09/07/22

இந்திய தேசிய ஒற்றுமை பயணம்



இந்திய தேசிய ஒற்றுமை பயணம் கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி புறப்பட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து  வழியனுப்பி வைத்தார்.

மேலும் சில காட்சிகள்









தகவல் - S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் - IBI NEWS

திருச்சி காவிரி பாலம் மூடப்படும்

அதிகாரிகள் தகவல்



திருச்சி காவிரி பாலம் வருகிற 10-ஆம் தேதி நள்ளிரவு முதல் மூடப்படும் என அதிகாரிகள் தகவல்

திருச்சி காவிரி பாலம் மிகவும் பழுதடைந்து விட்டது. இரண்டு சக்கர வாகனங்கள் கூட மிகவும் சிரமப்பட்டு அப்பாலத்தில் பயணிக்கின்றன. கடந்த மூன்று மாத காலமாக காவிரி பாலத்தை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையினர் திட்டமிட்டு வந்தனர்.

இந்நிலையில் முதலில் ஆடிப்பெருக்கு விழா வந்ததால் காவிரி பாலம் மூடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்கு அடுத்ததாக காவிரியில் அதிக அளவு நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மூடுவதை தள்ளி வைத்தனர். அது மட்டுமில்லாமல் கடந்த 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று விநாயகர் சிலைகள் காவிரி பாலத்தில் வைத்து கரைக்கப்பட்டன.

இந்நிலையில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய காவிரி பாலத்தில் அதற்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டடுள்ளன.

வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் காவிரி பாலம் ஒரு வழியாக பராமரிப்பு பணிக்காக மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமே அப்பாலத்தில் பயணிக்க அனுமதிக்கப்படும். நான்கு சக்கர வாகனங்கள், கனரக வானங்கள் என அனைத்தும் ஓயாமாரி பகுதி வழியாக சென்று திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ள பழைய காவிரி பாலம் வழியாக மீண்டும் கும்பகோணத்தான் சாலையில் திருவானைக்காவல்,ஸ்ரீரங்கம் பகுதிகளுக்கு வரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இப்பாலத்தில் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு மேலாக பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

முன்னாள் பர்மா பஜார் செயலாளர்

K.A.சாகுல் அமீது மறைவு

IUML பொதுச் செயலாளர்

K.A.M.முஹம்மது அபூபக்கர் இரங்கல்


முன்னாள் பர்மா பஜார் செயலாளர், மண்ணடி சாகிரா மேன்சன் உரிமையாளர், முஸ்லிம் சமுதாயத்திற்காக பாடுபட்டவர் மற்றும் சமூக சேவகருமான கருஞ்சுத்தி K.A.சாகுல் அமீது அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்..

அவரின் மறுமை வாழ்க்கைக்காக துவா செய்வோம்.

இவ்வாறு  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் EX. MLA தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

2998 மாணவ மாணவிகளுக்கு

மிதிவண்டிகள்

அப்துல் சமது MLA வழங்கினார்












மணப்பாறை தொகுதியில் உள்ள 20 மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 2998 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் ரூபாய் 1,51,50,000/ (1கோடியே 51 லட்சத்து 50 ஆயிரம்) மதிப்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி மணப்பாறை சிறுமலர் (Little Flower) மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வில் மாணவ மாணவிகளுக்கு திருச்சி மணப்பாறை தொகுதி MLA அப்துல் சமது மிதிவண்டிகள் வழங்கினார் 

இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர், வட்டாட்சியர், மருங்காபுரி மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், மாவட்ட தலைவர் திருச்சி ஃபைஸ் M.C, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

சாரஸ் மேளா விற்பனை கண்காட்சி கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கிவைத்தார்





தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சாரஸ் மேளா விற்பனை கண்காட்சியானது  கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. சிறப்பு வாய்ந்த இந்த விற்பனை கண்காட்சி நிகழ்வை  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கிவைத்தார், அவரோடு  சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன்,துணை மேயர்சைதை மு.மகேஷ்குமார் மற்றும் அரசு முதன்மை செயலாளர் பெ.அமுதா இ.ஆ.ப என பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

கள்ளக்குறிச்சி கிளியூர் கிராமத்தில் கிளியம்மன் திருவிழா

 1

 2

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துர்பேட்டை அருகே கிளியூர் கிராமத்தில் கிளியம்மன் திருவிழா மிக ஆரவாரமாக நடைபெற்றது

நமது நிருபர்R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி

குண்டர் சட்டத்தில் இருவர் கைது


கடந்த 14.08.22-ம்தேதி திண்டுக்கல் ரோட்டில் உள்ள ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்து, ஹோட்டல் உரிமையாளரை இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தியதாக பெறப்பட்ட புகாரின்பேரில் எதிரி முத்து (எ) முத்துகிருஷ்ணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தும், எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி முத்துகிருஷ்ணன் மீது கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போனை பறித்த வழக்கும், ஒருவரை அரிவாளால் தாக்க முயன்ற வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என விசாரணையில் தெரியவருகிறது.

மேலும், ஸ்ரீரங்கம் பகுதியில் இளைய தலைமுறையினர் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சாவை விற்பனை செய்த சுதாகர் என்பவரை கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் எதிரி சுதாகர் மீது கஞ்சா விற்பனை செய்ததாக 2 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது.

எனவே, எதிரிகள் முத்து (எ) முத்துகிருஷ்ணன் மற்றும் சுதாகர் ஆகியோர்கள் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், கஞ்சா மற்றும் குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் என விசாரணையில் தெரியவருவதால்,

மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்பந்தபட்ட காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

வெள்ளிக்கிழமை (09/09/2022)

காரைக்கால் பந்த்

முஸ்லிம்லீக்ஆதரவு

காரைக்காலில் அப்பாவி சிறுவனின் உயிரிழப்பை கண்டித்து காரைக்கால் Whatsapp போராளி குழு நடத்தும் காரைக்கால் மாவட்டம் தழுவிய பந்திற்கு இந்திய_யூனியன் முஸ்லிம் லீக் தனது முழு ஆதரவை தெரிவிக்கின்றது.

 பாலமணிகண்டனுக்கு நியாயம் வேண்டும்

வணிக பெருமக்கள் வியாபார பெருமக்கள் அனைவரும் இந்த முழு அடைப்பிற்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கின்றது.இனி ஒரு அலட்சிய மரணம் காரைக்கால் அரசு மருத்துவமனையில் நடைபெற கூடாது என்று கூறி, புதுச்சேரி அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு காரைக்கால் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழில்நுட்ப  அணி செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

சிறப்பு நிருபர் – A.முஹம்மது ரிஜா - மயிலாடுதுறை