09/20/22

இந்தியாவில் தயாரிப்போம்

உலகத்துக்காக தயாரிப்போம்

உலகளாவிய ரசாயனம் மற்றும் உரச்சந்தையை வழிநடத்த இந்தியாவின் சொந்த மாதிரியை உருவாக்க வேண்டும் என மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அழைப்பு

ரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் துறையானது, பிரதமர் நரேந்திர மோடியின், ‘இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம்என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஒன்றிசைந்து, இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற முடியும்.

ரசாயனம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் துறையின் 3-வது ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதனைத் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ரசாயனம் மற்றும் உரங்கள் துறையின் இணையமைச்சர் பாக்வந்த் குபாவும் கலந்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மன்சுக் மாண்டவியா, இந்தியாவின் ரசாயனம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் துறையானது, நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் கணிசமான ஆற்றலை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

ரசாயனம் மற்றும் உரங்கள் துறையில், உலகளாவிய சந்தையை வழிநடத்த இந்தியா தனது சொந்த மாதிரியை உருவாக்க வேண்டும்என்று அவர் கேட்டுக் கொண்டார். “உலகளாவிய தேவைகள் மற்றும் சீரமைக்கப்பட்ட தொழில்களின் வளர்ந்து வரும் தேவைகளுடன் இணைந்த எதிர்கால உத்தியை உருவாக்குமாறு நிறுவனங்களையும், ஆய்வுக் குழுவினரையும் அவர் கேட்டுக் கொண்டார். சவால்களை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளதுஎன்றும் அவர் கூறினார்.

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை


புவிசார் குறியீடு பெற்ற

மதுரை மல்லி

மஸ்கட் நகருக்கு ஏற்றுமதி

புவிசார் குறியீடு பெற்ற மதுரை மல்லி மற்றும் பாரம்பரிய மலர்கள் மஸ்கட் நகருக்கு இன்று ஏற்றுமதி செய்யப்பட்டன


புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் ஏற்றுமதியை  அதிகரிக்கும் முயற்சியாக மதுரை மல்லி மற்றும் நிலக்கோட்டை, திண்டுக்கல், மதுரைக்கு அருகே உள்ள பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய  மலர்களான முல்லை, பிச்சிப்பூ, பட்டன் ரோஜா, சாமந்தி, மருக்கொழுந்து, துளசி, தாமரை, பன்னீர் ரோஜா, அல்லி ஆகியவை இன்று மஸ்கட் நகருக்கு  ஏற்றுமதி செய்யப்பட்டன.

 மத்திய அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் காணொலி காட்சி மூலம் கொடியசைத்து அனுப்பி வைக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. 

இந்த நிகழ்ச்சியில், ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதர் பிரவீன் குமார், தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் தோட்டப்பயிர்கள் துறையின் இயக்குநர் ஆர்.பிருந்தா தேவி, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின்  இயக்குநர் அருண் பஜாஜ் மற்றும் அதிகாரிகள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓமன் நாட்டிற்கான துணைத் தூதர் பிரவீன் குமார், மிகப் பெரிய இறக்குமதி நாடான ஓமனுக்கு வேளாண் மற்றும் இதர உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து திறனை இந்தியா கொண்டிருக்கிறது என்றார். அதே சமயம், ஏற்றுமதி செய்யும் நாடு, தேவைப்படும் தரத்தை பின்பற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்காக தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை இயக்குநர் பாராட்டுத் தெரிவித்தார்.தரமான பொருட்களை வழங்கும் ஏற்றுமதியாளர்களுக்கு மாநில அரசு சாத்தியமான அனைத்து உதவிகளை செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வின் போது ஓமனின் தலைநகரான மஸ்கட் நகருக்கு தமிழ்நாட்டிலிருந்து புவிசார் குறியீடு பெற்ற சுமார் 500 கிலோ மதுரை மல்லி மற்றும் பாரம்பரிய மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை

தோல் துறையின் திறன் மேம்பாட்டுக்கான ஸ்கேல் செயலி

தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்

சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஎல்ஆர்ஐ) தோல் துறையின் திறன் மேம்பாட்டுக்கான ஸ்கேல் செயலியை தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்

தோல் தொழில் துறையின் வேலைவாய்ப்புத் தேவைகள், திறன் மேம்பாடு, கற்றல், மதிப்பீடு ஆகியவற்றுக்கு ஓரிடத் தேர்வு வழங்கும். தோல் துறை ஊழியர்களுக்கான திறன் மதிப்பீட்டு சான்றிதழ் (ஸ்கேல்) ஸ்டுடியோ செயலியை சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ நிகழ்ச்சியில், மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார்.

தோல் தொழில் துறையில் பயிற்சி பெறுவோருக்கு வடிவமைத்தல் மற்றும் தயாரித்து அளிப்பதற்காக தோல் திறன் துறை கவுன்சில், இந்த செயலியை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின் அலுவலகத்திலிருந்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்டுடியோ மூலம் இணையதளம் வழியாக வகுப்புகள் நடத்தப்படும். தோல் தொழில் துறையில் ஆர்வம் உள்ள அனைத்து வயதினரும், இந்த ஸ்கேல் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பிரதான், நாட்டில்  தோல் தொழில்துறை பெருமளவு வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும், தற்போது  44 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் துறையில் பணியாற்றி வருவதாகவும் கூறினார். கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை சரியான விகிதத்தில் கலந்து இந்தத் துறையின் வளர்ச்சிக்கு சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ முக்கிய பங்கு வகிப்பதை அவர் பாராட்டினார்.

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் அதிகரிப்பதன் காரணமாக இந்தத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து  பேசிய பிரதான், திறன் பெறுதல், மறு திறன் பெறுதல், திறனை மேம்படுத்துதல் என்பதற்கு முக்கியத்துவம் அளித்து புதுப்பித்துக் கொள்ள அழைப்பு விடுத்தார்.

இந்தத் துறையின் திறன் மேம்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய தேசிய திறன் மேம்பாட்டு கழகமும், சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ-யும் இணைந்து  செயல்படவிருப்பதாக கூறிய அவர், இந்தத் துறையில் பணியாற்றுவோரின்  திறன்களை விரிவுப்படுத்த தேசிய அளவில் திறன் கட்டமைப்பு திட்டத்தை சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ நடத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

 திறன் மேம்பாட்டு அமைச்சகம், சிஎல்ஆர்ஐ, தோல் தொழில் திறன் கவுன்சில், தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் ஆகியவை ஒருங்கிணைந்து சென்னை உட்பட இந்தியா முழுவதும் பொதுவான 10 வசதி மற்றும் திறன் மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. 2025-க்குள் 6 பில்லியன் கைவினைஞர்களை உருவாக்குவது என்ற இலக்கை எட்டுவதிலும் அவர்களின் திறனை மேம்படுத்துவதிலும் மாபெரும் பங்களிப்பை செய்யும்” என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

மேலும் தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு, தொழில் முனைவு ஆகியவற்றுக்கு  ஊக்கம் அளித்து வேலையை உருவாக்குவோராக இந்தத் துறையின் இளம் தொழில்முறையினரை அவர் கேட்டுக் கொண்டார்.

இ-வர்த்தகம் உள்ளிட்ட டிஜிட்டல் வெளியில் கிடைக்கும் வாய்ப்புகளை கைவினைஞர்களோடு இணைத்து கைகோர்க்க வேண்டும் என்று அவர் கூறினார். “கூட்டுறவு மற்றும் குடிசை தொழிலாகவும் உள்ள தோல் தொழில் துறை வளர்ந்து வருகின்ற தொழில்நுட்ப மேம்பாடுகளை சேர்த்து கொள்வது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.சிஎல்ஆர்ஐ போன்ற நிறுவனங்கள் திறன் மேம்பாடு அளிப்பதால் கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், மதிப்பும் உயர்கிறது” என்று பிரதான் குறிப்பிட்டார்.

மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல் முருகன், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், நாட்டில் தோல் தொழில் துறை வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ-யின் பங்களிப்புகளை எடுத்துரைத்தார்.

நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏற்றுமதி வருவாயில் தமிழ்நாடு தோல் தொழில்துறை சிறந்த பங்களிப்பை செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.  “தமிழ்நாட்டில் திறன் வாய்ந்த ஏராளமான மனிதவளம் உள்ளது. இவர்களுக்கு திறன் அளிப்பதில் சிஎல்ஆர்ஐ மாபெரும் பங்களிப்பை செய்து வருகிறது. இளைஞர்களிடையே தொழில் முனைவோரை சிஎல்ஆர்ஐ ஊக்கப்படுத்தி வருவதோடு பல புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் உதவி செய்கிறது.

இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை நோக்கிய அமிர்த காலத்தில் நமது தேசிய இலக்குகளை நனவாக்க இது உதவும்” என்றும் எல்.முருகன் கூறினார்.சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ, உலகத் தரம் வாய்ந்த உற்பத்திப் பொருட்களின்  வர்த்தக மாற்றத்திற்கு  பங்களிப்பு செய்திருப்பதாக அதன் இயக்குநர் கே ஜெ ஸ்ரீராம் தெரிவித்தார்.

இந்திய தோல் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவாக கல்வி சார்ந்த திட்டங்கள், திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் தோல் துறை சார்ந்த கல்வியின் பங்களிப்பு செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், தேசிய திறன் மேம்பாட்டுக் கழக தலைமை செயல் அதிகாரி வேத் மணி திவாரி, சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ-யின் ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் ஹபீப் உசைன், தோல் துறை திறன் கவுன்சில் தலைவர் அக்கீல் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை


ராஜ்நாத் சிங்

எகிப்து அமைச்சர் ஜெனரல் முகமது ஜாகி இருதரப்பு பேச்சுவார்த்தை

எகிப்தின் கெய்ரோவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் முகமது ஜாகி ஆகியோர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

எகிப்து நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் சிறப்பான வரவேற்பு அளித்தது. அதனைத் தொடர்ந்து, இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.  அந்தக் கூட்டத்தில், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது, கலவரங்களை  தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி போன்றவைகள்  விவாதிக்கப்பட்டது.

இந்தியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இரு நாட்டு அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் உலக அமைதிக்காக இந்தியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பங்களிப்பு குறித்து  இருவரும் கருத்து பரிமாற்றம் செய்துகொண்டனர். கொவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட  தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் பகிர்ந்துகொண்டனர்.

மேலும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு குறித்து இரு பாதுகாப்பு அமைச்சர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது.

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை


வக்ஃப் சொத்துக்கள்

மீட்பு நடவடிக்கை தொடரும்

வாரியத்தலைவர் அப்துல் ரஹ்மான்


வக்ஃப் வாரிய சொத்துக்களை மீட்டெடுப்பதற்கு, சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பி இருக்கும் நிலையிலிருந்து நாங்கள் கிஞ்சிற்றும் பின்வாங்கவில்லை அவதூறு பிரச்சாரங்களுக்கு தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தலைவர் M.அப்துல் ரஹ்மான்.Ex M.P.,பதில்.

சிறப்பு நிருபர் – A.முஹம்மது ரிஜா - மயிலாடுதுறை

SDPI கட்சி பொறியாளர் அணி

மாநில செயற்குழு கூட்டம்  



திருச்சியில் மாநிலத் தலைவர் அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது.

பொறியாளர் அணியின் மாநில பொறுப்பாளரும் SDPI  கட்சியின் மாநில செயலாளருமான A.அபுபக்கர் சித்திக் முன்னிலை வகித்தார்.

பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் முகமது பிலால் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பொறியாளர் அணியின்இணையதளத்தை (WWW.SDEW.in) துவக்கி வைத்து பட்டய பொறியாளரான தனது பெயரையும் பொறியாளர் அணியில் பதிவு செய்து கொண்டார்.

பின்னர் பொறியாளர் அணியின் சார்பாக கலந்துரையாடல் நிகழ்வில்  அணியின் மாநில துணை செயலாளர் முகமது அல்தாப்,மாநில பொருளாளர் சேக் முகமது இலியாஸ்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் இளையான்குடி ஷேக் மஸ்தான் மற்றும் திருச்சி N.G.சதாம் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

இதில் பல்வேறு மாவட்ட பொறியாளர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இறுதியாக பொறியாளர் அணி HQ மாநில துணைத்தலைவர் ரஃபி நன்றியுரை ஆற்றினார்).

தகவல் - இளையான்குடி M.ஷாஜஹான் 

ஆசிரியர் - மறுமைவெற்றி&உண்மைஉணர்வு மாத இதழ்கள்

காங்கிரஸ் பிரமுகரின் நிகழ்ச்சியில் கே.எஸ்.அழகிரி







இன்று (20.09.2022) நடைபெற்ற காங்கிரஸ் பிரமுகரின்  நிகழ்ச்சியில் மரியாதை நிமித்தம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி தலைவர் T.M.தணிகாசலம், 63- வது வட்ட தலைவர் S.நயீப்கான் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல் - S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் - IBI NEWS

ஆலங்குடியில் புதிய

கலையரங்கத்திற்கான

அடிக்கல் நாட்டினார்

அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்






ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கி மற்றும் புதிய கலையரங்கத்திற்கான அடிக்கல் நாட்டி சிறப்பித்தார் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

உடன் ஒன்றிய பெருந்தலைவரும்,ஒன்றிய செயலாளர் KPKT.தங்கமணி மற்றும் நகர செயலாளர்  A.பழனிக்குமார் பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

பள்ளிகளை தனித்துவத்துடன் அடையாளப் படுத்தும் வகையிலான இலச்சினையை (Logo) கே.என்.நேரு.வெளியிட்டார்







பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளிகளை தனித்துவத்துடன் அடையாளப்படுத்தும் வகையிலான இலச்சினையை (Logo) நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு.இன்று வெளியிட்டார் 

ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

கலைஞர் நகர்ப்புற

வளர்ச்சித் திட்டம்

அமைச்சர் மெய்யநாதன்

தொடங்கி வைத்தார்







தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கலைஞர் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூபாய் 95.40 இலட்சம் மதிப்பீட்டில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி ஆலங்குடி பேரூராட்சி செட்டி குளத்தை புனரமைத்து குளத்தை சுற்றி நடைபாதை அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார் 

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

மின் கட்டண உயர்வை கண்டித்து

இந்திய கம்யூனிஸ்டு

கட்சியினர் ஆர்ப்பாட்டம்



மின் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி மாநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‌‌ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் மின் கட்டண உயர்வை கண்டித்து  மாவட்ட குழு உறுப்பினர் சண்முகம் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது

ஸ்ரீரங்கம் பகுதியில் சுற்றி தெரியும் மாடு குதிரைகளால் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் இடையூறுகளை தடுக்க கோரியும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோருதல், மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய கோருதல் , உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் CPI மாவட்ட செயலாளர் S.சிவா. AITUC மாவட்ட பொது செயலாளர் க.சுரேஷ், MC மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் க. இப்ராஹீம். CPIபகுதி செயலாளர் S. பார்வதி, தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் A.அன்சர் தின் ஆகியோர் உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் R.சரசு. R .ராஜா. டேவிட் பிரபாகரன். T.இப்ராஹீம். T.சரவணன் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் கருணாகரன் நன்றி கூறினார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

ஊர்க்காவல் படையில் வேலை


திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் தற்சமயம் 35 ஆண் ஊர் காவல் படையினரும், 2 பெண் ஊர் காவல் படையினரும் என மொத்தம் 37 காலி பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. எனவே தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கோரப்படுகிறது.

கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, வயது 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். உயரம் ஆண் 125 சென்டிமீட்டர், பெண் 155 சென்டிமீட்டர். மேற்கண்ட தகுதியுடையவர்கள் திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறிப்பாக எந்த ஒரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்க கூடாது. மேலும் விளையாட்டு வீரர் மற்றும் பேண்ட் வாத்தியம் இசைக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை மற்றும் உடற்பகுதி தேர்வில் தளர்வு வழங்கப்படும்.

விருப்பம் உடைய விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு உரிய சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது ரூபாய் 5 தபால்தலை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உரையுடன் காவல் சார்பு ஆய்வாளர் ஊர்க்காவல் படை அலுவலகம், சுப்பிரமணியபுரம், ஆயுதப்படை வளாகம், திருச்சி 620020, என்ற முகவரிக்கு (27.09.2022) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

திராவிட மாடல் அரசின்

மற்றுமொரு அடையாளம்!






மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை பார்வையிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழி

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

புனித வளனார் கல்லூரி

மாணவர்கள்

குடை பிடித்து விழிப்புணர்வு




அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுக்கவும் தற்கொலைக்கு முயல்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குணப்படுத்தவும், உலக சுகாதார நிறுவனமும் தற்கொலைத் தடுப்புக்கான உலக அமைப்பும்  இணைந்து கூட்டாகப் பணியாற்றுகின்றன. 

குறிப்பாக மன அழுத்தம் மட்டுமே 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது. அதுபோல மது பழக்கத்தினாலும் தவறான முடிவுகளை தேடுகிறவர்கள் பலர். குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவி களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருச்சி புனித வளனார் கல்லூரி கவுன்சிலிங் துறை சார்பில், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. 

தெப்பக்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் குடை பிடித்து விழிப்புணர்வு பாதைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

ஆரோக்கியமான உணவு குறித்த

விழிப்புணர்வு

அடுப்பில்லா சமையல் போட்டி


உணவே மருந்து என்ற வாழ்வியலை கொண்ட நாம் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் ஆரோக்கியமற்ற உணவு முறைகளை பின்பற்றி வருகிறோம் இதனால் பல நோய்கள் ‌ ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளோம்.

ஆரோக்கியமான உணவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அடுப்பில்லா சமையல் என்ற பெயரில் Talam shop மற்றும் அறுசுவை ஆற்றல் இணைந்து நடத்திய அடுப்பில்லா சமையல் போட்டி ‌ கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது.

விதவிதமாகவோ ஒரே மாதிரியாகவோ சாப்பிடும் வழக்கத்துக்கு இடையில் வாரத்தில் ஒரு நாளாவது எளிய உணவைச் சாப்பிடலாம். இதற்காகத்தான் பண்டிகை, விசேஷ நாட்களில் குறிப்பிட்ட சில விரதம் இருக்கும் முறையைப் பலரும் கடைப்பிடித்தனர்.


சமைக்காத உணவுக்கும் நாம் அடிக்கடி இடம் தரலாம். இதனால் ஆரோக்கியம் மேம்படுவதுடன் வழக்கமான உணவிலிருந்து விடுதலை பெறலாம். அடுப்பில்லாமல் செய்யக்கூடிய ‌ உணவு வகைகள் குறித்த சமையல் போட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் ‌ போட்டியானது நடைபெற்றது.


போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் ஆரோக்கியமான அடிப்பில்லா இயற்கை உணவுகளான முட்டைகோஸ் சமோசா,ஹெல்த்தி மயோனிஸ்,வேக வைக்காத இட்லி,தயிர் இல்லா தயிர் சாதம்,குக்கர் இல்லா பிரியாணி,கசகசா அல்வா போன்ற அட்டகாசமான உணவுகளுடன் இப்போட்டி நடந்தது.

இப்போடிக்கு சிறப்பு விருந்தினராக மாஸ்டர் செஃப் டைட்டில் வின்னர் தேவகி கலந்து கொண்டார்.அவர்களுடன் அறுவை ஆற்றல் நிறுவனர் ஆற்றல் சரண்யா இப்போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்தார்.போட்டியில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

இதில் முதல் பரிசு - தீக்ஷித்தா, இரண்டாம் பரிசு - சித்ரா, மூன்றாம் பரிசு - ஜனனி ஆகியோர் பெற்றனர். அறுசுவை ஆற்றல் நிறுவனர் சரண்யா போட்டி குறித்து கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு என்பது இன்றியமையாததாகும்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது போன்ற போட்டிகளை நடத்தி வருகிறோம்.தொடர்ந்து இது போன்ற போட்டிகளை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என்றார்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி