பிரசிடெண்ட் ஹோட்டலில் அமெரிக்கா பல்கலைக்கழகத்தின் சார்பாக சமூக சேவை புரிந்த பல்வேறு நபர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான டாக்டரேட் பட்டம் வழங்கப்பட்டது. நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் திருச்சியை சேர்ந்த ''திருச்சி காயிதேமில்லத் ஆட்டோ ஸ்டீல்" சங்கத்தின் தலைவர் S.ரபீக் அஹமத் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மற்றும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல்ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் டாக்டரேட் பட்டத்தை பெற்றுக்கொண்ட காட்சி.