07/27/22

செஞ்சி - வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்







 விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற"இளைஞர் திறன் திருவிழாவில்" கலந்துகொண்டு வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

இந்நிகழ்வில், ஒன்றிய பெருந்தலைவர்கள், பேரூராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

சதுரங்கப் போட்டி - வெளிநாடு சுற்றுலா செல்லும் மாணவர்களிடம் கலந்துரையாடி வழியனுப்பி வைத்தனர் உதயநிதி ஸ்டாலின்,அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

 சென்னை விமான நிலையத்தில், சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற மாணவர்கள்  சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என முதல்வர் அறிவித்தார். அதன்படி கழக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம்.திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வெளிநாடு சுற்றுலா செல்லும் மாணவர்களிடம் கலந்துரையாடி  அன்போடு வழியனுப்பி வைத்தனர்









இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை  அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 5 கோடியில் கொள்ளிடம் குடிநீரை சுத்திகரிக்கும் நிலையம் விரைவில் செயல்படும் அமைச்சர் கே.என் நேரு பேட்டி 



ஸ்ரீரங்கம் கோவிலுக்கு காணிக்கையாக பெறப்பட்டு, கம்பரசம்பேட்டை கோசாலையில் உள்ள பசு மற்றும் கன்றுகளை, பழங்குடியின சுயஉதவிக்குழுவினருக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அதில், மகளிர் குழுவினருக்கு பசுக்களை வழங்கியபின்,நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பேட்டிளித்தார்.

திருச்சி மாவட்டம், பச்சை மலையில் வசிக்கும் பழங்குடியின மகளிர் சுய உதவி குழுவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கோசாலையில் உள்ள 122 மாடுகள் 70 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு வழங்கப்படும் காவிரி குடிநீர் கலங்கலாக வந்ததால் அதனை சுத்தப்படுத்தும் வகையில் ஏற்கனவே ஸ்ரீரங்கத்தில் ஒரு ஏர் ஹேட்டர் அமைக்கப்பட்டுள்ளது அதேபோல், ஐந்து கோடி ரூபாய் செலவில் மற்றொரு ஏர் ஹேட்டரும் அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு செப்டம்பர் 20 ல் ஒப்படைக்கப்படுகிறது.

மழை மற்றும் போக்குவரத்து இடையூறு காரணமாக சாலை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றத்தால் தாமதம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

44ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி மு.க.ஸ்டாலின் ஆய்வு 



சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளை நடைபெறவுள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிக்கான தொடக்க விழா முன்னேற்பாடு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 மக்களைத் தேடி மாநகராட்சி திட்ட சிறப்பு முகாம்

தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் மக்களை தேடி மாநகராட்சி முகாம்  ஸ்ரீரங்கம் தேவி மஹாலில்    மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று27.07.22 நடைபெற்ற முகாமில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கட்டிட அனுமதி , சொத்து வரி பெயர் மாற்றம் ,சர்வே வரைபட நகல்  உள்ளிட்ட ஆணைகளை வழங்கினார்.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர்  எம்.பழனியாண்டி, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார், முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன்,நகரப் பொறியாளர் பொறுப்பு பி. சிவபாதம் செயற்பொறியாளர்கள் ஜி.குமரேசன்,கே.பாலசுப்பிரமணியன்,ஸ்ரீரங்கம் மண்டல குழு தலைவர்  ஆண்டாள் ராம்குமார்,ஸ்ரீரங்கம் உதவி  ஆணையர் ப.ரவி மற்றும்  மத்திய மாவட்டப் பொறுப்பாளர்  க.வைரமணி, மாமன்ற உறுப்பினர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 திருநெல்வேலி - தாம்பரம் இடையே வாராந்திர ரயில் சேவை

தென்காசி வழியாக  திருநெல்வேலி தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் மாதம் வரை இயக்கப்பட்டது. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த ரயில் ஆகஸ்டு 7 முதல் செப்டம்பர் மாதம் வரை இயக்கப்பட இருக்கிறது. அதன்படி திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (06004) ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 4 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06003) ஆகஸ்ட் 8 முதல் செப்டம்பர் 5 வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.35 மணிக்கு மதுரைக்கும், காலை 10.35 மணிக்கு திருநெல்வேலியும் வந்து சேரும் 

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி  ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.  இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 ரயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.


நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டையில் 70 பயனாளிகளுக்கு 122 மாடுகளை அமைச்சர் கே என் நேரு வழங்கினார் 

திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டையில் உள்ள  ஒருங்கிணைந்த கோசாலையில் , இந்து சமய அறநிலையத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்,  திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பசு மற்றும் காளை மாடுகளை மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு 70 பயனாளிகளுக்கு 122 மாடுகளை நகராட்சி  நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்





 இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மாநகர மேயர் அன்பழகன் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன் உரை



 

இன்று(27.7.22) நடைபெற்ற மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன் கலந்து கொண்டு பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளான குடிதண்ணீர் சாக்கடையில் கலப்பது, தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்பது, சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது, சாலைகளில் குழாய் பதிக்கும் பணி மந்தமாக நடைபெறுகிறது.. அனைத்து பணிகளையும் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று உரையாற்றினார்.


நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

சர்வதேச ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்



சர்வதேச ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ், சென்னை ரோட்டரி இயக்குநர் ஏ.எஸ்.வெங்கடேஷ், செயலாளர் ஸ்ரீராம் துவ்வுரி, சென்னை ரோட்டரி ஆளுநர் டாக்டர் நந்தகுமார் மற்றும் நிர்வாகி சரண்வேல் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலிமு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

மாணவி ஶ்ரீமதி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினால் மட்டும் பத்தாது - தே.மு.தி.க.,பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த் பேட்டி

மாணவி ஶ்ரீமதி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினால் மட்டும் பத்தாது.ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்து உண்மையில் அந்த மாணவி கொலையா அல்லது தற்கொலையா என தெரிய வேண்டும். தமிழக அரசு இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.தே.மு.தி.க.,பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த் பேட்டி;

மதுரையில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தே.மு.தி.க.,பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார்.தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகளின் விலைவாசி உயர்வு குறித்த கேள்விக்கு:

தொடர்ந்து மக்களுக்கு அனைத்து வரிகளும் , விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகிறது. மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பெட்ரோல், டீசல் என விலைவாசி உயர்வு. அதுபோல ஜிஎஸ்டியில் ஏற்கனவே மக்கள் நிறைய வரிகளை கட்டிக் கொண்டுள்ளனர், வருமானத்திற்கு என்ன வழி என்று அரசாங்கம் சிந்திக்க வேண்டும். கொரோனாவில் இருந்து மக்கள் இன்னும் வெளியில் வர முடியவில்லை, வருமானம் இல்லை, 

அரசாங்கத்திற்கான வருமானத்தை மட்டும் அவர்கள் குறிக்கோளாக இருக்கக் கூடாது. பேக் செய்யப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்.அதனால் தே.மு.தி.க.,சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும்.கேப்டன் கூறியது போல இந்த விலைவாசி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

பள்ளி மாணவிகள் தற்கொலை குறித்த கேள்விக்கு:

இது சம்பந்தமாக நேற்று கூட கேப்டன் அறிக்கை விட்டிருந்தார்.மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி புதைக்கப்பட்ட இடத்தில் ஈரம் கூட காயவில்லை.திருவள்ளுரில் ஒரு மாணவி தற்கொலை, தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடைபெறுகிறது. 

இது சம்பந்தமாக சிபிசிஐடிக்கு மாற்றினால் மட்டும் பத்தாது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்து உண்மையில் அந்த மாணவிகள் கொலை செய்யப்படுகிறார்களா? அல்லது தற்கொலையா? என தெரிய வேண்டும். மாணவிகள் உண்மையில் தற்கொலை செய்கிறார்கள் என்றால் அந்த தற்காலைக்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையில் காங்கிரசாரின் போராட்டம் குறித்த கேள்விக்கு:

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாஜக மீது பல்வேறு ஊழல் வழக்குகளை சுமத்தினார்கள்  இன்று பாஜக ஆட்சியில் உள்ளதால் காங்கிரஸ் மீது முன்னாள் போடப்பட்ட ஊழல் வழக்கை தற்போது கொண்டு வருகிறார்கள். ஆளுங்கட்சி முன்னாள் ஆளுங்கட்சி மீது ஊழல் வழக்குகள் போடுவது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் ஒரு விஷயம். யாராக இருந்தாலும் தப்பு செய்தால் தண்டனை பெற்று தான் ஆக வேண்டும். தப்பு செய்திருந்தால் அதற்கான பலனை காங்கிரஸ் அனுபவிக்க வேண்டும். கேப்டன் கூறுவது போல உப்பு தின்னால் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும் தவறு செய்தால் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு சமம்தான். நிச்சயமாக உண்மையில் தப்பு செய்திருந்தால் அவர்களுக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்றார்.


நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

அப்துல்கலாம்க்கு நாம் தமிழர் கட்சி புகழ் வணக்கம் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி விருகம்பாக்கம் தொகுதி சார்பில் 27/07/2022  காலை 09:00 மணியளவில் தொகுதியின் 128 ஆவது வட்டம் நெசப்பாக்கம் வள்ளுவர் சாலை மஞ்சு அடுக்ககம்  அருகாமையில்  அப்துல்கலாம்க்கு புகழ் வணக்கம் செலுத்துகிற நிகழ்வு நடந்தேறியது.. நிகழ்வுக்கு தொகுதிச்செயலாளர் மணிகண்டன் தலைமையேற்று புகழ் வணக்கம் செய்வித்தார்.

நிகழ்வுக் களப்பணி:பிரசாந்த்,அருணாச்சலம்,கார்மேகராசா,நிக்கோலஸ்,கணேஷ்,ராசா,உதயசூரியன்,அன்பழகன்,சாகுல் அமீது ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நிகழ்ந்தது.வட்டச் செயலாளர்கள்,பகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி உறவுகள் கலந்து நிகழ்வு சிறப்பித்தனர்.

நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

 உடலும், மனமும் நலமாக இருந்தால் சமூக நலமும் ஏற்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரை



உடலும், மனமும் நலமாக இருந்தால் சமூக நலமும் ஏற்படும்! விளையாட்டில் வெற்றி-தோல்வி என்பது முக்கியமல்ல! விளையாட வேண்டும் என்ற எண்ணமே உங்களின் வாழ்க்கையை வெற்றி பெறச் செய்யும்!ராணுவ வீரர்கள் எல்லையில் நின்று நமது நாட்டை காக்கின்றார்கள்! விளையாட்டு வீரர்கள் நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கிறார்கள்! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ்,மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் க.நந்தகுமார் இ.ஆ.ப., முதன்மை கல்வி அலுவலர்.ரெ.திருவளர்ச் செல்வி ஆகியோரும், மாணவ செல்வங்களும், ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

  திருச்சி தென்னூர் அருகே பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து -போக்குவரத்து பாதிப்பு



திருச்சி,தென்னூர் அரசமரத்தடி பேருந்து நிறுத்தத்திற்கு சற்று முன்பாக சிவன் கோவில் அருகே 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த அரசு பேருந்து ஒன்று பெரும் பள்ளத்தில் மாட்டிக் கொண்டு சிறிது நேரம் பகுதியளவு சாய்ந்த நிலையில் சாலையின் நடுவே நின்றது.

இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்து சாய்ந்துவிடாமல் சிறிது நேரத்திற்கு பிறகு நிலைநிறுத்தப்பட்டு பள்ளத்தின் வெளியே வந்து சென்றது.பயணிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளத்தின் அருகே நடுநிலைப்பள்ளி இருப்பதால் இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு கவனம் செலுத்தி உடனடியாக சரிசெய்து கொடுத்திட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு


26.07.2022 நேற்று மதுரை மாவட்ட அரசு இராசாசி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சையில் உள்ள நோயாளிகளையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,வணிகவரி  மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டனர் 

மதுரைமாவட்ட ஆட்சித்தலைவர்,சோழவந்தான் சட்டமன்ற  உறுப்பினர்,மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்ஆகியோர் உடன் உள்ளனர்.






நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா
 
மதுரை மாவட்ட அரசு இராசாசி மருத்துவமனை கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,வணிகவரி  மற்றும் பதிவுத்துறை அமைச்சர்,நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர், மதுரை மாநகராட்சி மேயர்,சோழவந்தான், சட்டமன்ற  உறுப்பினர்,மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்,மதுரை மாநகராட்சி துணை மேயர் ஆகியோர் உடன் உள்ளனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில் உண்டியல் திறப்பு

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில் துணைஆணையர்/செயல் அலுவலர் ஆ.அருணாசலம் அவர்கள் முன்னிலையில் 26-07-2022 அன்று இத்திருக்கோயில் மற்றும் 11 உபகோயில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றது. உண்டியல் திறப்பின்போது  விருதுநகர் உதவி ஆணையர் து.வளர்மதி, இத்திருக்கோயிலின் துணைஆணையர்/செயல்அலுவலர் நேர்முக உதவியாளர் ந.யக்ஞ நாராயணன்,  இத்திருக்கோயிலின் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர், மதுரை இந்து சமய அறநிலையத்துறை தெற்கு, சோழவந்தான் ஆய்வர்கள், திருக்கோயில் பணியாளர்கள், மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்துகொண்டார்கள்.





உண்டியல் திறப்பின் பொழுது ரொக்கம் ரூ. 89,87,999 (ரூபாய்  என்பத்தொன்பது இலட்சத்து என்பத்தெழாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்றி ஒன்பது மட்டும்), பலமாற்று பொன் இனங்கள்  404 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 01 கிலோ 680 கிராம் மற்றும் அயல்நாட்டு நோட்டுகள் 373 எண்ணம் வரப்பெற்றுள்ளது..

நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா