08/20/22

மதுரையில் விமன் இந்தியா மூவ்மெண்ட் 

தேசிய கொடி ஏந்தி
கோரிக்கை பேரணி



இன்று 20-08-2022 சனிக்கிழமை விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM)-ன் கோரிக்கை பேரணி நடைபெற்றது.

தமிழக அரசே! கல்வித்துறையே!

கல்வி கூடங்களில் மாணவிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்து!

பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனையை விரைந்து வழங்கிடு! 

போக்சோ (POCSO) சட்டங்கள் பாரபட்சமின்றி அமுல்படுத்து!

மாணவிகள் அச்சமற்ற மனநிலையோடு கல்வி கற்கும் சூழ்நிலையை உருவாக்கிடு! 

பள்ளிகளில் தொடரும் மாணவிகள் துன்புறுத்தல் மற்றும் சந்தேக மரணங்களை தடுத்து நிறுத்திடு!என வலியுறுத்தி,

மதுரை தெற்கு வாசல்பகுதியில் இருந்து கிரைம் பிரான்ச் சந்திப்பு வரை பெண்கள் கையில் தேசிய கொடி ஏந்தி மாபெரும் மகளிர் கோரிக்கை பேரணி நடைபெற்றது.



பேரணியை மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாகி  ‌சகோதரி சிந்தியா திபேன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு விமன் இந்தியா மூவ்மெண்ட்(WIM) மாநில தலைவர் பாத்திமா கனி தலைமையேற்று தலைமை உரை நிகழ்த்தினார்.

விமன் இந்தியா மூவ்மெண்ட்(WIM) மண்டல தலைவர் கதிஜா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

விமன் இந்தியா மூவ்மெண்ட்(WIM) வடக்கு மாவட்ட தலைவர் கதிஜா அவர்கள் தொகுப்புரை ஆற்றினார்.

நேஷனல் விமன் ஃபிரண்ட்(WIM) மாநில தலைவர் ஆசியா மர்யம்,நேஷனல் விமன் ஃபிரண்ட்(NWF) மாநில பொருளாளர் மஹதியா, கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா(CFI) தேசிய செயற்குழு உறுப்பினர் நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ்டிபிஐ(SDPI) கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், சோக்கோ அறக்கட்டளை நிர்வாகி வழக்கறிஞர் செல்வ கோமதி, எஸ்டிபிஐ(SDPI) கட்சியின் மாநில செயலாளர் நஜ்மா பேகம், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்புரையாற்றினார்கள்.


விமன் இந்தியா மூவ்மெண்ட்(WIM) தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் நசரத் பேகம், விமன் இந்தியா மூவ்மெண்ட்(WIM)வடக்கு மாவட்ட தலைவர் பாத்திமா பிலால் ஆகியோர் பேரணி கோஷம் எழுப்பினர்.

இறுதியாக விமன் இந்தியா மூவ்மெண்ட்(WIM) தெற்கு மாவட்ட தலைவர் ரோஸ்னி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

இந்த பேரணியில்  பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

கொடியேற்று விழா மற்றும் தெருமுனை

விழிப்புணர்வு கூட்டம் 


















இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்டம் புத்தாநத்தம் . பிரைமரி.கொடியேற்று விழா  இரண்டு இடங்களில் நடைபெற்றது தெருமுனை விழிப்புணர்வு கூட்டம் . தலைமை முஜிபுர் ரஹ்மான் எ முகமது. நூர்  பிரைமரி தலைவர் தலைமையில் நடைபெற்றது 

இதில் தெற்கு மாவட்ட செயலாளர் K.M.K  ஹபீபுர் ரஹ்மான்.செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் வி.அஜ்மீர் காஜா,பேராசிரியர் முகைதீன் அப்துல் காதர்,முகமது ஹக்கீம்,மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவுஸ் பாட்ஷா,மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் புத்தாநத்தம் கலிஃபா,லியாகத் அலி ஹஜ்ரத் 

மணப்பாறை வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர்.மௌலவி பாரூக் சிராஜி மற்றும் பிரைமரி நிர்வாகிகள்,கிளைச் செயலாளர் தாஹிர் ஹஜ்ரத் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஈமானி நிஜாம் பிரைமரி முன்னாள் தலைவர்.ஹிட்லர் செய்யது,

பொட்டிக்கடை ரஹ்மத்துல்லாஹ்,A H.முகமது மீரான் ஹஜரத் பகுதி அமைப்பாளர் கிளை துணைச் செயலாளர் ஷாஆலம். துணைச் செயலாளர் அப்துல் ஜபார்,கமாலுதீன் ராஜா முகமது ஹஜரத்.அபுல் ஹசன் சாதுலி லாபீர் யாசின் இஹ்ஸான்  உல்லா உமர் பாரூக் அபுல் ஹசன் ஹாசிப்.  முகமது பாசில் முகமது யாசித் முஹம்மது ஆசிப் துபைல் அகமது. அன்வர் பாட்ஷா. உதுமான் முகமது அய்சர். மற்றும் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துகொண்டு.கூட்டம் இனிதே சிறப்பாக நடைபெற்றது.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

காவல்துறையினர் முன்னிலையில்
போதை பொருட்களுக்கு எதிராக
உறுதிமொழி




உலக போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி அமர்வு நீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருமண்டபம் பகுதியில் கண்டொண்மென்ட் காவல் சரக காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில், போக்ஸ்வேகன் நிறுவன ஊழியர்களுக்கு போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் கருமண்டபம் பால்பண்ணை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்சியில் அமர்வு நீதிமன்ற காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் உடனிருந்தார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

IUML தேசிய தலைவர்கே.எம். காதர் மொகிதீன் மு க ஸ்டாலினுடன் சந்திப்பு



இன்று (20-08-2022) தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் அப்துல் ரஹ்மான் Ex.எம்.பி மற்றும் கே.நவாஸ் கனி.எம்.பி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 75-வது நிறுவன ஆண்டு தினமான 2023 மார்ச் 10-ந் தேதி சென்னையில் நடக்க இருக்கிற முஸ்லிம் லீக் பவளவிழா நிகழ்ச்சியில் பல்சமய சான்றோர் பெருமக்களுக்கு சமய நல்லிணக்க விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை அன்புடன் ஏற்று முதலமைச்சர் இசைவு தந்துள்ளார்.. 

மேலும் சமுக,சமுதாய தொடர்பான பல்வேறு செய்திகள் மற்றும் கோரிக்கைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது

அனைத்து தகவல்களையும் மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்ட முதல்வர் அனைத்து கோரிக்கைகளையும் பரிசலிப்பதாக உறுதி அளித்துள்ளார்..


இந்நிகழ்வில் இந்து அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே.சேகர் பாபு, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வே இறையன்பு இ.ஆ.ப., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் Ex.எம்.பி மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி.எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

வேலூர் இராணிப்பேட்டை

மாவட்டங்களின் வளர்ச்சி

திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்








இன்று (20.08.2022) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வேலூர் மாவட்டம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களின் நகராட்சி நிர்வாகத்துறையில் நடைபெற்று வரும்  வளர்ச்சி  திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் 

வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் IAS தலைமையிலும், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் IAS வரவேற்புரையிலும்,

சிறப்பு அழைப்பாளராக நீர்வளம்,சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர்  துரைமுருகன்.M.A.BL.,நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் K.N.நேரு,கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும்

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் ஆகியோரும் கலந்துக்கொண்டு ஆய்வு நடத்தி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

CTC டிராவல்ஸ்

மீண்டும் இயங்குகிறது

இன்று முதல் (20-09-2022) CTCடிராவல்ஸ் மீண்டும் இயங்குகிறது.சென்னையில் இருந்து கீழக்கரை வரை திருச்சி,சிவகங்கை,இளையான்குடி,பரமக்குடி,ராம்நாடு ஆகிய வழித்தடங்களில் CTC டிராவல்ஸ் மீண்டும் இயங்குகிறது.

டிக்கெட் முன்பதிவு செய்ய ஷாஜ் டிராவல்ஸ் 9841142243 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு சி டி சி டிராவல்ஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

தகவல் - S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் - IBI NEWS