08/13/22

75 வது சுதந்திரதின பவள விழா

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம்

சேப்பாக்கம் பகுதி காங்கிரஸ்

தொடர் ஊர்வலம்






சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் ஆணைப்படி,தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன், சேப்பக்கம் திருவல்லிக்கேணி பகுதி தலைவர் T.M.தணிகாசலம், 63 வது வட்ட தலைவர் S.நயிப்கான் ஆகியோர்  அறிவுறுத்தலின் படி 75 வது சுதந்திரதின பவள விழாவை முன்னிட்டு சுதந்திரத்தை பெற்று தந்த தியாக தலைவர்களின் நினைவுகளை போற்றும் வகையில்  மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சேப்பாக்கம் பகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் 62,63,144, ஆகிய வட்டங்களிள் பாத யாத்திரை  இன்று காலை 10 மணி முதல் அமீர் மஹால் எதிரில் இருந்து புறப்பட்டு இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் விதமாக  தொடர்ச்சியாக ஊர்வலம் நடைபெற்றது.

S.A.N.K.S.நகீப்கான்-துணை ஆசிரியர்

போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி



திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலக முன்புற சாலையில், ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மனிதச் சங்கிலி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், தலைமையில் இன்று (13.8.22) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியும் , முழக்கங்களை எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இந்த மனிதச் சங்கிலியில், மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன்,  மாநகராட்சி மேயர்  .மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன்,காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி, துணை மேயர் ஜி.திவ்யா, கோட்டத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலெட்சுமி கண்ணன்,மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி,பல்வேறு கல்லூரிகளின் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

கே என் நேரு தலைமையில்

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம்












தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-ன் ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில்  நடந்த இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார் 

இதில், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அ.கணேசமூர்த்தி, கே.சுப்பராயன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.திருமகன் ஈவெரா, சி.கே.சரஸ்வதி, மாநகர மேயர் சு.நாகரத்தினம் ஆகியோருடன் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

திருச்சியில் யானைகள் தின கொண்டாட்டம்




தமிழ்நாடு வனத்துறை திருச்சி வனக்கோட்டம் எம்.ஆர்.பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 8 யானைகள் தனியார் மற்றும் கோவில் யானைகள் நீதிமன்ற உத்தரவின்படி நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சம்பந்தப்பட்ட யானைகளுக்கு தேவையான உணவுகள் வனத்துறை மூலம் வழங்கப்படும் மற்றும் யானை பாகன்கள் மற்றும் காவடிகள் மூலம் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

நேற்று உலக யானைகள் தினத்தை முன்னிட்டு எம்.ஆர் பாளையத்தில் யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. அங்கு உள்ள யானைகளுக்கு மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் பல வகையான பழங்கள் வழங்கப்பட்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட வன அலுவலர்  சம்பத்குமார் உதவி இயக்குனர் உதவி வன பாதுகாவலர் சுப்பிரமணியன் வனசரக அலுவலர் மற்றும் களப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

 நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

திருச்சி குளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த

10 கிலோ கஞ்சா பறிமுதல்





மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ் குமார், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தொடர்ந்து ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சாவை ஒழிக்க அதிரடி சோதனையும் வேட்டையும் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாகவே அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கஞ்சா வியாபாரி வெளி மாநிலத்திற்கு தப்பி ஓடியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று (13.08.2022)திருச்சி ராம்ஜி நகர் அடுத்த சின்ன கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள கோனார் குளத்தில், சமூக விரோதிகள்  கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. ஜீயபுரம் காவல்நிலைய துணை கண்காணிப்பாளர் பரவாசுதேவன் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் அந்தகுளத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது வயல்களிலும், குளக்கரையிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். கஞ்சா பதுக்கிய 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதிகளில் தொடர்ந்து சோதனை நடத்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

தூத்துக்குடி:தொழில் முனைவோர் கண்காட்சி - கனிமொழி MP,அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டனர்















தூத்துக்குடி மாவட்டத்தில் ஏவிஎம் கமலாவேல் மஹாலில் துடிசியா இண்டஸ்ட்ரியல் எக்ஸ்போ கனிமொழி கருணாநிதிMP தலைமையிலும்  அமைச்சர் கீதா ஜீவன்  முன்நிலையிலும் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி  ஆகியோர்கலந்து கொண்ட தொழில் முனைவோர் கண்காட்சி நடைபெற்றது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் 

உற்பத்தியாளர்கள்  பொருள்கள் கண்காட்சி ஆகஸ்ட்12,13,14- மூன்று நாட்கள் நடைபெறுகிறது விற்பனையாளர்கள் தொழில் முனைவோர் உட்பட ஆயிரக்கணக்கான பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி









ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலின்போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் T.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அரசின் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்,தொழில்துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நிவாரணநிதி ரூ 20 லட்சத்திற்கான கசோலையை குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் கூறினர்.

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

பரமக்குடி:போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன்

நவாஸ்கனி எம்பி பங்கேற்பு




தமிழக முதலமைச்சர்-ன் அறிவுறுத்தலின்படி போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நிகழ்வில் பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பனால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட பேரணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே நவாஸ்கனி எம்பி  பங்கேற்றார். 

இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் IAS, இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை IPS, பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

CORBEVAX பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.







தமிழக முதல்வர் - ன் வழிகாட்டுதலின்படி ,COVISHIELD , COVAXIN தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு CORBEVAX பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று(12.08.2022) இராயபுரம்  மண்டலம் ,வார்டு-61க்குப்பட்ட ,எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வின்போது சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் உட்பட,துணை மேயர் மு.மகேஷ் குமார்,சட்டமன்ற உறுப்பினர்.இ.பரந்தாமன்,பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர், பொது சுகாதாரக்குழுத் தலைவர்,மாமன்ற உறுப்பினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

வேளாண் வணிகத்துறைக்கான

Youtube,Facebook,Twitter,Instagram

ஆகிய சமூக வலைதள செயலி

கே.என்.நேரு தொடங்கி வைத்தார்













வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் கடன் வசதி பெறும் திட்டம் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி நேற்று தொடங்கி வைத்தார் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு.

அப்போது, வேளாண் வணிகத்துறைக்கான Youtube, Facebook, Twitter, Instagram ஆகிய சமூக வலைதள செயலியை தொடங்கி வைத்ததுடன் அத்துறையின் சார்பில் அமைப்பட்ட கண்காட்சி அரங்கையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில்,வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, தியாகராஜன், மேயர் அன்பழகன், துணைமேயர் திவ்யா ஆகியோருடன் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார்,அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி