08/02/22

கூல் அண்டாவில் தவறி விழுந்த நபர்
பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ காட்சி

மதுரை பழங்காநத்தம் முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த ஆடி வெள்ளிக்கிழமை கூல் தயாரிக்கப்பட்டது.அந்த நேரத்தில் அப்பகுதியை சேர்ந்தமுருகன் என்ற முத்துக்குமார் (வயது 54 ) என்பவர் திடீரென வலிப்பு வந்து கூல் தயாரகி கொண்டிருந்த சூடான பெரிய அண்டாவில்  தவறி விழுந்தார்.


அந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

மதுரை அவனியாபுரத்தில் டூ வீலரை திருடிய இருவர் கைது

அவனியாபுரம் போலீசார் விசாரணை


மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதி சேர்ந்த வாசு என்பவரின் மகன் பாலாஜி இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டின் முன் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இரவில் தூங்க சென்றnர்.பின்னர் காலையில் எழுந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் இதில் மதுரையைச் சேர்ந்த கணேசன் என்பவர் மகன் சதீஷ்குமார்(20) என்பவரும்,அவனியாபுரம் அருணகிரி கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் குரு பிரசாத் (20 )என்பவரும் இணைந்து இரு சக்கர வாகனத்தை திருடியது  தெரிய வந்தது இவர்கள் இருவரையும் அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.

ரயில்வே பயணிகள் தகவல் தொடர்பு மையத்திற்கு இந்தியில் பெயர் எதற்கு?சு.வெங்கடேசன் எம் பி

ரயில்வே வாரியம்,அனைத்து மண்டல ரயில்வே பொதுமேலாளர்களுக்கும் அதிர்ச்சியளிக்கிற ஒரு ஆணையை அனுப்பியுள்ளது.

எல்லா நிலையங்களில் உள்ள ரயில்வே பயணிகள் தகவல் தொடர்பு மையங்களுக்கும் இந்தியில் "சக்யோக்" என்று பெயரிட வேண்டும் என்பதே. (எண்: 2022/TG - IV/17/Enq/01/5/SAHYOG/01.08.2022)

எதற்காக இந்த திடீர் "பெயர் சூட்டல்" என்று புரியவில்லை. நாடு முழுவதும் அவரவர் தாய் மொழியில் இருந்தால்தானே பயணிகள் எளிதாக சேவைகளை பெற இயலும்.

இன்றும் இந்தியாவில் 22 சதவீதமான மக்கள் எழுத்தறிவு பெறாதவர்கள் என்ற நிலை இருக்கும் போது மக்கள் "அந்நியமாக" உணரும் மொழியில் வார்த்தைகளை திணிப்பது அநியாயம் அல்லவா! இது அவர்களை இன்னல்களுக்கு ஆளாக்காதா! பல பயணிகள் கடைசி நிமிடம்தான் இது போன்ற சேவைகளை அணுக முற்படுவார்கள். அவர்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கலாமா? 

இது போன்ற நடைமுறைப் பிரச்சினைகளை கடந்து இந்த முடிவு அலுவல் மொழி விதிகள் 1976 ஐ மீறக் கூடியதுமாகும்.அந்த விதிகள் இந்தி பயன்பாடு பற்றி தெளிவான வரையறைகளை தந்துள்ளது.அது இந்தியா முழுவதும் ஒரே விதிகளை சொல்லவில்லை.மூன்று மண்டலங்கள் ஆக பிரித்து (ஏ, பி, சி என்று) பி, சி மண்டலங்களில் இந்தி கட்டாயம் ஆக்கப்படக் கூடாது  என்று தெளிவாக கூறுகிறது. 

எல்லாவற்றிலும் மேலாக தமிழ்நாட்டுக்கு அந்த விதிகளில் இருந்தே விதி விலக்கு தரப்பட்டுள்ளது.

அலுவல் மொழி விதிகளின் முதல் பகுதி பிரிவு 2 

 "இவ்விதிகள் தமிழ்நாடு மாநிலம்  தவிர இந்தியா முழுமைக்கும் பொருந்தும்" என்கிறது. 

மற்ற மாநிலங்களைப் பொருத்த வரையிலும் கூட விதிகள் எங்கு தகவல் தொடர்புகள் "இந்தியில் கட்டாயம் இருக்க வேண்டும்" அல்லது "இந்தி அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம்" அல்லது "ஆங்கிலத்தில் கட்டாயமாக இருக்க வேண்டும்" என்று முறையே மண்டலங்கள் ஏ, பி, சி என வகைப்படுத்தி விதிகளை வகுத்துள்ளது. ஆனால் ரயில்வே வாரியமோ விசாரணை மையத்தின் பெயர் "சக்யோக்" என்று கட்டாயமாக ("should modify") மாற்றப்பட வேண்டும் என்கிறது. 

அலுவல் மொழி விதிகள் 1976 என்பது விடுதலைக்குப் பிந்தைய 20 ஆண்டு ஆழமான விவாதங்களுக்கு பிறகு உருவான ஆவணம். மொழிப் பன்மைத்துவம் காக்க பல வெகுசன போராட்டங்களும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்த பின்னணியிலும் உருவாக்கப்பட்ட ஒன்று. 

ஆகவே ரயில்வே வாரியத்தின் இந்த ஆணை திரும்பப்பெற வேண்டும்.ரயில் நிலையங்களில் எல்லா தகவல் பலகைகளும் மாநில மொழிகளில் இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்று மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இவ்வாறு சு. வெங்கடேசன் எம் பி செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்

நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த வட்டார புத்தொழில் மைய நிகழ்வில்,மதுரையில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்-பி.மூர்த்தி பங்கேற்பு




சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், மூன்றாம் நிலை நகரங்களில் புத்தொழில் முனைவை ஊக்குவிக்கும் விதமாக மதுரை, திருநெல்வேலி, ஈரோடு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வட்டார புத்தொழில் மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.மதுரையில் இந்த நிகழ்வில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி,மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர்,மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் கலோன்,மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி,துணை மேயர் நாகராஜன்,சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வட்டார புத்தொழில் மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.



சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், மூன்றாம் நிலை நகரங்களில் புத்தொழில் முனைவை ஊக்குவிக்கும் விதமாக மதுரை, திருநெல்வேலி, ஈரோடு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வட்டார புத்தொழில் மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

பெருநகர சென்னை மாநகராட்சி,அடையாறு மண்டலம்,பிருந்தாவன் நகர் பிரதான சாலையில் அமைச்சர் கே.ஏன்.நேரு=மேயர் பிரியா ராஜன் ஆய்வு




தமிழக முதல்வர் அவர்களின்  ஆலோசனைப்படி ,பெருநகர சென்னை மாநகராட்சி,அடையாறு மண்டலம்,வார்டு-175,பிருந்தாவன் நகர் பிரதான சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.ஏன்.நேரு  நேற்று  (01.08.2022) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர்.ஜே.எம்.எச்.ஹசன் மௌலானா,அரசு முதன்மை செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி ,இ.ஆ.ப.,சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார்,இ.ஆ.ப.,சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் மற்றும் பலர்  உடனிருந்தனர்

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

பெருநகர சென்னை மாநகராட்சி,பெருங்குடி மண்டலம் - பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கே.என்.நேரு ஆய்வு




தமிழக முதல்வர் அவர்களின்  ஆலோசனைப்படி ,பெருநகர சென்னை மாநகராட்சி,பெருங்குடி மண்டலம்,வார்டு-188க்குட்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் செல்லும் மழைநீர் கால்வாய்களில்,ஆம்பிபியன் இயந்திரம் கொண்டு ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று (01.08.2022) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை மாநகர மேயர்..பிரியா ராஜன்,சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ்,அரசு முதன்மை செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி ,இ.ஆ.ப,மணடலக்குழுத் தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர் .

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

விருகம்பாக்கம் தொகுதி

நாம் தமிழர் கட்சி

வாழ்த்துச்செய்தி



ஒரே இரத்தம் ! அதே வீரம் !சுதந்திரப் போரின் மாவீரர் எங்கள் பாட்டன் தீர்த்தகிரியான தீரன் சின்னமலை அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய நிகழ்வு.

நிகழ்வில் கலந்து நிகழ்வு துவக்கி மலர்வணக்கம் செய்வித்த மாநில ஒருங்கிணைப்பாளர் த.சா.இராசேந்திரன் அவர்களை மகிழ்வு கொண்டு வாழ்த்துகிறோம்..

நிகழ்வின் சிறப்பாளர்களாக கலந்து  சிறப்புச்சேர்த்த.மூ.தியாகராஜன் (நாடாளுமன்றச் செயலாளர்) மு.ஆனந்த்(மாவட்டச் செயலாளர்) ஆகியோருக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.

களப்பணி செய்திட்ட வட்ட உறவுகள் 

முரளி,அன்பழகன்,சேக் அப்துல்லா,உதயசூரியன் ஆகியோரின் களப்பணியில் மகிழ்கிறோம்.

இவ்வாறு விருகம்பாக்கம் தொகுதி  நாம் தமிழர் கட்சி வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டிருந்தது.


நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

 

நாடாளுமன்றத்தில்

நவாஸ்கனி எம்.பி கோரிக்கை


கருவேல மரங்களை அகற்றி குறுங்காடுகளை ஏற்படுத்த அரசு சிறப்பு திட்டம் வகுத்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.நாடாளுமன்றத்தில் விதி 377 ன் கீழ் நவாஸ்கனி எம்பி கோரிக்கை.

இதுகுறித்து இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி நாடாளுமன்ற மக்களவையில் விதி 377 ன் கீழ் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்ததாவது,

இராமநாதபுரம் மாவட்டம் ஆறுகள் ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்கள் இல்லாத வறண்ட மாவட்டம் ஆகும்.இங்கு கருவேல மரங்கள் அதிகம் இருப்பதால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.

எனவே கருவேல மரங்களை அகற்றிவிட்டு அதிக அளவில் குறுங்காடுகளை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு சிறப்பு திட்டத்தை வகுத்து கூடுதல் நிதியை ஒதுக்கி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதிகளவில் குறுங்காடுகள் ஏற்படுத்த படுவதால்,கருவேல மரங்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டு, நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும்,மழைபொழியும் வாய்ப்புள்ளது.

எனவே ராமநாதபுரம் மாவட்டத்தின் நீராதாரங்களை கருத்தில் கொண்டு அதிக அளவில் குறுங்காடுகள் அமைக்க கூடுதல் நிதியை ஒதுக்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்.பி மக்களவையில் விதி 377 ன் கீழ் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு



தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு 42,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தற்போது 16 கண் மதகு வழியாக 18,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று (01.08.2022) மாலை மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் 42,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி கரையோர கிராமங்களில் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

காவிரி நீர் நிலைகளில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ “செல்பி”எடுக்க அனுமதி இல்லை என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். 

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 

கல்லணை சுற்றுலா சென்றவர்கள் மீது

பொதுப்பணித் துறை தாக்குதல்?

நடவடிக்கை எடுக்குமா அரசு?



நேற்று (31.07.2022) ஞாயிற்றுக்கிழமை கல்லணைக்கு சுற்றுலா சென்றவர்கள் மீது போதையில் பொதுப்பணித் துறையைச் சேர்ந்த கௌதம் என்பவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.அதை பாதிக்கப்பட்டவர்கள் கல்லனை தோகூர் காவல் நிலையத்தில் புகார் செய்தும் புகார் செய்தவர்களிடத்தில் தொலைபேசியை பிடுங்கி அதில் உள்ள வீடியோ தொகுப்பு முழுவதையும் போலீசார் அழித்துள்ளதாகவும்,தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும். சம்பந்தப்பட்டநபரை கைது செய்ய வலியுறுத்தி இன்று (01.08.2022)திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தொடர் சம்பவம் கல்லணையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இதை கண்டும் காணாத நிலையில் தான் தோகூர் போலீசார் உள்ளனர்.இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது?