09/27/22

க.ஜெயசங்கர்

தலைமையில்

முதலாம் நாள்

நவராத்திரி பூஜை



கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி 13வது வார்டு அன்னை சத்யா தெருவில் ஸ்ரீ பூமாரியம்மன் ஆலயத்தில் தொடர்ந்து 12 ஆண்டு காலமாக நவராத்திரி பூஜை நடைபெற்று வருகிறது.

இந்த வருடம் முதலாம் நாள் நவராத்திரி பூஜை உளுந்தூர்பேட்டை 13 வது நகர்மன்ற கவுன்சிலர்  க.ஜெயசங்கர் தலைமையில் நடைபெற்றது.

நமது நிருபர்R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி

சி.ப.ஆதித்தனார் பிறந்தநாள்

திருநாவுக்கரசர்

ஹஸன் மௌலானா

பங்கேற்பு








இன்று 27.09.22 காலை 11 மணிக்கு  தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் மறைந்த சி.ப. ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டினை போற்றி, அவரை நினைவு கூறும் விதமாக 

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் M.P.,தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் மௌலானா M.L.A,,

 மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மாமன்ற உறுப்பினர் சிவ ராஜசேகரன் MC,, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதி தலைவர் T.M.தணிகாசலம், 63 வது வட்ட தலைவர் S. நயிப்கான் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

தகவல் - S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் - IBI NEWS

திருச்சியில் நாளை(28.09.2022)

மக்களை தேடி மாநகராட்சி

குறைதீர்ப்பு முகாம்


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆணையின்படி, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு அறிவுரையின்படி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் "மக்களைத்தேடி மாநகராட்சி" குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் இறுதி புதன்கிழமையன்று நடைபெறுகிறது. 

 "மக்களைத்தேடி மாநகராட்சி" குறை தீர்க்கும் முகாம் வருகின்ற புதன்கிழமை 28.09.2022-ம் தேதி அன்று மண்டலம் எண்:3 கைலாஷ் நகர், காட்டூர் சி.கே.சுமதி சந்தோஷ் மஹாலில் நடைபெற உள்ளது. இம்மண்டல அலுவலகத்திற்குட்பட்ட 13 வார்டு பகுதி பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக இக்குறைதீர்க்கும் முகாமில் அளித்து  பயன்பெற்றுக்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி


திருச்சியில்

தங்கும் விடுதி

மு.க.ஸ்டாலின் திறப்பு




திருச்சியில் ரூ.4 கோடியே 17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியினை காணொளி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் ரூபாய் 4 கோடியே 17இலட்சத்து 10ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி மற்றும் கூட்ட அரங்கினைத் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று (27.9.22) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்.

இதனையொட்டி திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு ஓட்டலில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் த.இராஜேந்திரன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மத்திய மண்டல மேலாளர் தி.மு.கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் சு.முனிசாமி, மாவட்ட சுற்றுலா அலுவலர் த.ஜெகதீஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

சுற்றுலாவுக்கான

சொர்க்கம் இந்தியா

குடியரசுத் துணைத்தலைவர்

வர்ணிப்பு

சர்வதேச சுற்றுலா தலங்களை காண்பதற்கு முன்பாக முதலில் உள்நாட்டு சுற்றுலா இடங்களை காணவேண்டும் –இந்திய சுற்றுலா பயணிகளுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தல்.

சுற்றுலாவுக்கான சொர்க்கம் என்று இந்தியாவை வர்ணித்த குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், சர்வதேச சுற்றுலா தலங்களை காண்பதற்கு முன்பாக முதலில் உள்நாட்டு சுற்றுலா இடங்களை காணவேண்டும் என்று இந்திய சுற்றுலா பயணிகளை இன்று வலியுறுத்தினார். 

புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2018-19ம் ஆண்டுக்கான தேசிய சுற்றுலா விருதை வழங்கி பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பில் சுற்றுலா முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.  மருத்துவ சுற்றுலா துறையில் இந்தியாவின் மகத்துவமான பங்களிப்பு குறித்து குறிப்பிட்ட அவர், நமது பழமையான முறைகளான ஆயுர்வேதம் மற்றும் யோகா, உலக அளவில் பிரபலமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில், இந்திய சுற்றுலா புள்ளியியல் 2022 என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத்தலைவர் வெளியிட்டார். அத்துடன் GoBeyond:75 Experiences of North India  என்ற மின் புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

ஜப்பான் பிரதமருடன்

பிரதமர் மோடிசந்திப்பு


பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சே அபேயின் மறைவுக்கு பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்.இந்தியா-ஜப்பான் இடையே நல்லுறவை பேணுவதிலும், இந்தோ-பசிபிக் பிராந்தியங்களிடையே திறந்த மற்றும் சுதந்திரமான உறவை வளர்ப்பதிலும் மறைந்த பிரதமர் அபேயின் பங்களிப்புகளை பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

 இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான கருத்துகளை பரிமாறி கொண்டனர். மேலும், உலகளாவிய பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். பல்வேறு துறைகளிலும் பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்த தங்கள் உறுதிப்பாட்டை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை