சமூக, அரசியல், பொருளாதார மற்றும் மதரீதியாக இந்தியாவில் முஸ்லிம்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
மக்களவையில் கே.நவாஸ்கனி எம்.பி. கேள்வி
புதுடெல்லி, ஜூலை. 29-
இந்தியாவில் முஸ்லிம் கள் சந்தித்து வரும் பிரச் சினைகளுக்கு தீர்வுகாண ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ் கனி மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த கேள்விகளின் (நட்சத் திர குறியிடப்படாத கேள்வி எண். 723) விவரம் வருமாறு:-
சிறுபான்மை விவகாரங் கள் அமைச்சர் பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா?
(அ) சமூக, அரசியல், பொருளாதார மற்றும் மத அடிப்படையில் இந்திய முஸ்லிம்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை கையாள பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்பதை ஒன்றிய அரசு ஒப்புக்கொள்கிறதா?
(ஆ) அப்படியானால் இந்த சமுதாயத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு ஆய்வு செய்வதற்காக ஒன்றிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் மற்றும் இந்த பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இது சமுதாயத்துக்கும் மற்றும் நாட்டுக்கும் நல்லதாகும்.
இந்த கேள்விகளுக்கு சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் ஸ்மிருதி சுபீன் இரானி 21-07-2022 அன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:-
(அ) மற்றும் (ஆ) முஸ்லிம்கள் உள்பட சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களின் நலம் மற்றும் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY), பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY), பிரதான் மந்திரி கிஸான் சம்மன் நிதி (PM KISAN), பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY), பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY), பேட்டி பச்சோ பேட்டி பாதோ யோஜனா போன்றவை உள் ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகிறது. வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களின் 10 சதவீத இடஒதுக்கீட்டு சலுகையை பொருளா தாரத்தால் நலிவுற்ற பிரிவைச் சேர்ந்த சிறுபான்மையினரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், முஸ்லிம்கள் உள்பட சிறுபான்மையினர் என்று அறிவிக்கப்பட்ட அனைத்துப் பிரிவையும் சேர்ந்த பொருளாதாரத்தால் நலிவுற்ற மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக கல்வியில் அதிகாரம் அளித்தல், வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு வசதி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்துவதன் வாயிலாக பல்முனை வியூகங்களை சிறுபான்மையினர் விவகாரங் கள் அமைச்சகம் எடுத்துள்ளது.
(அ) கல்வியில் அதிகாரம் அளிக்கும் திட்டங்கள்:
(1) நேரடியாக சலுகைகளை மாற்றுதல் முறையில் மாணவர்களுக்கு கல்வியில் உரிமைகளை அளிப்பதற்கான ப்ரீ - மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டம், போஸ்ட் - மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டம், தகுதி மற்றும் திறமை அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம்.
(2) மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டம் (ஃபெல்லோஷிப் திட்டம்) - நிதி உதவி வடிவில் கல்வி உதவித்தொகைகள் அளித்தல்.
(3) நயா சவேரா இலவச பயிற்சி மற்றும் அதனுடன் இணைந்த திட்டம் - தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்விகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகள் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் தகுதி பெறுவதற்காக சிறுபான்மையினர் சமூகத்தைத் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அபேச்சகர்களுக்கு இலவச பயிற்சி அளிப்பது இந்த திட்டத்தின் நோக்கம்.
(4) பதோ பர்தேஸ் - வெளிநாடுகளில் உயர் கல்வி படிக்க கல்விக் கடன்களுக்காக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வட்டி மானியம் அளிக்கும் திட்டம்.
(5) நைவுடான் - யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் (PSC), ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (SSC) போன்றவற்றால் நடத்தப்படும் ஆரம்ப தேர்வுகளில் (Prilims) வெற்றிபெற மாணவர்களுக்கு உதவி அளிக்கும் திட்டம்.
(ஆ) வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்கள்:
(6) சீக்கோ அவு கமாவோ - 14-35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டம்.
வேலை வாய்ப்புகள் அளித்தல் மற்றும் ஏற்கனவே பணிபுரிந்து வருபவர்களின் வேலை செய்யும் திறனை அதிகரித்தல், பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்கள் போன்ற வர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
(7) வேலைவாய்ப்புகளை அளித்தல், கலைப்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை சந்தைப் படுத்துதல் ஆகியவற்றுக்காக நாடு முழுவதும் பாரம்பரிய கலைகள் / கைவினைப் பொருட்கள் மேம்பாட்டில் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி அளித்தல் (USTTAD) மற்றும் ஹுனார் ஹாத் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.
(8) நை மன்ஸில் - பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தியவர்களுக்கு முறைசார் பள்ளிக் கல்வி மற்றும் திறன் அளிக்கும் திட்டம்
(9) நை ரோஸினி- சிறு பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களின் தலைமைத் துவத்தை மேம்படுத் துவதற்கான திட்டம் இது.
(உ) உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்:
(10) நாட்டில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதியை அளிப்பதற்காக பிரதான் மந்திரி ஜன்விகாஸ் காரியாக் ராம் (PMJKR) திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கப் பட்டதிலிருந்து அமைச்சகம் 49 பட்டப் படிப்பு கல்லூரிகள், 179 உறைவிடப் பள்ளிகள், 3,016 பள்ளிக் கட்டடங்கள், 42,269 கூடுதல் வகுப்பு அறைகள் / நூலகங்கள் / சோதனைக் கூடங்கள்,அறைகள் போன் றவை, 15,659 ஆசிரியர்கள் உதவி மற்றும் நவீன வகுப்பு அறைகள், பள்ளிகளில் 7,452 கழிப்பறைகள், 1,393 விடுதிகள், 28 பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள், 207 ஐ.டி.ஐ. கட்டடங்கள் மற்றும் 41 ஐ.டி.ஐ.களில் கூடுதல் வசதிகள், 56 பாலிடெக்னிக்குகள், 84 திறன் மையங்கள் / ஹுனார் ஹப்ஸ், 6,016 சுகாதாரத் திட்டங்கள், 591 சத்பவ் மண்டபங்கள் / பொதுச்சேவை மையங்கள், 610 மார்க்கெட் செட்டுகள், 3,100 சுகாதார / பொது கழிப்பறை திட்டங்கள், 92 விளையாட்டு அரங்குகள் போன்றவை உள்ளிட்ட 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய திட்டங்களுக்கு இந்த அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்த அமைச்சகத்தின் வலைதளத்திலிருந்து (www.minorityaffairs.gov.in) மேற்குறிப்பிடப்பட்ட வரிசை எண். 1 முதல் 10 வரையிலான திட்டங்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் அவை எந்த அளவிற்கு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பது குறித்த நிலையை தெரிந்து கொள்ளலாம்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி