இலவசத்தால் நாடு முன்னேறாது
திருச்சியில் சீமான் பேட்டி
திருச்சி விமான நிலையத்தில் கடந்த மே 2018 ஆண்டு ம.தி.மு.க.,வினரும், நாம் தமிழர் கட்சியினரும் மோதிக்கொண்ட வழக்கில், திருச்சி குற்றவியல் 6 ஆம் எண் நடுவர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (18.08.2022)ஆஜரானார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...
அ.தி.மு.க.,வில் நடப்பது உட்கட்சி பிரச்சனை. அதனை அவர்கள் தங்களது பெரிய நாட்டாமை (பிரதமர்மோடி) வைத்து பேசிக் கொள்வார்கள்.
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று 16 ஆண்டு காலம் சிறையிலிருந்த நேருவையும், மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த சாவர்க்கரையும் பிரதமர் மோடி ஒப்பிட்டு பேசியுள்ளார். அது எப்படி சரி. ஆங்கிலேயர்களை எதிர்த்து உண்மையாக போராடிய சுபாஷ் சந்திர போஸ், பகத்சிங் போன்றோர் தான் உண்மையான வீரர்கள். சாவர்க்கர் வீரர் அல்ல எனக் குறிப்பிட்டார்.இலவசங்களால் நாடு ஒரு புள்ளி அங்குலம் கூட வளராது என பதிலளித்தார்.