08/19/22

S.M.பாரூக்-ன் மகன் ரஹிம் மரணம்

காங்கிரஸ் கமிட்டி இரங்கல்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சென்னை கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் S.M.பாரூக்-ன் மகன் ரஹிம் உடல்நலக்குறைவால் இன்று (19/8/22) இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை (20/8/22) ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்  தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துறைமுகம்  தொகுதி 54வது வட்ட காங்கிரஸ் கமிட்டி இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளது.

அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக் கின்றோம் என மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் M.A.B.L., சேப்பக்கம் திருவல்லிக்கேணி பகுதி தலைவர் T.M. தணிகாசலம்

63-வது வட்டம் புதுப்பேட்டை பகுதி தலைவர் பன்னீர்செல்வம்,துணைத்தலைவர் பாலா, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி 63 -வது வட்ட தலைவர் S.நயிப்கான், 114- வது வட்ட தலைவர் ஜமீல், மத்திய சென்னை துறைமுகம் பகுதி தலைவர் வாசிப் உசேன், கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வழக்கறிஞர்  சாகிர் அஹமத் Bcom.,LLB. பகுதி தலைவர் சீனிவாசன் M.A.B.L.,  ஆகியோரும் தனித்தனியே தங்களது இரங்கல் செய்தியினை தெரிவித்துள்ளனர்.

தகவல் = S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர்-IBI NEWS

 பட்டுக்கோட்டை

ஒன்றிய தலைவர்

ஜம் ஜம் அஷ்ரப் அறிக்கை



நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல சங்கத்தின் கிளைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கையும் நாளை (20.08.2022)  சனிக்கிழமை காலை 9 மணி அளவில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அதிராம்பட்டினத்தில் நடைபெறுகிறது

க்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் மத்திய மாநில அரசின் உரிமைகள் என்ன? மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன சலுகைகள் அரசு வழங்குகிறது? அதை எப்படி அணுகுவது? மாற்றுத்திறனாளிகள் உடைய தேவைகள் என்ன? என்பதை அறியவும்,

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை உண்டா? இல்லையா? மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வருகிறதா? இல்லையா?  மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் தேவையா? என்பதை அனைத்தையும் அறிய

எமது சங்கத்தின் கிளை கூட்டமும்,சங்கத்தின் உடைய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்திற்கு அனைத்து நகர தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஊர் ஜமாத்தார்கள், பஞ்சாயத்து தலைவர்கள்,வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைத்து கட்சியின் தலைவர்கள், செயலாளர் அனைவரும் தங்கள் தெருக்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கூட்டத்தில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாற்றுத்திறனாளிகள் வரும்பொழுது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல்,இரண்டு புகைப்படம்,ஆதார் கார்டு நகல் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு தனது அறிக்கையில் ஜம்ஜம் அஷ்ரப் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்து முன்னணியினரை கண்டித்து

எஸ்டிபிஐ சாலை மறியல் போராட்டம்



இந்து முன்னணியினரை கண்டித்து திருச்சி எஸ்டிபிஐ கட்சியினர் பெட்டவாய்த்தலையில் சாலை மறியல் போராட்டம்.

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம்.

ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் சிறுகமணி மேற்கு கிராம அலுவலர்  மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் பெட்டவாய்த்தலை பகுதியில்  எஸ்டிபிஐ கட்சியின் கொடிகம்பத்தை  ஹிந்து முன்னணியின் தூண்டுதலின் பெயரில்  முன்னறிவிப்பின்றி  எடுத்துச் சென்ற அதிகாரிகளை கண்டித்து


பெட்டவாய்த்தலை  பகுதியில் (18.8.2022) மாலை  எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் திருச்சி முபாரக் அலி தலைமையில் பெட்டவாய்த்தலை பேருந்து நிலையம் அருகே  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த சாலைமறியல் போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பிச்சைக்கனி,மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜீத் மற்றும் மதர்.Y.ஜமால்முகமது ஆகியோர்களும்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  தளபதி அப்பாஸ், மர்சூக், சமூக ஊடக அணி மண்டல தலைவர் KSA.ரியாஸ்,  ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும்,ஸ்ரீரங்கம் தொகுதி துணைசெயலாளர் சாகுல் ஹமீது,தொகுதி பொருளாளர் சேக் தாவூத்,பெட்டவாய்த்தலை கிளைத்தலைவர் யாசர் ஆகியோர் ஸ்ரீரங்கம் கிராம  நிர்வாக அலுவலரை கண்டித்தும், காவல்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டு சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்திற்கு தொகுதி,அணி,கிளை நிர்வாகிகளும், செயல் வீரர்களும் கலந்து கொண்டனர்.அனைவரும் கைது செய்யப்பட்டு மஹாலில் அடைத்து வைக்கப்பட்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

திருச்சியில் நாளை (20.08.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்


திருச்சி மாவட்டம் துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (20.08.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை,

ராவுத்தன்மேடு, பெல் நகர்,இந்திரா நகர், பெல் டவுன்ஷிப், சி.ஏ.இ.ஆர் மற்றும் பி.எச் செட்டார், தேசிய தொழில்நுட்பக் கழகம், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, தேவராயனேரி, பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில்

நாளை (20.08.2022) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

டாஸ்மாக் கடைகளை அகற்ற

மக்கள் அதிகாரம் கோரிக்கை





உறையூரில் உள்ள மூன்று டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்.

மக்கள் அதிகாரம் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு.

மக்கள் அதிகாரத்தின் சார்பில் உறையூரில் மூன்று டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்.மேலும் இந்த டாஸ்மாக் கடைகளால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெண்கள் குடிமகன்களால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர் சமீபத்தில் இந்த டாஸ்மாக் கடைகளால் பட்டப் பகலில் கொலையும் நடந்துள்ளது. ஆகவே இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கூறி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது

இந்த இரு மனுக்களின் நகல்களை திருச்சி மாநகர காவல் ஆணையரிடமும் கொடுக்கப்பட்டு அதன் நிலைமையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.மனுவைப் பெற்றுக் கொண்ட துணை ஆணையர் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்

இந்நிகழ்விற்குமக்கள் அதிகாரம் மாநிலத் துணைச் செயலாளர் லே.செழியன் தலைமை ஏற்றார்.மக்கள் கலை இலக்கிய கழகம் மாவட்ட செயலாளர் ஜீவா, கலைக்குழு செயலாளர் லதா,விடுதலை சிறுத்தைகள் சார்பில் தில்லை முரசு, மக்கள் உரிமை கூட்டணி சார்பில் காசிம்,மக்கள் உரிமை மீட்பு இயக்கம் சார்பில் காஜா முஹம்மது,ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட தலைவர் முத்துக்குமார்,ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பாலு,செல்வராஜ்ஆகியோர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

நியூயார்க் பத்திரிகையாளர்
இந்திய துறவியிடம் பேட்டி...


நிருபர் :

ஐயா உங்களுடைய முந்தய சொற்பொழிவில் "தொடர்பு" மற்றும் "இணைப்பு" என்பது பற்றி பேசினீர்கள், அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாக இருந்தது.

சற்று விளக்கி சொல்ல முடியுமா? என்றார்.


துறவி

புன்முறுவலோடு

நிருபர் கேட்ட கேள்வியிலிருந்து

விஷயத்தை  திசைதிருப்புகின்ற விதமாக, அந்த நிருபரிடம் கேள்வி கேட்டார்?,


நீங்கள் நியூயார்க்கில்தான் வசிக்கிறீர்களா?


நிருபர் :

ஆம்.


துறவி :

வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?


இந்த துறவி

என் சொந்த வாழ்வைப் பற்றியும்,

தேவையற்ற கேள்விகளையும் கேட்டு தன்னுடைய கேள்விக்கு பதில் தருவதை தவிர்க்க முயற்சிக்கிறார், என்று நிரூபா் நினைத்தார்,

இருந்தாலும் துறவியின் கேள்விக்கு

"என் தாயார் இறந்து விட்டார்,

தந்தையார் இருக்கிறார்,

மூன்று சகோதரா்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கிறார்,

அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று பதிலளித்தார்


துறவி,..

முகத்திலே புன்னகையுடன்,

நீங்கள் உங்கள் தந்தையுடன் பேசுகிறீா்களா?

என்று மீண்டும் கேட்டார்


இப்போது நி்ரூபா்

சற்று எரிச்சலடைந்து விட்டார்.


துறவி :

கடைசியாக எப்போது அவரிடம் பேசினீா்கள்?


நிரூபர் :

எரிச்சலை அடக்கிக்கொண்டு,

"ஒரு மாதத்திற்கு முன்பு இருக்கலாம்" என்றார்.


துறவி :

உங்களுடைய சகோதர சகோதரிகளை

அடிக்கடி சந்திப்பதுண்டா?

குடும்பமாக சந்தித்தது கடைசியாக எப்போது? என்றார்.


இப்போது அந்த நிரூபரின் நெற்றியில்

வியர்வை தெரிந்தது.


(இதைப் பார்த்தால்

துறவிதான்

நிரூபரை பேட்டி காண்பது போல இருந்தது.)


நீண்ட பெருமூச்சுடன்

நிரூபர் சொன்னார்,

"இரண்டு வருடங்களுக்கு முன்

கிருஸ்துமஸ் சமயத்தில் சந்தித்தோம்" என்று.


துறவி :

எல்லோரும் சேர்ந்து

எத்தனை நாட்கள் இருந்தீர்கள்?


புருவத்தின் மீது வடிந்த வியர்வையை துடைத்தவாறே நிரூபர் "மூன்று நாள்" என்றார்.


துறவி :

உங்களுடைய அப்பாவின் அருகில் அமர்ந்து, அவரோடு  எவ்வளவு நேரம் கழித்தீர்கள்?


இப்போது நிரூபர்

பதட்டத்துடனும் சங்கடத்துடனும்

ஒரு காகிதத்தில் ஏதோ கிறுக்க ஆரம்பித்தார்.....


துறவி :

எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவை சாப்பிட்டீர்களா?

அம்மா இறந்த பிறகு

நாட்களை எப்படி கழிக்கிறீர்கள்

என்று அப்பாவிடம் கேட்டீர்களா?


இப்போது நிரூபரின் கண்களில் இருந்து

கண்ணீர் துளிகள் கீழே விழத் தொடங்கியது.


துறவி அந்த நிருபரின் கைகளை பற்றியவாறு கூறினார்....


"சங்கடப்படாதீர்கள்,

மனம் உடைந்து போகாதீர்கள்,

கவலையும் கொள்ளாதீர்கள்.

தெரியாமல் உங்கள் மனதை நான் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னியுங்கள்.

ஆனால்...

இது தான் நீங்கள் தொடர்பு மற்றும் இணைப்பு பற்றி கேட்ட கேள்விக்கான பதில்.


நீங்கள் உங்களுடைய அப்பாவுடன் தொடர்பில் இருக்கிறீர்கள்.

ஆனால்...


அவரோடு நீங்கள் இணைப்பில் இல்லை.

நீங்கள் அவரோடு இணைக்கப்படவில்லை.

இணைப்பு என்பது இதயத்துக்கும் இதயத்துக்கும் இடையே இருப்பது...

ஒன்றாய் அமர்ந்து, உணவை பகிர்ந்து,...

ஒருவர்மீது ஒருவர் அக்கரை கொண்டு,...

தொட்டுக்கொண்டு,கைகுலுக்கி, கண்களை நேருக்கு நேர் பார்த்து, ஒன்றாய் சேர்ந்து , நேரத்தை செலவிடுவதுதான் இணைப்பு.

(connection). .


நீங்கள், உங்கள் சகோதர சகோதரிகளுடன் தொடர்பில்(contact) இருக்கிறீர்கள்...

ஆனால்...


நீங்கள் யாரும் இணைப்பில் இல்லை என்றார்.

இப்போது நிரூபர்

கண்களை துடைத்துக் கொண்டு,

"எனக்கு அருமையான மற்றும் மறக்க முடியாத பாடத்தை சொல்லித் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா" என்றார்...

இதுதான் இன்றைய வாழ்வின் நிஜமாக இருக்கிறது, வீட்டில் ஆகட்டும் அல்லது சமுதாயத்தில் ஆகட்டும் ஒவ்வொருவரும் நிறைய தொடர்பை வைத்திருக்கின்றனர்.

ஆனால்...

இணைப்பில் இருப்பதில்லை.

எல்லோருமே அவரவர் சொந்த உலகில் மிகவும் பரபரப்பாக இருக்கின்றனர்.

நாம் இதுபோல வெறும் தொடா்பை பராமரிக்காமல், இணைப்பில் வாழ்வோமாக.!

நம்முடைய அன்புக்கு உரிய... அனைவரோடும் அக்கரையோடும்,

அன்பை பகிா்ந்து கொள்வதற்காக நேரத்தை செலவழித்தும் வாழ்வோமாக.

அந்தத் துறவி வேறு யாருமல்ல,

விவேகானந்தா்தான்

தமிழ்நாடு அரசு

சமூக பாதுகாப்புத் துறையில் 

வேலைவாய்ப்பு


தகுதி:டிகிரி & மாஸ்டர் டிகிரி 
விண்ணப்பிக்க கடைசிநாள்: 26-08-2022

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்...

உப்பு சீடை ரெசிபி...


தேவையானப் பொருட்கள்:

பச்சரிசி – 300 கிராம்

பொட்டுக்கடலை மாவு – 2 டீஸ்பூன்

வறுத்து அரைத்த உளுத்தம் மாவு – 2 டீஸ்பூன

ஓமம் – அரை டீஸ்பூன்

கட்டிப் பெருங்காயம் – சிறு துண்டு

வறுத்த வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்

அரைத்த சிவப்பு மிளகாய் விழுது 

தேங்காய்த் துருவல் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவ

சீடை செய்முறை:

பச்சரிசியைக் கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, நிழலில் காய வைக்க வேண்டும்.குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அதை அரைத்து, மாவைச் சலித்து எடுத்துக் கொள்ளுங்கள்.அதேபோல்,பெருங்காயத்தைப் பொடித்து 50 மில்லி நீர்விட்டுக் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது, பச்சரிசி மாவை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து,மிளகுத்தூள் (அ) மிளகாய் விழுது,உப்பு,ஓமம்,எள்,வெண்ணெய்,பொட்டுக்கடலை மாவு,உளுத்தம் மாவு,தேங்காய்த் துருவல் ஆகியவற்றையும்,பெருங்காயக் கரைசலையும் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.பிறகு அந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுத்தால் ஓமம் – உப்பு சீடை ரெடி...

நன்றி :- இந்த நாள் இனிய நாள்-PK.வாட்ஸ்அப் குழு

இளையான்குடி இளைஞர்களுக்கான

இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு

தொடக்க விழா


இளையான்குடி முஸ்லிம் இளைஞர் ஐக்கிய கழக கட்டிடத்தில் நடைபெறும் ஹாஜி Dr.S.E.சேக் அப்துல் காதர் நினைவு கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் இளைஞர்களுக்கான இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பின் தொடக்க விழா 17.08.2022 அன்று மாலை நடந்தது.


தமிழன் பவுண்டேஷன் டிரஸ்ட் இந்த பயிற்சி வகுப்பிற்கான செலவுகளை ஏற்று நிதியுதவி செய்தது. தமிழன் பவுண்டேஷன்  டிரஸ்டின் டிரஸ்டி A. நஜிப் ஹவுத் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.இந்த பயிற்சி வகுப்பில் 12 கல்லூரி மாணவர்களும்.8 பள்ளி மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.

மேலப்பள்ளிவாசல் மானேஜிங் டிரஸ்டி ஹாஜி A.M. காதர்மீரா,டைம் டிரஸ்டின் மானேஜிங் டிரஸ்டி ஹாஜி T.S.H.முசாபர் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தனர்.


தமிழன் பவுண்டேஷன் டிரஸ்டின் மானேஜிங் டிரஸ்டி A.அஜ்மல்கான் ஹவுத் வாழ்த்துரை வழங்கினார்.மேலப்பள்ளிவாசல் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஜமாத் உறுப்பினர்கள் இந்நிகழ்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



தமிழன் பவுண்டேஷன் டிரஸ்டின் பொருளாளர் M.அரபாத் ஹவுத்,B.B.A. ஐக்கிய கழக நூலகக் கட்டிடத்தில் CCTV கேமரா பொருத்துவதற்கு ஏற்படும் செலவுகளை ஏற்றுக் கொள்வதற்கு சம்மதம் தெரிவித்தார்.அதற்காக ஜனாப் M. அரபாத் ஹவுத்-க்கு ஜமாத்தார்கள் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

தகவல் :- S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர்-IBI NEWS