08/14/22

விடுதலைப் பெருவிழா
அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்
கே.நவாஸ்கனி.MP பங்கேற்பு






இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, கவிசேஷபுரம் பகுதியில் நடைபெற்ற விடுதலைப் பெருவிழா எனும் நிகழ்வில் கிறிஸ்தவ சகோதரர்களின் அழைப்பை ஏற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பனுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.கே.நவாஸ்கனி.MP பங்கேற்றார்.நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையும் வலியுறுத்தி உரையாற்றினார்

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

நிதி அமைச்சர் தியாகராஜன்

காரை தாக்கிய வழக்கில்

ஆறு பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் தியாகராஜன் காரை தாக்கிய வழக்கில் அமைச்சரின் காரை தாக்கிய வீடியோ காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை ஆய்வு செய்யும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த வழக்கில் பாஜக சார்பில் கைது செய்யப்பட்ட மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார் என்ற மார்க்கெட் குமார் வயது 48 மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் பாலா வயது 49 மேலும் திருச்சியை பேர்ந்த கோபிநாத், ( வயது 42) ஜெய கிருஷ்ணா (வயது 39) கோபிநாத் (வயது 44) முகமது யாகூப் (வயது 42) ஆகிய ஆறு பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனா..

நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

சிறுமியை பாலியல்

வன்கொடுமை செய்த நபர்கள்

குண்டர் சட்டத்தில் கைது

கடந்த 08.06.22-ம்தேதி திருச்சி பஞ்சப்பூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவில் 15 வயது சிறுமியை ஏமாற்றி கட்டாயபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்தும், அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியும், வீடியோவை மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை செய்து எதிரிகள் 1) பிரகாஷ், பரத் ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலும் விசாரணையில் எதிரி பரத் என்பவர் மீது கடந்த 2021ம்ஆண்டு சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.


எனவே,எதிரிகள் பிரகாஷ் மற்றும் பரத் ஆகியோர்கள் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

சிங்கார சென்னை

உணவு பாதுகாப்பு திருவிழா  2022

துர்கா ஸ்டாலின் மா.சுப்பிரமணியன்

கலந்து கொண்டனர்


சிங்கார சென்னை உணவு பாதுகாப்பு திருவிழா  2022 என்ற பெயரில் மாபெரும் நிகழ்ச்சி சென்னை தீவுத்திடலில் நேற்று 13/08/2022 சனிக்கிழமை  நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய உணவு மற்றும் உணவு சம்பந்தப்பட்ட  நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பொருட்கள் விற்பனைக்காகவும் காட்சிக்காக வும் வைக்கப்பட்டு இருந்தது,








இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் பரதநாட்டியம், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் சிலம்பம் மற்றும் மேளதாளம் மதுரை முத்து அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த உணவு பாதுகாப்பு திருவிழாவில் தமிழக முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- ப.வெங்கடேசன் - சென்னை

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி

காங்கிரஸ் ஊர்வலம்

நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்பு


சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் ஆணைப்படி தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அழகிரி Ex.MP. மற்றும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் M.A.B.L., சேப்பக்கம் திருவல்லிக்கேணி பகுதி தலைவர் T.M. தணிகாசலம், மாநில துணைத் தலைவர் பொருளாதார நிபுணர் ஆனந்த சீனிவாசன், ஆகியோர் தலைமையில்  63-வது வட்டம் புதுப்பேட்டை பகுதி தலைவர் பன்னீர்செல்வம், துணைத்தலைவர் பாலா,

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
பகுதி 63 -வது வட்ட தலைவர் S.நயிப்கான், 114- வது வட்ட தலைவர் ஜமீல், மத்திய சென்னை துறைமுகம் பகுதி தலைவர் வாசிப் உசேன், கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வழக்கறிஞர்  சாகிர் அஹமத் Bcom.,LLB. பகுதி தலைவர் சீனிவாசன் M.A.B.L., மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் 75 வது சுதந்திரதின பவள விழாவை முன்னிட்டு தங்களின் ரத்தம் சிந்தி சுதந்திரத்தை பெற்று தந்த தியாக தலைவர்களின் நினைவுகளை போற்றும் வகையில்  மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சேப்பாக்கம் பகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் 62,63,114, ஆகிய வட்டங்களில் பாத யாத்திரை  நேற்று (13/08/2022) காலை சென்னை அமீர் மஹால் எதிரில் இருந்து புறப்பட்டு இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் விதமாக ஊர்வலம் நடைபெற்றது அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

S.A.N.K.S.நகீப்கான்-துணை ஆசிரியர்

QR கோடு பயன்படுத்தி

பொதுமக்கள் மதிப்பீடு செய்யும் வசதி

அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம்






கோயம்புத்தூர் மாநகராட்சி, காந்திபுரம் பேருந்து நிலைய வளாகத்தில், பொதுக் கழிப்பிடத்தின் சுகாதார வசதியை QR கோடு பயன்படுத்தி பொதுமக்கள் மதிப்பீடு செய்யும் வசதியை  அறிமுகப்படுத்தி வைத்தார் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு.

அப்போது வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆகியோருடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்

அமைச்சர் கே என் நேரு 









முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-ன் வழிகாட்டுதலின்படி, சேலத்தில் உள்ள சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் இரா.ராஜேந்திரன், மாநகராட்சி துணை மேயர் மா.சாரதாதேவி ஆகியோருடன் அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

சுதந்திர சிறகுகள் ஓவிய கண்காட்சி

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  திறந்து வைத்து வாழ்த்து








திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில், "Design School" சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர சிறகுகள் எனும் ஓவிய கண்காட்சியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  திறந்து வைத்து ஓவியர்களுக்கு  வாழ்த்துகளை  தெரிவித்துக் கொண்டார்

 நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி