மீலாதுநபி
முப்பெரும் விழா
K.M.காதர் மொகிதீன்
தலைமை
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்டம் மற்றும் காயிதே மில்லத் பெண்கள் அரபி பாடச்சாலை இணைந்து நடத்தக்கூடிய மீலாதுநபி முப்பெரும் விழா திருச்சி பாலக் காரை காஜாக்கடை சந்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் தேசியத் தலைவர் பேராசிரியர் K.M.காதர் மொகிதீன் M.A.Ex.M.P.,தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை தெற்கு மாவட்ட பொருளாளரும் அரபி மதரஸா செயலாளருமான B.M.ஹுமாயூன் வரவேற்புரையுடன் திருச்சி பீமநகர் வார்டுத்தலைவர் N.அமீருதீன் தொகுத்து வழங்கினார்.நிகழ்வில் அரபி மதரஸா மாணவி கிராஅத் ஓதி நிகழ்வினை துவங்கினார்.
நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஜனாப். K.M.K.ஹபிபுர் ரஹ்மான்,மாநில துணைச் செயலாளர் V.M.பாரூக்,மாநில மாணவரணி பொதுச்செயலாளர் அன்சர் அலி,ஏர்போர்ட் வார்டு தலைவர் முஹம்மது பாரூக் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் மௌலானா முஃப்தி.H.உமர் பாரூக் மஹ்ழரி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
நிகழ்வில் திருச்சி மாவட்ட அரசு டவுன் காஜி.முஃப்தி ஜலீல் சுல்தான் மன்பயீ , மாவட்ட துணைச்செயலாளர் சம்சுதீன், துணைத் தலைவர் முஹம்மது பீர், மேற்கு தொகுதி அமைப்பாளர் அப்துல் கபூர், பேராசிரியர். மொய்தீன் அப்துல்காதர்,பூக்கொல்லை செயலாளர் முகம்மது கலீல் காட்டூர் பகுதி தலைவர் ஜஹாங்கீர்பாஷா, செயலாளர் முகம்மது கலீல்,
ஆழ்வார்தோப்பு தலைவர் A.ஆரிப்,STU தலைவர் K.K.மஸ்தான் STU செயலாளர் S.ஷாஜகான், இளைஞரணி மாவட்ட செயலாளர் G.H.சைய்யது ஹக்கீம், மாவட்டத் துணைத் தலைவர் S.ஷேக் முஹம்மது கௌஸ்,இளைஞரணி ஜஹாங்கிர் பாஷா,R.நவாப் கான்,M.முகமது நியாஸ்,
மாணவரணி மாவட்ட செயலாளர் முஹம்மது பாசித் முன்னிலை வகுக்க சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீலாது விழாவில் கலந்து சிறப்பித்தனர்.மதராஸா ஆசிரியர்கள்,மதுரை ஹனீபா ஜிகர்தண்டா உரிமையாளர், மற்றும் மார்கெட் சையது ஹாஜியார்
மணிச்சுடர் ஊடகவியலாளர் முஹம்மது சாகுல்,மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் M.சாதிக்குல் அமீன் மற்றும் ஏர்போர்ட் ரஹீம்,A.K.அலாவுதீன், மகளிரணி மாவட்ட பொருளாளர் ஆரிஃபா,மகளிரணி துணைச் செயலாளர் ரஜபுனிஷா,ராபியத்துல் பசிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அவர்களுக்கு நன்றி செலுத்தபட்டது.
மேலும் மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.