08/24/22

செய்தியாளரை தாக்கி செல்போன் உடைப்பு நளா உணவு விடுதி ஊழியர்கள் அட்டூழியம்

 தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்

திருவண்ணாமலையில் நளா  உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கிய உணவு விடுதி நிர்வாகத்தை  தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் வண்மையாக கண்டிக்கிறது..

திருவண்ணாமலை அண்ணாசாலையில் தங்கும் விடுதியுடன் கூடிய நளா ஓட்டலில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க தீயணைப்பு துறை அலுவலர்கள் அணைத்துக் கொண்டு இருக்கும் போது தகவல் அறிந்து  செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்று செய்தி சேகரித்தும், ஒளிப்பதிவு செய்து கொண்டு இருக்கும் நேரத்தில் ஓட்டல் ஊழியர்கள் செய்தியாளர்களை படம் எடுக்க விடாமல் தடுத்தும் தாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

அப்போது புகைப்படம் எடுத்த உரிமைக்குரல் மாவட்ட செய்தியாளர் அ.தேவராஜன் என்ற தேவாவை 20 க்கும் மேற்பட்ட ஓட்டல் ஊழியர்கள் ஒன்றாக சேர்ந்து தாக்கி செய்தியாளர் தேவாவின் செல்போனை உடைத்துள்ளனர்.

காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் முன்னிலையில் தாக்கி உள்ளனர்.

தீ விபத்து குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கியதால் இந்த தீ விபத்து இயற்கையில் ஏற்படாமல், அரசாங்காத்தை ஏமாற்ற எற்படுத்தப்பட்ட நாடகமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை வந்த பிறகு செய்தி  சேகரிக்க  சென்ற செய்தியாளரை தாக்கிய நளா உணவு விடுதி உரிமையாளர் மற்றும் தாக்குதலில் ஈடுப்பட்ட ஊழியர்கள் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்று மாவட்ட நிர்வாகத்தையும், காவல் துறையையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

செய்தியாளரை தாக்கிய ஓட்டல் நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (TUJ) சார்பில் மாவட்டத்தில் தொடர் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெறும் என்பதை  தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள்  சங்கம் (TUJ) மாநில துனைத்தலைவரும் திருவண்ணாமலை மாவட்ட தலைவருமான என்.இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

தகவல் : ஷாஜஹான் - ஆசிரியர்.மறுமைடைம்ஸ்

குரூப் 1 தேர்வுக்கு

இலவச பயிற்சி
மா.பிரதீப் குமார் தகவல்


திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC-Group-I) தொகுதி 1-ற்க்கான 92 பணிக்காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக் காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 29.08.2022 அன்று முதல் துவங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித் தேர்வர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு பயனடையுமாறும்,

பல்வேறு தேர்வு முகமையால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 700 மணி முதல் 9.00 மணி வரையிலும் வகுப்புகள் ஒளி பரப்பாகும் எனவும் தொலை தூரத்தில் வசிக்கும் இளைஞர்கள் இதனைப் பார்த்து பயனடையுமாறும் கேட்டுக் கொள்ளப் படுகிறது.

மேலும்,பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான மென்பாடக் குறிப்புகள்,சமச்சீர் புத்தகங்களின் மென் நகல் (Satcopy),முந்தைய ஆண்டு வினாத்தாட்கள்,பயிற்சி வகுப்புகளின் காணொளி காட்சிகள் ஆகியவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் https://tamilnaducareerservices.tn.gov.in உள்ளன.இதனை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது. - திருச்சி

18 வயது தேவையில்லை

பருவம் அடைந்தாலே திருமணம்

ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!



பருவமடைந்த முஸ்லிம் பெண்கள் 18 வயது நிரம்பாவிட்டாலும், தாங்கள் விரும்பிய நபரை திருமணம் செய்துகொள்ளலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியில், கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் ஜோடி, தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

தங்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தங்களை பிரிக்க முயல்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜஸ்மீத் சிங் முன்னிலையில் நேற்று (ஆக.23ம் தேதி) நடைபெற்றது. அப்போது, அந்தப் பெண் 18 வயது பூர்த்தி அடையாத சிறுமி என்பதும், இதனால் மணமகன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் சிறுமியின் பெற்றோர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

வீட்டில் தன்னை அடித்து துன்புறுத்தியதால், தான் விரும்பிய நபரை திருமணம் செய்துகொண்டதாக சிறுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் சிறுமிக்கு நீதிமன்றம் சார்பில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், உடலுறவு வைத்ததும், குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதும் தெரியவந்துள்ளது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, முகமதிய சட்டத்தின் கொள்கைகளை மேற்கோள் காட்டினார். அதில், 18 வயது பூர்த்தி அடையாவிட்டாலும், முஸ்லிம் பெண் பருவமடைந்திருந்தாலே திருமணத்திற்கான தகுதியாக கூறப்படுகிறது.

முஸ்லிம் விதிமுறைகளுக்கு உட்பட்டு திருமணமும் நடைபெற்றுள்ளதால், சிறுமி கணவருடன் இருக்கலாம். இதில், பெற்றோர் குறுக்கிடக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், முஸ்லிம் விதிமுறைகளின்படி திருமணம் செய்துகொண்ட பிறகே, இருவரும் விரும்பி உடலுறவில் ஈடுபட்டதால், இது பாலியல் வன்கொடுமை ஆகாது எனவும் குறிப்பிட்டார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

விலைவாசி உயர்வை கண்டித்து

அஞ்செட்டி மக்கள் அதிகாரம்

கண்டன ஆர்ப்பாட்டம்






GST வரி உயர்வு உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச தூக்குக்கயிறு! 

தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று 23.8.2022 கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்செட்டி வட்டார செயலாளர் ராமு தலைமை தாங்கினார்.

GST வரி உயர்வால் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன உரையாக, நாட்றம்பாளையம் பகுதி மக்கள் அதிகாரம் கனகராஜ், மண்டல குழு உறுப்பினர் சரவணன், IYF அமைப்பைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் சொன்னப்பா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சிறப்புரையாக மக்கள் அதிகாரத்தின் மாநில இணைச் செயலாளர் கோபிநாத் உரையாற்றினார் குறிப்பாக ஜிஎஸ்டியால்  மக்கள் படும் துன்ப,துயரங்களையும்,GST வரிவிதிப்பால்  யாருக்கு லாபம் என்பதையும், ஏழை மக்களின் உழைப்பை பிடுங்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரி சலுகையாக அள்ளிக் கொடுப்பதையும் அம்பலப்படுத்தி, GST வரிவிதிப்பை எதிர்த்து போராடி முறியடிக்க வேண்டும் என்பதை விரிவாக உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக வட்டார குழு உறுப்பினர் துரை நன்றியுரை ஆற்றினார்.

சிறப்பு நிருபர் - A.சிராஜுதீன் - தர்மபுரி

தர்மபுரி BSNL அலுவலகம் அருகே மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்













ஜிஎஸ்டி வரி உயர்வு உழைக்கும் மக்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிச தூக்குக்கயிறு,என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் 23.8.2022 அன்று நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக தர்மபுரி BSNL அலுவலகம் அருகே காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவா பென்னாகரம் வட்டார செயலாளர் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின்  திருமலை, இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் இயக்கத்தை சேர்ந்த முனுசாமி, மாலெ புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு பெரியண்ணன்,

சிபிஐ எம் எல் விடுதலை அமைப்பின் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலாளர் பழனி, சிபிஐஎம்எல் மாவட்ட செயலாளர் வில் கிருஷ்ணன்,

மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர், அருண் மற்றும் மக்கள் அதிகாரத்தின் மாநில செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக பென்னாகரம் வட்ட குழு உறுப்பினர் தோழர்.குயில் நன்றி உரையாற்றினார். இடையிடையே ஜிஎஸ்டி க்கு எதிரான முழக்கம் மற்றும் பாடல்கள் இசைக்கப்பட்டது.

சிறப்பு நிருபர் - A.சிராஜுதீன் - தர்மபுரி


இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நடிகர் விக்ரம், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பட குழுவினர் திருச்சி வந்தனர். திருச்சியில் உள்ள புனித வளனார் கல்லூரியில் இத்திரைப்படம் தொடர்பாக அவர்கள் மாணவர்களை சந்தித்தனர். கல்லூரிக்கு வந்த நடிகர் விக்ரம் உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது