09/01/22

கே.என்.நேரு முன்னிலையில்

எம்எல்ஏ பழனியாண்டி

ஆட்சியரிடம் கோரிக்கை மனு



தமிழ்நாடு முதலமைச்சரின்ஆணைப்படி திருவரங்கம் தொகுதிக்கான  நீண்ட நாட்கள் தீர்க்கப்படாத 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின்  முகாம் அலுவலகத்தில் அவரது முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

 உடன் மாவட்ட பொறுப்பாளர் K.வைரமணி மற்றும் மேயர் M.அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

காங்கிரஸ் செயலாளர்

கே.மனோகரன் மறைவு

தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல்

கே.எஸ்.அழகிரி

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கே மனோகரன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும் துயரமும் அடைந்தேன் 

கே மனோகரன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது இரங்கல் செய்தியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

தகவல் - S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் - IBI NEWS

திருச்சியில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்     


திருச்சி மாநகரத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வருகின்ற 02.09.22-ம் தேதியன்று மாலை 2.00 மணிமுதல் 03.09.22-ம்தேதி காலை 06.00 மணிவரை கீழ்கண்டவாறு வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1. துறையூர், அரியலுார், பெரம்பலுார் மற்றும் கடலுார் ஆகிய மார்க்கத்திலிருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் நெ.1 டோல்கேட்டிலிருந்து சென்னை பைபாஸ்ரோடு வழியாக பழைய பால்பண்ணை ரவுண்டானா, TVS டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்திரையர் சிலை, MGR சிலை, அண்ணாநகர் புதுபாலம், சாஸ்திரி ரோடு, கே.டி.ஜங்சன், கரூர் பைபாஸ் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் அடைந்து, பயணிகளை இறக்கி, ஏற்றி பின்னர், கரூர் பைபாஸ் ரோடு, கே.டி. ஜங்சன், சாஸ்திரி ரோடு, அண்ணாநகர் புதுபாலம், MGR சிலை வழியாக மீண்டும் வந்த வழியில் திரும்பி செல்ல வேண்டும்.

2. இலால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லுர் மற்றும் வாத்தலை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் நகர பேருந்துகள் அனைத்தும் புதிய கொள்ளிடம் பாலம், சோதனைச்சாவடி எண்.6, திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, JAC கார்னர் வழியாக ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி பின்னர் இராஜகோபுரம், காந்தி ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, சோதனைச்சாவடி கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும்.

3. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் நகரப்பேருந்துகள் அனைத்தும் மெயின்கார்டுகேட், மேலப்புலிவார்டுரோடு, வெல்லமண்டி, நெல்பேட்டை, தர்பார்மேடு, பால்பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ் ரோடு, Y ரோடு சந்திப்பு. காவல் சோதனை சாவடி எண் - 6, டிரங்க்ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, காந்தி ரோடு, JAC கார்னர், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் அடைந்து பயணிகளை இறக்கி, ஏற்றி மீண்டும்- இராஜகோபுரம், காந்தி ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு.

திருவானைக்கோவில் டிரங்க் ரோடு சோதனைச்சாவடி ன் 6, Y ரோ சந்திப்பு சென்னை பைபாஸ் ரோடு, பால்பண்ணை ரவுண்டானா, TVS டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்தரையர் சிலை, MGR சிலை, அண்ணாநகர் புதுப்பாலம், சாஸ்திரி ரோடு, K.T.சந்திப்பு, மேரிஸ் மேம்பாலம், காந்திசிலை, கல்லூரி சாலை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வரவேண்டும்.

4. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவெறும்பூர், துவாக்குடி செல்லும் நகரப்பேருந்துகள் அனைத்தும் மெயின்கார்டுகேட், மேலப்புலிவார்டுரோடு, வெல்லமண்டி, நெல்பேட்டை, தர்பார்மேடு, பால்பண்ணை ரவுண்டானா, வழியாக திருவெறும்பூர், துவாக்குடி சென்று மீண்டும் பால்பண்ணை ரவுண்டானா, TVS டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்திரையர் சிலை, MGR சிலை, அண்ணாநகர் புதுபாலம், சாஸ்திரி ரோடு, கே.டி. ஜங்சன், மாரிஸ் மேம்பாலம், காந்தி சிலை, கல்லூரி சாலை வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வரவேண்டும்.

5. கோயம்புத்தூர், கரூர் மார்க்கத்திலிருந்து தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் குளித்தலை காவேரிப் பாலத்தில் திருப்பி விடப்பட்டு, முசிறி, நெ.1 டோல்கேட், சென்னை பைபாஸ் சாலை, பால்பண்ணை ரவுண்டானா வழியாக தஞ்சாவூருக்கும், TVS டோல்கேட் வழியாக புதுக்கோட்டைக்கும் செல்ல வேண்டும்.

6. தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து கரூர் செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பால்பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ்ரோடு, காவேரி பாலம்,நெ.1 டோல்கேட், வழியாக முசிறி, குளித்தலை சென்று அங்கிருந்து கரூர் செல்ல வேண்டும்.

விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை முன்னிட்டு வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வாகனப் போக்குவரத்து வழிதடங்களில் மேற்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்தை கடைபிடித்து, சீரான போக்குவரத்து இயங்க பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்திகேயன்   கேட்டுக்கொண்டுள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

 மீலாது விழா கமிட்டி முன்னாள் தலைவர்

மதுரை இப்ராஹிம் மறைவு

S.A.N.K.S நகீப்கான் இரங்கல்


நேற்றைய தினம் நம்மை விட்டு மறைந்த மீலாது விழா கமிட்டி முன்னாள் தலைவர் மதுரை இப்ராஹிம் அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக! கருணையாளன் அல்லாஹ்! அன்னாரின் குற்றம் குறைகள் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி அருள்  புரிவானாக! ஆமீன்! அன்னாரின் குடும்பத்தாருக்கு சிறந்த பகரத்தையும்  பொறுமையையும் கிருபையாளன் அல்லாஹ் தந்தருள்புரிவானாக! ஆமீன்!

இவ்வாறு தமிழ்நாடு இஸ்லாமிய களம் தலைவர் S.A.N.K.S.நகீப்கான் தனது ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துள்ளார்.

புதிய பேருந்து நிலையம்

கே.என்.நேரு ஆய்வு







திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக அரசு மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் இன்று (01.09.2022) நேரில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு பார்வையிட்டார்.

ஆய்வு மேற்கொண்ட போது சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்,திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

 
வெள்ள மீட்பு ஒத்திகை

கே என் நேரு ஆய்வு













திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றிலும்

மண்ணச்சநல்லூர் வட்டம் நொச்சியம் கொள்ளிடம் ஆற்றிலும்

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து நடத்திய வெள்ள மீட்பு ஒத்திகைப் பயிற்சியினை இன்று நேரில் பார்வையிட்டார் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு.

வெள்ளம் ஏற்படும்போது பாதிக்கப்பட்டவர்களை மீட்பதையும் மற்றும் அவர்களுக்கு முதலுதவி அளிப்பதையும்  ஒத்திகைப் பயிற்சியின்போது சிறப்பாக செய்து காட்டிய வீரர்கள் அனைவரையும் பாராட்டினார்.

 இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, மாநகர மேயர் மு.அன்பழகன் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

விருதாச்சலத்தில்

கனமழை


விருதாச்சலத்தில் கனமழை பெய்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

மேலும் சாலைகளில் தண்ணீர் தேக்கமடைந்து சாலைகள் துண்டிக்கப்படும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப் படுகின்றனர்

சிறப்பு நிருபர் - M.அப்துல் ஹமீது - விருத்தாச்சலம்

திருச்சி சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டணம் உயர்வு



தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகின்றது.ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில்.தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டு இன்று செப்டம்பர் 1ல் திருச்சி சமயபுரம், துவாக்குடி  வாழவந்தான் கோட்டை,பொன்மலைப்பட்டி, திருப்பராய்த்துறை, கரூர் மணவாசி,  நாமக்கல், தர்மபுரி,விழுப்புரம், உளுந்தூர்பேட்டை    உள்ளிட்ட 28  சுங்க சாவடிகளில்  இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

பழைய கட்டணத்தை விட தற்போது 15 சதவீத கட்டண உயர்வு என்று கூறப்படுகிறது.கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்களுக்கு ஒருவழி கட்டணமாக 90 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், 10 ரூபாய் உயர்த்தப்பட்டு, 100 ரூபாயாகியுள்ளது. 

பலமுறை பயணம் செய்ய 135 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 150 ரூபாய் செலுத்த வேண்டும், இதில் மாதா கட்டணம் 2660 ரூபாயில் இருந்து, 3045 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இலகு ரக வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணம் 180 ரூபாயாகவும்,  பலமுறை பயணம் செய்ய 265 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணம் ஐந்தாயிரத்து 330 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பேருந்துகளுக்கு ஒருவழி கட்டணம் 355 ரூபாயாகவும்,  பலமுறை பயணம் செய்ய 535 ரூபாயாகவும் சுங்கக் கட்டணம் அதிகரிக்கிறது.மாதாந்திர கட்டணம் 10 ஆயிரத்து 665 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பல அச்சு வாகனங்களுக்கு ஒரு வழிக்கட்டணம் 570 ரூபாயாகவும்,  பலமுறை பயணம் செய்ய 855 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணம் 17 ஆயிரத்து 140 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி


இலால்குடி

ராணுவ வீரர் மரணம்


லடாக்கில் பணியில் இருந்த லால்குடி அருகே நெய்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் ரெமி ஜூலியன் (வயது 43). கடந்த 1999 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த ரெமி ஜூலியன் தற்போது இன்ஜினியரிங் ரெஜிமென்ட் யூனிட்டில் ஹவால்தாராக பணியில் இருந்தார்.

இந்நிலையில் வழக்கம்போல் பணியில் இருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 19ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து அவர் குடும்பத்தினருக்கு ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல் லடாக்கில் இருந்து நேற்று (புதன்கிழமை) விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் நெய் குப்பையில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ரெமி ஜுலியனுக்கு திருமணமாகி ஜான்ஸிராணி என்ற மனைவியும் ஜெனித் ஜோயல்(9) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி