திருச்சியில் பார்வையற்ற
மாற்றுத்திறனாளிகள்
திடீர் மறியல் போராட்டம்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ராணுவ கேன்டீன் அருகே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் திடீரென ஈடுப்பட்டனர்.அரசு தங்களுக்கு மாதம் உதவி தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதை 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். நலிவுற்ற இசைக்கலைஞர்களுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்குவது போல் பார்வையற்ற இசைக்கலைஞர்களுக்கும் உதவித்தொகை வழங்கிட வேண்டுமென அரசுக்கு கோரிக்கை பல நாட்களாக வைத்துள்ளோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
அதே போல் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்து பயணம் செய்யும்போது அவர்கள் எடுத்துச் செல்லும் பொருள்களுக்கு சுமை கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.அரசால் ஏற்கனவே பார்வையற்ற மாற்றத்திறறானளிகளுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் பழுதடைந்துள்ளது. அதனை சரி செய்து கொடுக்க வேண்டும். உள்ளிட்ட முக்கியமான எட்டு கோரிக்கை வலியுறுத்தி பல மாதங்களாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடமும் தமிழக அரசிடமும் மனுக்கள் கொடுத்து வருகிறோம். எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திடீரென இந்த மறியல் போராட்டத்தில் இறங்கி உள்ளதாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குறிப்பிட்டனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக இதே போல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறையினருக்கும் பார்வையற்ற மாற்றுதிறானிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சிலர் காயம் அடைந்தனர். ஆகவே இன்று காவல்துறையினர் அவர்களிடம் வாக்குவாதம் செய்தோ அவர்களை வலு கட்டாயமாகவோ கைது செய்யும் முயற்சியில் ஈடுபடவில்லை. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்ல முயற்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அச்சாலை வழியாக செல்லாமல் மாற்றுச்சாலை வழியாக செல்ல போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.30 நிமிடம் வரை போராடிய நூற்றுக்கணக்கான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி