09/26/22

கிணறுகளின்

நீர்மட்டத்தை கண்டுபிடிக்க

ஜல்தூத் செயலி

கிராமத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தை கண்டுபிடிக்க, நாடு முழுவதும் பயன்படுத்துவதற்காக ஊரக வளர்ச்சி அமைச்சகம், “ஜல்தூத் செயலி”யை உருவாக்கியுள்ளது

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், “ஜல்தூத் செயலி”யை உருவாக்கியுள்ளது. இது கிராமத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தை கண்டுபிடிக்க நாடு முழுவதும் பயன்படுத்தப்படும். இதனை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங், புதுதில்லியில் நாளை நடைபெறும் விழாவில், “ஜல்தூத் செயலி”யை அறிமுகம் செய்து வைக்கவுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர் மட்டத்தை ஆண்டுக்கு இருமுறை (பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய) காலங்களில் அளவிடுவதற்கான வேலைவாய்ப்புக்கு ஜல்தூத் செயலி உதவும். ஒவ்வொரு கிராமத்திலும் போதிய இடங்கள் (2-3) தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.இவை அந்த கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டத்தை அறிய உதவும்.

இந்த செயலியானது, சரியான தரவுகளுடன் பஞ்சாயத்துகளின் பணிகளை எளிதாக்குவதற்கு பயன்படுத்தப்படும். நிலத்தடி நீர் தரவுகள், கிராம பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டங்களின் ஒருபகுதியாக செயல்படுத்தப்படும்.

நீர்நிலைகளை மேம்படுத்தல் மற்றும் புதுப்பித்தல், காடுகள் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு  போன்ற திட்டங்களின் மூலம், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் நீர் மேலாண்மையை செயல்படுத்துவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

பிளாஸ்டிக்கிற்கான

மாற்றுப் பொருள்

மத்திய அமைச்சர் வேண்டுகோள்

பிளாஸ்டிக்கிற்கான மாற்றுப் பொருட்களை ஊக்குவிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முன் வர வேண்டுமென மத்திய அமைச்சர் வேண்டுகோள்



ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் பற்றிய தேசிய கண்காட்சி மற்றும் தொழில் முனைவோருக்கான இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னை அருகே நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது.

இதில் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், விளையாட்டு இளைஞர் நலன் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்,மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை கூடுதல் செயலர் நரேஷ் பால் கங்வார், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறை கூடுதல் தலைமை  செயலர் சுப்ரியா சாஹூ, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை கூடுதல் செயலர் நரேஷ் பால் கங்வார்,  இந்த கண்காட்சி இந்திய மற்றும் தமிழக அரசால் சரியான நேரத்தில் நடத்தப்படுகிறது எனவும், ஒரு முறை உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் என தெரிவித்தார்.

பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்கள் கண்டுபிடித்து அவற்றை ஊக்குவிக்குமாறு உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்டார்டப் நிறுவனங்களை கேட்டுக் கொண்டார். இதுபோன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க நிதி நிறுவனங்கள் முன் வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அப்போது மேடையில் பேசிய தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்,     பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருட்கள் கண்காட்சி இந்தியாவிலேயே முதன்முறையாக இங்கு நடைபெறுகிறது என்றும், புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் போன்றவற்றில் பிளாஸ்டிக் பங்களிப்பும் இருக்கிறது என்றும் பேசினார்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், பிளாஸ்டிக் கழிவுகள்  பிரித்தெடுத்து அகற்றும் ஏற்பாடுகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மேற்கொள்ள  உள்ளதாக தெரிவித்தார். ஆவின் பால் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மட்கும் தன்மையுடைய பைகளை பயன்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மத்திய  சுற்றுசூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் காணொலி காட்சி மூலமாக பேசுகையில், பிளாஸ்டிக்கால் கணினி, செல்போன் போன்ற நன்மைகள் கிடைத்துள்ள போதும், பல தீமைகளுக்கு வழி வகுத்துள்ளது என்றார்.

கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி நடந்த சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாட்டில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருள் கண்டுபிடிப்பதோடு, பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதும் முக்கியமானது என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதை அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றான பொருளான மரம், சணல், மூங்கில் ஆகியவற்றை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

ஒருங்கிணைந்த கடல்சார்

படைகளின் பயிற்சி

இந்திய கடற்படை

கப்பல் பங்கேற்பு



ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் தெற்கு தயார்நிலை செயல்திட்ட வருடாந்திர பயிற்சியில் பங்கேற்பதற்காக ஐ.என்.எஸ் சுனைனா கப்பல் செப்டம்பர் 24 அன்று செஷல்சின் விக்டோரியா துறைமுகத்தை சென்றடைந்தது.

இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பில் இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டை இந்தப் பங்கேற்பு மீண்டும் வலியுறுத்தும். ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் பயிற்சியில் இந்திய கடற்படை கப்பல் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பது கூடுதல் சிறப்பம்சம்.

ஒருங்கிணைந்த கடல்சார் படைகளால் நடத்தப்படும் திறன் கட்டமைப்பு பயிற்சிகளில் சக கூட்டாளியாக இந்தக் கப்பல் கலந்து கொள்ளவிருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிக் குழுவுடன் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் இந்தக் கூட்டு பயிற்சியில் பங்கேற்கும்.

பயிற்சியில் கலந்து கொள்ளும் பிற நாட்டினருடன் கலந்துரையாடல் நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

காவல்துறையின் ஆட்சேபனை

சான்றை பெற புதிய வழி

மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தபட்டுள்ளது.

இதன்படி காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்றை அஞ்சல் நிலையங்களில் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற முடியும்.வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அஞ்சல் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களில் வர உள்ள இந்த வசதி விண்ணப்ப தார்ர்களுக்கு வெளிநாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு உத்தரவாதம் தராது எனவும், மேலும் காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று குறித்த பிரச்சினைகளை தீர்க்க மட்டுமே உதவும் எனவும் சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி எஸ். ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லால்குடி அருகே

பள்ளி வாகன விபத்து

இருவர் காயம்




திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மாந்துறையில் பாரத் நர்சரி என்ற பெயரில் தனியார் பள்ளி உள் ளது. 1994 ம் ஆண்டு துவங்கி இப்பள்ளியில் 89 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இன்று காலை வழக்கம் போல் வேன் டிரைவர் அங்குராஜ் (50 ) பள்ளி வேனில் 5 குழந்தைகள் மற்றும் வேன் உதவியாளர் அகிலா என்பவருடன் மாந்துறை சென்ற போது பம்பரம்சுற்றி பகுதியில் சாலையோர மண்ணில் புதைந்து அருகில் உள்ள நெல் பயிரிட்டுள்ள வயலில் வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த வேன் உதவியாளர் அகிலா 5 ம் வகுப்பு மாணவி சன்மதி (10) ஆகிய இருவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மீதமுள்ள பள்ளி குழந்தைகள் நல்வாய்ப்பாக காயங்களின்றி உயிர் தப்பினர்.

விபத்திற்குள்ளான பள்ளி வாகனத்திற்கு, ஆர்சி புக் இல்லை, பர்மிட் இல்லை, இன்சூரன்ஸ் போன்றவைகளும் இல்லை.அதே போல இப் பள்ளிக்கான அரசின் உரிமம் இந்தாண்டு மே மாதத்துடன் முடிவடைந்தது. இதனை இன்னும் புதுபிக்கவில்லை என்றனர் கல்வித்துறை அதிகாரிகள். 

இச்சம்பவம் குறித்து லால்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

திருச்சி மாநகரில்

வாகன தணிக்கைக்கு

12 பாடி வோன் கேமராஸ்


திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் பொது மக்களின் நலனை பேணிக்காக்கவும் ரோந்து பணி செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அறிவுரை வழங்கி வருகிறார்.

தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழக அரசால் திருச்சி மாநகருக்கு  12 பாடி வோன் கேமராஸ் வழங்கப்பட்டது.

மேற்கண்ட 12 கேமராக்கள் திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி திருச்சி மாநகரத்தில் உள்ள 6 போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு தலா இரண்டு வீதம் வழங்கப்பட்டது.

போக்குவரத்து காவல் நிலை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும்,மேம்படுத்தி சீர் செய்யவும் மேலும் வாகன தணிக்கையின் போது ஏற்படும் இடர்பாடுகளை கேமரா பதிவுகளை கொண்டு சரி செய்யவும்,

சாலை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யும்போது உபயோகப்படுத்தவும், போக்குவரத்து நெரிசல் காணப்படும் இடங்களை கண்டறிந்து கேமரா பதிவுகளை கொண்டு உயர் அதிகாரிகள் ஆய்வு செய்யும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கேமராக்களை கொடுத்து,காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு இதன் பயன்பாடு குறித்து தக்க அறிவுரைகளை வழங்கிள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

மன்மோகன் சிங்

பிறந்த நாள்

ஜ.பி.ஜ.நியூஸ் வாழ்த்து


இன்று பிறந்த நாள் காணும் உலகின் ஒப்பற்ற பொருளாதார மேதையும், தலைச்சிறந்த நிர்வாகியும், அரசியல் ஞானியுமான, பாரத முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் நூறு ஆண்டுக்கும் மேலாக நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

ஜ.பி.ஜ.நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி