07/14/22

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், காவிரிப் பாலத்தின் மேல் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை முன்னிட்டு போக்குவரத்தை மாற்றி அமைத்தல் தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பேசுகையில்..,


பழைய காவிரி பாலத்தினை சரி செய்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தமிழக முதல்வர் ரூ6.50 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். அதன்படி பாலம் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால் 40 வருடங்களுக்கு இந்த பாலம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.


புதிய பாலம் 13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள நிலையில் அதுவரை பழைய பாலத்தினை சரி செய்து பயன்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளானது பழைய காவேரி பாலத்தின் அடிப்பகுதியில் முழுமையாக முடிக்கப்பட்டு அதன் மேற்பகுதியில் பணிகள் நடைபெற உள்ளது இந்த பணிகள் 8 மாதத்திற்குள் முடியும் என கூறினார்

காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் பொழுது கனரக வாகனங்கள் ஆறு மாதத்திற்கு அதில் செல்ல முடியாது. அது குறித்து ஆய்வு செய்து முறையான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையர் வெளியிடுவார்கள் என குறிப்பிட்டார்.


காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் பொழுது கனரக வாகனங்கள் ஆறு மாதத்திற்கு அதில் செல்ல முடியாது. அது குறித்து ஆய்வு செய்து முறையான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையர் வெளியிடுவார்கள் என குறிப்பிட்டார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி


திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் சிவானந்தன்.

தமிழகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகிறது. வருடத்திற்கு ஒரு கோடி டன் நெல்லை அரைத்து அரிசியாக தயாரித்து வருகின்றோம்.மத்திய அரசு உடனடியாக அரிசி மீதான 5%ஜிஎஸ்டி வரியை நீக்காவிட்டால்  அடுத்த கட்டமாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நோக்கி செல்லும் என சிவானந்தன் தெரிவித்துள்ளார்.

வரி விதிப்பால்  கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் அரிசி விலை உயர வாய்ப்புள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உப்புக்கு வரி விதித்ததை போல் தற்போது மத்திய அரசு அரிசிக்கு வரி உயர்வை கொண்டு வந்துள்ளது.

மற்ற வரிகள் அனைத்தும் பொதுமக்கள் தலையில்தான் விழும் என தெரிவித்தார். இதனை எதிர்த்து வருகின்ற 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு நடுத்தர மக்கள் ஏழையாக மாறிவிட்டனர் என புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது. அரிசிக்கும், கோதுமைக்கும் ஐந்து சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி விதித்திருப்பது நடுத்தர மக்களுக்கு மேலும் ஒரு சுமையை அதிகரிக்கும் நிலையை மத்திய அரசு உருவாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

no image

  

செய்தியாளர்கள் தேவை

தமிழகம் முழுவதும் தாலுகா வாரியாக செய்தியாளர்கள் தேவை.

தொடர்புக்கு Whatsapp-எண் 9176297028 -ல்

சுய விவரங்களை அனுப்பவும்

மானிய கோரிக்கை 2021-22 அறிவிப்பு எண் 21'ல் பள்ளிகள்-வட்டாரம்-மாவட்ட அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அதன்படி மாவட்ட பள்ளிகள் அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டியை தென்காசி இ.சி.ஈ அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்








தகவல்=நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த பொதுப் பணித்துறைஅமைச்சர் எ.வ.வேலு அவர்களுடன் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலம் மற்றும் பாம்பன் கால்வாய் ஆழப்படுத்தும் பணிகள் குறித்த ஆய்வில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும்-இந்திய யூனியன் மஸலிம் லீக் மாநில துணைத்தலைவருமான கே.நவாஸ்கனி கலந்து கொண்டார்





இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான காதர்பாட்சா, முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சே.முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தகவல்=நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 திருச்சி நகரியம் கோட்டம், கண்டோன்மென்டபிரிவிற்குட்பட்ட வார்னஸ்சாலை, இன்கம்டாக்ஸ் ரோடு, சோனாமீனா தியேட்டர் பகுதி, கஸ்டம்ஸ் ஆபல், முடுக்குதெரு, மற்றும் ஒத்தகடை முத்தரையர் சிலை பகுதி ஆகிய பகுதிகளில்  புதிய AB Switch (காற்று திறப்பான்) அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 15.07.2022 (வெள்ளி கிழமை) அன்று காலை 09.30 மணி முதல் மாலை 03.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின் செயற்பொறியாளர் ரெங்குசாமி தெரிவித்துள்ளார்

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

திருச்சி சமயபுரம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பிரதாப். இவர் தனது காரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்கி கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவில் திடீரென அவருடைய கார் திறக்கப்படும் சத்தம் கேட்டது திடுக்கிட்டு விழித்த பிரதாப் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது அப்போது ஒரு பெண் காரை திறந்து கொண்டிருப்பதைக் கண்டார்.  



உடனே மெல்ல வெளியே வந்து அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து சமயபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் இருந்து செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பது தெரியவந்தது

அவர் வைத்திருந்த செல்போன் சமயபுரம் மருதூர் ரோடு பகுதியில் வசிக்கும் லட்சுமணன் என்பவர் வீட்டுக்குள் நுழைந்து திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆனந்தி மீது வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்களின் அறிவுறுத்தலின்படி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் .அர.சக்கரபாணி அவர்களின் தலைமையில் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  கூட்டத்தில் கலந்து கொண்டார்






திருச்சி 29வது வார்டு திமுக கவுன்சிலர் கமால் முஸ்தபா தலைமையில் நடைபெற் குப்பை மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி..


                              

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 தங்களின் உடல் நலம் விரைவில் சீரடையும், சிறப்புப் பயணம் தோய்வு எதுவுமின்றித் தொடரவும் வாழ்த்துகிறோம் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பேராசிரியர் கே.எம்‌ காதர் மொகிதீன் கடிதம். 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்(12.07.2022)செவ்வாய்க்கிழமை இரவு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது :

 பேரன்புக்கும் பெரு மதிப்புக்குமுரியீர் இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள். தாங்கள் எல்லா நலமும் எல்லாச் சிறப்பும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து உயர்ந்திட வாழ்த்துகிறோம்.

நோயற்ற பெருஞ் செல்வம் தங்களுக்கு எவ்விதக் குறையும் இன்றி நிறைவாகப் பெருகிட இறையருளை வேண்டுகிறேன். ஒயாத உழைப்பு! நாட்டு மக்களைப் பற்றியே உன்னிப்பு ! ஊரும் உலகமும் ஏற்றுப் போற்றும் படியான ஆக்கம் ! நல்லது நாளெல்லாம் நடக்கும் போது பொறாமைக்காரர்களின் புகைச்சலும் ஏற்படும் ! அது யாவும் உதயசூரியன் முன் உதிரும் பணித்துளியாகி விடும் ! எண்ணியாங்கு பயணத்தைத் தொடர எவ்வித இடைஞ்சலும் குறுக்கிடாது தங்களின் நல்வாழ்வில் ! இடையில் வரும் சிறு இடைஞ்சலும் இல்லாது போகும் ! நல்லது செய்யும் நல்லுள்ளம் நாளெல்லாம் தனது நல வாழ்வைத் தொடரும் ! தங்களின் பேரும் புகழும் எங்கும் படரும்  ! உடலைப் பேணுவது உயிரைப் பேசுவதே தான் ! ' உடலை வளர்த்தேன், உயிர் வளர்ந்தேன் ' என்றார் திரு மூலர் தங்களின் அன்பு இல்லத்தில் உள்ள அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் ! ஒய்வு மிக மிக முக்கியம் ! ஒய்வு எடுப்பாரே உயர் உயரச் சென்று உலக மாந்தரின் உள்ளங்களில் நீங்காமல் நின்றுள்ளனர் ! தங்களின் உடல் நலம் விரைவில் சீரடையும், சிறப்புப் பயணம் தோய்வு எதுவுமின்றித் தொடரவும் வாழ்த்துகிறோம். வாழ்க !    வளர்க ! வெல்க !‌  இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) நெசப்பாக்கத்தில் மூன்றாம் நிலை சுத்திகரிப்பு அல்ட்ராஃபில்ட்ரேஷன் ஆலையை (TTUF) சோதனை அடிப்படையில் இயக்கத் தொடங்கியுள்ளது மற்றும் நகரின் குடிநீர் விநியோகத்திற்குப் பயன்படுத்தப்படும் மீட்டெடுக்கப்பட்ட தண்ணீரை போரூர் ஏரியில் வெளியேற்றுகிறது.


இத்திட்டமானது காலநிலைக்கு ஏற்ற நீர் வழங்கல் உள்கட்டமைப்பை உருவாக்குவதையும், வீட்டு உபயோகத்திற்காக மீட்டெடுக்கப்பட்ட தண்ணீரை மறைமுகமாகப் பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்ட TTUF ஆலை, இப்போது அதன் திறனில் 80% வரை இயக்கப்படுகிறது.

இரண்டாம் நிலை சுத்திகரிப்பு மற்றும் அல்ட்ராஃபில்ட்ரேஷன் அல்லது இரண்டாம் நிலை சுத்திகரிப்பு என பல்வேறு கட்டங்களில் ஏரியில் வெளியேற்றப்படும் மீட்டெடுக்கப்பட்ட நீரின் தரம், பின்னர் ஓசோனேஷன் சோதனை செய்யப்பட்டு வருவதாக CMWSSB அதிகாரிகள் தெரிவித்தனர்.

"வழங்கப்பட்ட வடிவமைப்பின்படி ஆலையின் செயல்பாட்டை நாங்கள் சரிபார்க்கிறோம். ஆலையில் தயாரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் தரம் மற்றும் ஏரியில் கலப்பது வெவ்வேறு சேமிப்பு நிலைகளில் சோதிக்கப்படும், ”என்று ஒரு அதிகாரி கூறினார். குடிநீரின் தரம், குடிநீர் தரத்தை கடைபிடிக்கிறதா என சோதிக்கப்படும்.


நெசப்பாக்கத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ள அதே வளாகத்தில் TTUF ஆலை கட்டப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஆலைகளில் கிட்டத்தட்ட 90.05 மில்லி லிட்டர் கழிவுநீர் இரண்டாம் நிலை சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. அதன் ஒரு பகுதி மூன்றாம் நிலை மற்றும் அல்ட்ராஃபில்ட்ரேஷன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு ஏரிக்கு அனுப்பப்படும். இந்த மைல்கல் திட்டம் ஏரியின் சேமிப்பை நிலைநிறுத்துவது மட்டுமின்றி நகரவாசிகளுக்கு குடிநீர் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்யும்.

27.53 கோடி மதிப்பிலான TTUF ஆலையின் செயல்பாட்டை நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு சமீபத்தில் ஆய்வு செய்தார். போரூர் ஏரிக்கு அருகில் உள்ள ஆறு எம்எல்டி சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் முடுக்கி விடப்பட்டு ஆகஸ்ட் முதல் சோதனை அடிப்படையில் செயல்படத் தொடங்கும். நீர் நிறுவனம் நான்கு மில்லி லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட ஒரு மட்டு சுத்திகரிப்பு நிலையத்தை இயக்குகிறது. ஆலை தயாரானதும், போரூர் ஏரியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு, 3 கி.மீ., குழாய் மூலம், நீர் பகிர்மான நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்.


"ஏரியின் நான்கு இடங்களில் கழிவுநீர் வெளியேறும் நீர்நிலைகளை பராமரிக்கும் வகையில் கட்டப்பட்ட ஈரநிலங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். குன்றத்தூர் வாய்க்கால் வழியாக ஏரியில் சேரும் கழிவுநீரை குறைந்த அளவே வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என்றார்.

பெருங்குடியில் வரும் இரண்டாவது TTUF ஆலையில் CMWSSB 50% பணியை முடித்துள்ளது மற்றும் மீட்கப்பட்ட நீர் பெருங்குடி ஏரியில் கலக்கப்படும். இப்பணிகள் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.