07/26/22

 சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சத்யாகிரக அமர்வு - சு.திருநாவுக்கரசர்,கே.வி.தங்கபாலு பங்கேற்பு

இன்று  26.07.2022 செவ்வாய்கிழமை காலை 11.00 மணியளவில் மோடியின்  ஆட்சியை கண்டித்தும்.விலைவாசி ஏற்றம்,அநியாய வரிவிதிப்பு,வேலையில்லா திண்டாட்டம்,சோனியா காந்தி மீது அமலாக்கத்துறை மூலமாக  பொய்வழக்கு புனைந்து சம்மன் அனுப்பிய நடவடிக்கையை கண்டித்தும்,காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் கைதை கண்டித்தும்  துறைமுகம் தொகுதி செவன் வெல்ஸ் நாட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள காந்தியடிகளின் சிலை அருகே சத்யாகிரக அமர்வு நடைபெற்றது 







தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் MP, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.வி.தங்கபாலு EX.MP, சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் -மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் M.A.B.L., MC, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி தலைவர் தீரன் T.M.தணிகாசலம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பகுதி தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


S.A.N.K.நகீப்கான் - துணை ஆசிரியர்-IBI NEWS


மதுரை மாவட்ட கிராமங்களில் அரசு துணை சுகாதார நிலையங்களை அமைச்சர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்

மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் பெருங்காமநல்லூர், இ.கோட்டைப்பட்டி, மள்ளப்புரம், உத்தப்புரம் ஆகிய கிராமங்களில் அரசு துணை சுகாதார நிலையங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உடன் உள்ளார்







நமது நிருபர். சென்னைஷேக் அப்துல்லா

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் குறித்து ஆய்வு!

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அணிஷ் சேகர் மாநில சுகாதார பணிகள் செயலாளர் செந்தில் ,இணை இயக்குனர் செந்தில்குமார் திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் மற்றும் வட்டாரம் மேட்பாளர் தங்கச்சாமி சுகாதார ஆய்வாளர்கள் குழுவினரிடம் ; மதுரை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை எவ்வாறு உள்ளது என்று பரிசோதனை மற்றும் தடுப்பு குறித்து விவரங்கள் கேட்டறிந்தார்.

மதுரை விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாசுப்ரமணியன் பேட்டி;

குரங்கம்மை பரவல் குறித்த ஆய்வு முதல் வலியுறுத்தலின் அடிப்படையில் பன்னாட்டு விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதற்கேற்ப தமிழகத்தில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் முதல் பாதிப்பு ஏற்பட்ட போதே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

 அதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்தும் பயணிகளுக்கு அவர் முகத்திலையோ அல்லது முழங்கைக்கு அடியிலோ ஏதாவது கொப்பளங்கள் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது .

அதோடு மட்டுமல்லாமல்.WHO, ஐ சி எம் ஆர் விதிகளின்படி வெளிநாடுகளில் இருந்து வருகிற அத்தனை பயணிகளையும் மாஸ் ஃபீவர் ஸ்கிரீனிங் கேம்ப் என்கிற அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

அதில் ரேண்டமாக இரண்டு சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது -

இந்த குரங்கம்மை பல்வேறு நாடுகளில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது கடந்த வாரம் 63 நாடுகளில் இருந்து இந்த வாரம் 72 நாடுகளில் அதற்கான பாதிப்பு கூடுதலாகி உள்ளது.

உலகம் முழுவதிலும் இந்த 72 நாடுகளில் 14 ஆயிரத்து 533 பேருக்கு பாதிப்பு கூடுதலாக இருக்கிறது

இந்தியாவை பொருத்தவரை கேரளா, டெல்லி, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் அதற்கான பாதிப்பு கூடுதலாகி உள்ளது.

எனவே தமிழகத்தில் பன்னாட்டு விமான நிலையங்களை தொடர்ந்து கண்காணிப்பதும், கேரளா, ஆந்திரா எல்லைகளை கண்காணிப்பதும் தொடர்ந்து எல்லைப் பகுதியில் இருந்து வருபவர்களை ஸ்டேச்சுரேஷன் பரிசோதனை செய்து கண்காணிப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் மதுரை பன்னாட்டு விமான நிலையத்தில் நானும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சுகாதாரத் துறை சார்ந்தவர்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளை கண்காணிப்பதற்காக  மாஸ் ஃபீவர் ஸ்கிரீனிங் கேம்ப் மேற்கொண்டு வருகின்றனர். 

இங்கு தினந்தோறும் மூன்று வெளிநாட்டு விமானங்கள் வருகிறது அதில் ஒவ்வொரு நாளும் 300 முதல் 400 வரை பயணிகள் வருகிறார்கள் அவர்களுக்கு இரண்டம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை இரண்டு சதவீதம் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

அடுத்து வரவிருக்கும் மழைக்காலத்திற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த கேள்விக்கு:

அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு துறையோடு இணைந்து டெங்கு மலேரியா போன்ற நோய்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வீடுகளில் அவசியம் இல்லாமல் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்துவது கொசுக்கள் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் மேற்கொண்டு வருகிறோம். 

லார்வா நிலையிலேயே கொசுக்களை ஒழிப்பதற்கு கம்பூச்சியா போன்ற மீன்கள் பயன்படுத்தப்படுகிறது.

சிறார்களுக்கான தடுப்பூசி குறித்த கேள்விக்கு:

சிறார்களுக்கான தடுப்பூசி குறித்து ஒன்றிய அரசு எப்போது அறிவுறுத்துகிறார்களோ அப்போது உடனடியாக பள்ளிகளில் போடப்படும். 18 வயசு முதல் 59 வயது வரையிலானவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி தனியார் நிறுவனத்தில் கட்டணம் செலுத்தி போட வேண்டிய சூழ்நிலையை மாற்றி முதல்வரின் வேண்டுகோளை ஏற்று 75 நாட்களுக்கு இலவசமாக அந்த தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

குரங்கம்மைக்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசி குறித்த கேள்விக்கு:

WHO, ஐ சி எம் ஆர் போன்ற அமைப்புகள் இந்த நோய்க்கான தீர்வை எப்போது அறிவுறுத்துகிறார்களோ அப்போது மட்டுமே செய்யப்படும் இப்போது 15 இடங்களில் ஆய்வகங்கள் அமைப்பதற்கு ஒன்றிய அரசு நிதியளிக்கிறது தமிழகத்தில் குறிப்பாக சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஒரு ஆய்வகம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நாம் எடுத்துள்ளோம்.அதை அவர்கள் ஏற்பார்கள் என்று நம்புகிறோம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினா.

நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

 தேசிய திராவிடர் பேரவை மாநில பொருளாளர்

S.A.N.K.நஹிப் கான் விடுத்துள்ள இரங்கல் செய்தி

S.A.N.K.நஹிப் கான்


இளையான்குடி புதூர் வஞ்சியர் அபுபக்கர் பேத்தி அயூப்கான் (பேங்க்) அவர்களின் மகள் சவ்வாளி I.அமிர் அலி மனைவி A. யாஸ்மின்
இன்று சென்னையில் (உள்ள திருவல்லிக்கேணி,7/4 மியான் சாகிப்
முதல் தெருவில்) காலமானார்.(அன்னாரின் ஜனாஸா 27/7/22 நாளை காலை 9 மணிக்கு ராயப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படும்).இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.யா! அல்லாஹ்! அன்னாரின் குற்றம் குறைகள் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி அருள் புரிவாயாக ஆமீன்! 
இவ்வாறு தேசிய திராவிடர் பேரவை மாநில பொருளாளர் S.A.N.K.நஹிப் கான் தனது இரங்கல் செய்தி விடுத்துள்ளார்


 

 திருச்சியில் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்


திருச்சியில் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக சுலக்சனா, தில்லைநகர் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரத்தின வள்ளி ,தீவிர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக கருணாகரன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டராக வசுமதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொன்மலை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அஜிம் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார் .உறையூர் சட்ட ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மணிராஜ் மாநகர நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கார்த்திகா போலீஸ் ஸ்டேஷனில்‌‌‌ ‌ பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார் இதற்கான உத்தரவை திருச்சி மாநகர காவல்துறை கமிஷனர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

திருச்சி மாவட்ட மக்கள் அதிகாரம் ''ஸ்ரீமதி'' மரணத்திற்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்

 தமிழக அரசே!கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வேண்டும்!நீதி கேட்டு போராடியவர்களை விடுதலை செய்! சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாக, அதிகார வர்க்க சதியை முறியடிப்போம்! மாணவர்களை பிராய்லர் கோழியாக மாற்றும் கல்வி தனியார்மயதிற்கு  நிரந்தர தீர்வு ! என்ற கோரிக்கையின் அடிப்படையில் திருச்சியில் இன்று 26.7.22 காலை 11 மணிக்கு மக்கள் அதிகாரம் மற்றும் ஜனநாயக அமைப்புகள் விவசாய சங்கம் இணைந்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.













திருச்சி ரயில் நிலையம் ஜங்ஷன் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  திருச்சி மாவட்ட மக்கள் அதிகாரம் செயற்குழு உறுப்பினர் நிர்மலா தலைமையில் மாநிலத் துணைச் செயலாளர் செழியன் சிறிது நேரம் பேசினர்.

 தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னத்துரை, மக்கள் உரிமை கூட்டணி மாவட்டத் தலைவர் காசிம்,ஜோசப், தமிழ் தேச மக்கள் முன்னணி வழக்கறிஞர் கென்னடி, மக்கள் கலை இலக்கிய கழகம் மாவட்ட செயலாளர் ஜீவா, மகஇக கலைக்குழு பொறுப்பாளர் லதா, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட பொருளாளர் வின்சென்ட் ,புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்டத் தலைவர் கோபி, ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் மாவட்ட செயலாளர்  மணலி மற்றும் 50க்கும் மேற்பட்ட பலர் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பி, பதாகைகளை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும்  போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.



நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 முதலமைச்சரின் அழைப்பு மையத்தில் (CM Call Centre)  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை, சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள முதலமைச்சரின் அழைப்பு மையத்தில் (CM Call Centre)  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளை ஏற்று அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.




நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கானதொடர் ஜோதி

இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ துவங்கி வைத்தார்

 தமிழக முதல்வர் தலைமையில் சென்னையில் மிக பிரமாண்டமாக  நடக்கவிருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடர் ஜோதி ஓட்டத்தின் தொடக்க விழா  திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பங்கேற்று தொடர் ஜோதி ஓட்டத்தினைதிருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் துவங்கி வைத்தார்





இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், மாநகர மேயர் மு. அன்பழகன், காவல்துறை ஆணையர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன்,செ.ஸ்டாலின் குமார், மாநகர மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா மற்றும் மாவட்ட விளையாட்டு துறை காவல்துறை  அதிகாரிகள், விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

அமர் சேவா சங்கத்தின் 40வது ஆண்டு விழா - சேவையை பாராட்டி கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வாழ்த்து

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தொகுதியிலுள்ள ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் நிர்வாக அலுவலக கட்டிடம் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமது சாகிப் நினைவாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மேனாள் உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் முயற்சியில் கட்டிக் கொடுக்கப்பட்டு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது, தலைவர் பேராசிரியர் அவர்கள் தனது பங்களிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கியுள்ளார்.



அமர் சேவா சங்கத்தின் 40வது ஆண்டு விழாவில் அதன் நிறுவன தலைவர் எஸ்.ராமகிருஸ்ணன், கவுரவ செயலாளர் எஸ்.சங்கர ராமன் ஆகியோரின் தன்னலமற்ற சேவையை பாராட்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் சால்வை அணிவித்து கவுரவித்து வாழ்த்துப் பெற்றார்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி


M.M.D.A.COLONY,ARUMBAKKAM,CHENNAI


மாணவியர்க்கு தொல்லை! தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, குருநானக் கல்லூரி பொன் விழாவில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாப் பேருரை யாற்றினார்.அப்போது,
மு.க.ஸ்டாலின்

மாணவியர்க்கு பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தொல்லை தரும் எத்தகைய இழி செயல் நடந்தாலும் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது,உறுதியான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கப்படும் என்று விழாவில் பேசினார்





M.M.D.A.COLONY,ARUMBAKKAM,CHENNAI