09/05/22

நசீர் அகமது தாயார் மறைவு

சைஃபுல்லாஹ் நேரில் ஆறுதல்

இராமநாதபுரம் மாவட்ட மஜக பொறுப்புப் குழு தலைவர் நசீர் அகமது அவர்களின் தாயார் மறைவு.மாநில துணை செயலாளர் பொறியாளர் சைஃபுல்லாஹ் நேரில் ஆறுதல்


இராமநாதபுரம் மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் நசீர் அகமது அவர்களின் தாயார் நேற்று ( 04-09-2022 )  மரணமடைந்தார். 

மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளர் சைஃபுல்லாஹ் நஸிர் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.  

குவைத் மண்டல ஆலோசகர்.  மு.சீனீ முகம்மது, மலேசியா மண்டல நிர்வாகி பைசல் அகமது, இளையான்குடி நகர துணை செயலாளர் துல்கருணை சிக்கந்தர்,  நகர மருத்துவ சேவை அணி செயலாளர் முஸ்தபா ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல் - இளையான்குடி M.ஷாஜஹான் 

ஆசிரியர் - மறுமைவெற்றி&உண்மைஉணர்வு மாத இதழ்கள்

புதுமைப்பெண் திட்டம்

அமைச்சர் பி.மூர்த்தி

துவக்கிவைத்தார்






தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் துவக்கவிழாவை மதுரை மீனாட்சி அரசு கலைக்கல்லூரியில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கிவைத்தார்.

இந்நிகழ்வில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை மேயர், மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையாளர், தெற்கு மண்டல தலைவர் மா.முகேஷ் சர்மா, மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, மாமன்ற உறுப்பினர் லோகமணி ரஞ்சித்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் மாணவிகள் கலந்துகொண்டனர்.

நமது நிருபர்சென்னை ஷேக் அப்துல்லா

இளையான்குடி புதூர் அப்துல் ரகுமான் மறைவு தமிழ்நாடு இஸ்லாமிய களம் தலைவர் S.A.N.K.S.நகீப்கான் இரங்கல்

அப்துல் ரகுமான்
இளையான்குடி புதூர்

இளையான்குடி புதூர் கருவாட்டு சுல்தான் மகன் நாகூர் மீரான், லியாகத்அலி, கமால்பாஷா, மூஸா, சாகுல் ஆகியோரின் சகோதரர் 

அப்துல் ரகுமான் இன்று சென்னையில் காலமானார்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

யா! அல்லாஹ்! அன்னாரின் குற்றம் குறைகள் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தை வழங்கி அருள் புரிவாயாக! ஆமீன்!

ஜனாஸா இருக்குமிடம் :33/34 மசூதி தெரு,சேப்பாக்கம், சென்னை-5

நல்லடக்கம் :நாளை காலை 9 மணிக்கு சென்னை  ராயப்பேட்டை கபர்ஸ்தானில்

அவரைப் பிரிந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வ.உ.சி  151- வது பிறந்தநாள்

கே.என்.நேரு

மாலை அணிவித்து மரியாதை





செக்கிழுத்த செம்மல் என அனைவராலும் போற்றப்படும் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151- வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், சௌந்தர பாண்டியன், பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன்,மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆகியோருடன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

"புதுமைப் பெண்"திட்டம்

மு.க.ஸ்டாலின் தொடக்கம்

613 மாணவிகளுக்கு

கே.என்.நேரு வழங்கினார்













அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில ஊக்கப்படுத்தும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் என்ற "புதுமைப் பெண்"  திட்டத்தை சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். 

அதன் தொடர்ச்சியாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 6500 மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட உள்ள நிலையில், திருச்சி கலையரங்கில்  நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு, முதற்கட்டமாக 613 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ்  வங்கி பற்று அட்டைகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு இன்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், இனிகோ இருதயராஜ், அப்துல் சமது, மேயர் அன்பழகன், ஆகியோருடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

திரைத்துறையினருக்கு விருதுகள்

தமிழக அமைச்சர்களால்

வழங்கப்பட்டது





தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட திரைப்படத்தினை சார்ந்த திரைத்துறையினரை கெளரவிக்கும் விதமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைத்துறையினருக்கு ஆறு ஆண்டுகளுக்கான விருதுகள் நேற்று (04.09.2022) அமைச்சர் பெருமக்களால் கலைவாணர் அரங்கில் வழங்கப்பட்டது.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

சாரநாதன் பொறியியல் கல்லூரியில்

ஆசிரியர் தினவிழா


திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் கல்லூரியின் செயலாளர் ரவீந்தர்,டாக்டர் எஸ் நடராஜன்  தலைமை R&D,கல்லூரி முதல்வர் டாக்டர் வளவன், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- R.நவாப் கான் - திருச்சி

திருச்சியில் நேற்று(04.09.2022) பெய்த

மழை அளவு விவரம்


திருச்சி மாவட்டத்தில் பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கல்லக்குடியில் 1.20 மி. மீட்டர், புள்ளம்பாடியில் 12.20 மி.மீட்டர், லால்குடி1.20 நந்தியார் ஹெட் 13.20 மி.மீட்டர், பொன்னையார் டேம் 7.20 மி.மீட்டர் மழை பதிவானது.அதேபோல், மருங்காபுரி 6.20 மி.மீட்டர், புலிவலம் 10 மி.மீட்டர், நவலூர் குட்டப்பட்டு 29.40 மி.மீட்டர், துவாக்குடி ஐஎம்டிஐ 44.10 மி.மீட்டர், கொப்பம்பட்டி 30.00 மி.மீட்டர், தேன்பரநாடு 59 மி.மீட்டர், துறையூர் 27 மி.மீட்டர், பொன்மலை 38.60 மி.மீட்டர், திருச்சி விமான நிலையம் 82மி.மீட்டர், திருச்சி ஜங்ஷன் 58 மி.மீட்டர், திருச்சி டவுன் 57மி.மீட்டர் ஆகிய அளவுகளில் மழை பெய்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

 திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 497.30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 20.72ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது. என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது

நமதுநிருபர்- R.நவாப் கான் - திருச்சி


பாரதிய ஜனதா கட்சி 2024 இல் ஆட்சியில் இருக்காது என ஆடுதுறையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் இல்ல திருமண விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மைதீன் திட்டவட்ட பேட்டி

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

பி.எஸ்.ஆர் டிரஸ்ட்

ஏழாம் ஆண்டு நிறைவு விழா



பிஎஸ்ஆர் டிரஸ்ட் ஏழாம் ஆண்டு நிறைவு விழா -250 குழந்தைகளுக்கு ‌ ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கி கொண்டாட்டம்

பிஎஸ்ஆர் டிரஸ்ட்7ஆம் ஆண்டு நிறைவு நாளையொட்டி கொடுத்து உண் திட்டம் மூலம் திருச்சி மேல கல்கண்டார்கோட்டை பகுதியில் செயல்படும் மகாலட்சுமி கல்வி அறக்கட்டளையிலுள்ள 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள 250 பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்வில் பிஎஸ்ஆர் டிரஸ்ட் நிறுவனர் ஷேக் அப்துல்லாஹ், செயலாளர் காயத்ரி ராஜ், நிர்வாக உறுப்பினர்கள் வேணுகோபால் , மருத்துவர் ராகவி ஜெயவர்த்தினி, மகாலட்சுமி கல்வி அறக்கட்டளை நிறுவனர் முரளிதரன் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

ஆடுதுறையில்

IUML மாநில துணைச் செயலாளர்

இல்லத் திருமணம்





ஆடுதுறையில்...தாய்ச்சபை முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் இல்லத் திருமணம் ....

ஆடுதுறை ஜமால் மைதீன் பாப்பா பேரன் ஜமால் முஹம்மது தமீஸ்---- இர்ஃபானா தஸ்னீம் தம்பதிகள் நிகாஹ் விழாக்கோலம்.

ஆடுதுறை நகரில் பச்சிளம் பிறைக்கொடி பசுமை காட்சி....

தேசிய, மாநில தலைவர்கள் ,மாவட்ட, நகர நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து.....

தொண்டர்கள்  திரண்டு , தலைவர்களை வரவேற்று அழைத்து சென்ற வாகன அணிவகுப்பு.

சிறப்பு நிருபர்- இஜாஸ் அலி - மயிலாடுதுறை

பத்திரிகையாளர் ஜி.அப்துர் ரஹீம் மரணம் சிராஜுல்ஹஸன் இரங்கல்

பத்திரிகையாளர்
ஜி.அப்துர் ரஹீம்

அன்பு நண்பரும், ஆழமான பேச்சாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளரும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தின்  சென்னை மாநகரத் தலைவராகவும் இருந்து அரும்பணியாற்றிய ஜி.அப்துர் ரஹீம் இறப்பெய்தினார் எனும் செய்தி பெரும் துயரத்தை அளித்தது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

 சமரசத்திற்கு ‘விடியல்’ தந்தவர்

சமரசம், மானுட வசந்தம் போன்ற இயக்கத்தின் ஊடகப் பிரிவுகள்  ஒரு கூரையின் கீழ் இயங்கவேண்டும் என்பதற்காக “கிரியேடிவ் கம்யூனிகேஷன் சென்னை”(CCC) எனும் துணை நிறுவனம் தனி சட்ட திட்டங்களுடன் உருவாக்கப்பட்டது.

CCC  தலைமை நிர்வாகியாக ஜி. அப்துர் ரஹீம் அவர்கள் நியமிக்கப்பட்ட பிறகுதான் சமரசம் அலுவலகத்திற்கு விடிவு காலம் பிறந்தது.

ஒரு பத்திரிகை அலுவலகத்திற்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு அவருடைய வருகை புது நம்பிக்கை அளித்தது.

முதலில் அரதப் பழசான கணினிகளை எல்லாம் அகற்றிவிட்டு சமரசம் ஊழியர்கள் அனைவரின் மேசைகளிலும் நவீன கம்யூட்டர்கள் இடம்பெறச் செய்தார்.

ஆசிரியர்குழுவின் செயல்பாடுகள் அனைத்தையும் கணினிமயம் ஆக்கினார்.பத்திரிகையின் தாள் கொள்முதல், கணக்கு வழக்குகள், சந்தா விவரங்கள் போன்ற அனைத்தையும் கணினியில் பதிவேற்றம் செய்ய வைத்தார்.

என் எழுத்துப் பணிக்கும் உறுதுணையாக இருந்தார்.

மாபெரும் இஸ்லாமியச் சிந்தனையாளர்  மௌலானா  மௌதூதி அவர்கள் கிட்டத்தட்ட 75ஆண்டுகளுக்கு முன்பு, தம்முடைய “தர்ஜுமானுல் குர்ஆன்” இதழில் வாசகர்களின் வினாக்களுக்கு விடையளித்து வந்தார்.

அறிவுக் கருவூலமாய் விளங்கிய அந்தக் கேள்வி- பதில்களை மொழிபெயர்த்து சமரசத்தில் வெளியிட வேண்டும் என்று தீர்மானித்தோம். மொழியாக்கப் பொறுப்பைத் தாமே முன்வந்து ஏற்றுக்கொண்டார் அப்துர் ரஹீம் அவர்கள்.

இவர் சென்னை மாநகரத் தலைவராக இருந்தபோதுதான்  இயக்கம் மாநகரின் பல இடங்களிலும் அறிமுகம் ஆகியது. 

மாநகரப் பணிகளுக்கென்று தனியே அலுவலகம் அமைக்க வேண்டிவந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இஸ்லாமிய வாழ்வியலை ‘ஊருக்கு உபதேசம்’ என்கிற அளவில் இல்லாமல் தம் தனிப்பட்ட வாழ்விலும் கடைப்பிடித்தார். 

அஸர் தொழுகைக்குப் பிறகு,  தம் மகனின் திருமணத்தை மிக எளிய முறையில் பள்ளிவாசலில் நடத்தினார்.ஓர் இனிப்பு, ஒரு சமோசா, ஒரு கோப்பை தேநீர்- அவ்வளவுதான் விருந்து. திருமணம் நிறைவுபெற்றது.

இஸ்லாமிய இயக்கத்திற்குத் தன்னலமற்று அவர் ஆற்றிய பணிகளையும், எதிர்கொண்ட சோதனைகளையும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.இயக்க நிகழ்ச்சியில்தான் அவருடைய இறுதிமூச்சும் பிரிந்திருக்கிறது.

இன்னொரு முக்கியமான செய்தி- அவர் மார்க்கத்தைத் தழுவியவர்.ஜி.அப்துர் ரஹீம் அவர்களை வல்ல இறைவன் தன் நல்லடியார்கள் குழுவில் இணைத்து, உயர் சுவனப் பேறுகளை வாரி வழங்குவானாக.

அவரைப் பிரிந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இயக்கத் தோழர்களுக்கும் இறைவன் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக.

இவ்வாறு சிராஜுல்ஹஸன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் - இளையான்குடி M.ஷாஜஹான் 

ஆசிரியர் - மறுமைவெற்றி&உண்மைஉணர்வு மாத இதழ்கள்

புதிய பேருந்து நிலையம் 

துருக்கி ரபீக்ராஜா ஆலோசனை


நேற்று (4/9/22) இரவு 9மணி அளவில் இளையான்குடி புதிய பேருந்து நிலைய திட்டத்தை ரத்து செய்ய அடுத்தகட்ட நடவடிக்கையை துவங்குவது தொடர்பாக மக்கள் நல கூட்டமைப்பு நிர்வாகிகளும் சமுக ஆர்வளர்களும் பல ஆலோசனைகளை வழங்கினர்.

அதன்படி முதல்கட்டமாக நோட்டிஸ் மூலமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அடுத்ததாக அனைத்து வார்டிலும் தெருமுனை பிரச்சாரம் செய்வது மேலும் அந்தந்த வார்டு மக்கள் மூலமாக வார்டு கவுன்சிலர்களிடம் பஸ் நிலையம் வேண்டாம் என மனுகொடுப்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் கவுன்சிலர்கள் வீட்டு முன்பாக அந்தந்த வார்டு மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவது அடுத்து மக்களை திரட்டி தொடர் தர்ணா போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு  இளையான்குடி மக்கள் நல கூட்டமைப்பு செயலாளர் துருக்கி ரபீக்ராஜா.தெரிவித்துள்ளார்.

தகவல் - இளையான்குடி M.ஷாஜஹான்

ஆசிரியர் - மறுமைவெற்றி&உண்மைஉணர்வு மாத இதழ்கள்