கருணை அடிப்படையில்
23 பேருக்கு பணி நியமன ஆணை
கே.என்.நேரு வழங்கினார்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் மற்றும் பதவி உயர்வு ஆணைகளை நகராட்சி நிர்வகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் மற்றும் பதவி உயர்வு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி 27.08.2022 மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநகராட்சி மேயர்மு.அன்பழகன், ஆணையர் மரு. இரா. வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை மற்றும் பதவி உயர்வு ஆணைகளை வழங்கி பேசியதாவது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து பணியிடையில் மரணமடைந்துள்ள பணியாளர்களின் வாரிசுகள் 5 நபர்களுக்கு இளநிலை உதவியாளர்களாகவும், 1 ஓட்டுனர், 03 அலுவலக உதவியாளர் மற்றும் 14 தூய்மை பணியாளர்களாகவும் என மொத்தம் 23 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும் உதவியாளர் நிலையில் இருந்து 4 பணியாளர்களுக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு ஆணையும் வழங்கப்பட்டது இவ்வாறு.பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், செயற்பொறியாளர்கள் ஜி.குமரேசன், கே.பாலசுப்ரமணியன்(பொ), மண்டலத்தலைவர்கள் , மு. மதிவாணன், த.துர்காதேவி,விஜயலட்சுமிகண்ணான், பி.ஜெயநிர்மலா, நியமனக்குழு உறுப்பினர் கொ.ச.நாகராஜன் மற்றும் உதவி ஆணையர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி